ஒன்று எங்கள் ஜாதியே.....ஒன்று எங்கள் நீதியே.... நம்மால் முடியாதது....யாராலும் முடியாது.. யாராலும் முடியாதது....நம்மால் முடியும்
Wednesday, September 22, 2010
ப.சிதம்பரம் இப்படிச் சொல்லலாமா?
ஒரு வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
அந்த வழக்கிற்கான தீர்ப்பு அளிக்கப்படும் நாள் வருகிறது.
நாடே அந்த வழக்குத் தீர்ப்பு என்னவாகும் என அறிய காத்துக் கொண்டிருக்கிறது.
தீர்ப்பு எத்தகையது ஆனாலும்..சட்டம் ,ஒழுங்கு காக்கப்பட வேண்டும் என ஆயிரக் கணக்கில் ஆங்காங்கே காவல்துறையினர் குவிக்கப் பட்டுள்ளனர்.
இந்நிலையில்..தீர்ப்பு எத்தைகையது ஆனாலும்..நீதிக்கு தலை வணங்கி அமைதி காக்க வேண்டும்..என அரசியல் தலைவர்கள் மக்களுக்கு வேண்டுகோள் விடுப்பதில்..எந்த தவறும் இருக்க முடியாது.
ஆனால்..நாட்டின் மிக முக்கியத் துறையின் அமைச்சர்..விடுத்துள்ள அறிக்கை சற்றி வினோதமாகவே உள்ளது..
அலகாபாத் உயர்நீதிமன்ற தீர்ப்பு வரவுள்ளது.இது இறுதி தீர்ப்பல்ல..பாதிக்கப்பட்டவர்கள் மீண்டும் முறையீட்டிற்கு செல்லலாம்..அதனால் அமைதி காக்க வேண்டும் என்றுள்ளார்.
அவர் கூற்றுபடி உயர்நீதி மன்றம் அளிக்கும் தீர்ப்புக்கு யாராயிருந்தாலும் முக்கியத்துவம் தர வேண்டியதில்லை என்றாகிறது.
இந்த செய்தியை சாதாரண குடிமகன் சொல்லலாம்..
உள்துறை அமைச்சர் சிதம்பரம் சொல்லலாமா?..தெரியவில்லை..
Subscribe to:
Post Comments (Atom)
10 comments:
சிந்திக்க வைக்கும் கேள்வி...
இதையே தான் பிரதமரும் சொன்னார் .எல்லாம் பயம் தான் .தீர்ப்பு என்ன என்று ஓரளவுக்கு நமக்கே தெரியும் .பார்க்கலாம்
இந்துத்துவா மேலே அவ்வளவு நம்பிக்கையா இல்லை பயமா? இந்தியாவில் உண்மை செத்து பல காலம் ஆகி விட்டது. உண்மையைச் சொல்லும் துணிவு வந்தால் ஆச்சரியந்தான்.
எப்படியாவது பிரச்சனை வராமல் தடுப்பதற்காக , அல்லது பிரச்னையை தள்ளிப்போடுவத்தர்க்காக சொல்லி இருக்கலாம்
ஒரு முறையீடுக்கே இத்தனை வருஷம்.. இன்னும் மேல் முறையீடு போனா எத்தனை வருஷமே.. அனேகமாய் சிதம்பரத்தின் மண்டையை காய வைக்கப்போகிறது இந்த தீர்ப்பு.. இந்துக்களுக்கு எதிராய் இருந்தால் பீஜேபி ஆளும் மாநிலங்களில் பிரச்சனை வெடிக்கும், முஸ்லீம்களுக்கு எதிராய் இருந்தால் காஷ்மீர் மேலும் வெடிக்கும்..
இந்துத்துவாவுக்கு ஆதராவாகவே வரும் என்று எதிர்ப்பார்க்கிறேன்.. காரணம் மேலுள்ள குடுமிகள்..
நல்லவனா வேஷம் போட்டு மக்கள் ஓட்டும் வாங்கனும்,
கொள்ளையடிச்சு புள்ளைக்கும் "சேர்"க்கனும். இரட்டை வேஷம் பேடுபவன் குழம்ப மாட்டான்,
அடுத்தவர்களைக் குழப்புவான். அதைத்தான் செய்கிறார்கள் ஆட்சியிலிருப்பவர்கள்.
மசூதி இருக்கும் இடத்தின் பெயர் என்வென்று உங்களுக்கு தெரியுமா. பாபர் கட்டும் போதும் அந்த இடத்திற்கு "ராமாவின் கோட்டை". இந்த இடத்தில் கட்டப்பட்டது மசூதியாக இருக்கலாம். ஆனால் முன்பு இருந்தது கோவில் ராமர் கோவில்.
இந்துக்களுக்கு சாதகமாக தீர்ப்பு வரவில்லையென்றால் அங்கு தவறு நிகழ்ந்திருக்கிறது என்று அர்த்தம். வரலாறு தெரியாதவர்கள் தயவு செய்து அமைதி காக்கவும்.
ராமஜெயம்.
//ஜெகதீஸ்வரன். said...
மசூதி இருக்கும் இடத்தின் பெயர் என்வென்று உங்களுக்கு தெரியுமா. பாபர் கட்டும் போதும் அந்த இடத்திற்கு "ராமாவின் கோட்டை". இந்த இடத்தில் கட்டப்பட்டது மசூதியாக இருக்கலாம். ஆனால் முன்பு இருந்தது கோவில் ராமர் கோவில்.
இந்துக்களுக்கு சாதகமாக தீர்ப்பு வரவில்லையென்றால் அங்கு தவறு நிகழ்ந்திருக்கிறது என்று அர்த்தம். வரலாறு தெரியாதவர்கள் தயவு செய்து அமைதி காக்கவும்.
ராமஜெயம்.//
உங்களுக்கு வரலாறு தெரிந்திருப்பது குறித்து மகிழ்ச்சி..
ஆனால் இடுகை அதைப் பற்றியதல்ல என்பது தெரியவில்லையே என நினைக்கையில் சற்று வருத்தமே
அவர் அப்படித்தான் பேசுவார்:)
வருகை புரிந்த அனைவருக்கும் நன்றி
Post a Comment