ஒன்று எங்கள் ஜாதியே.....ஒன்று எங்கள் நீதியே.... நம்மால் முடியாதது....யாராலும் முடியாது.. யாராலும் முடியாதது....நம்மால் முடியும்
Saturday, September 4, 2010
இன்னொரு உமாசங்கர்..
இன்று ஆசிரியர் தினம்..
ஒவ்வொருவருவர் வளர்ச்சிக்கும் ஏணியாய் இருந்து..நல்லதொரு சமுதாயம் வளர உறுதுணையாய் இருக்கும் அனைத்து ஆசிரிய பெருமக்களுக்கும் நன்றியைத் தெரிவிப்போம்.
இந்த நாளில்.. கேரளாவில் இடுக்கி அருகே உள்ள நியூ மேன் கல்லூரியைச் சேர்ந்த மலையாளத்துறை பேராசிரியர் ஜோசப் மத உணர்ச்சியை தூண்டும் விடமாக தேர்வில் கேள்வியைக் கேட்டு, மத உணர்வை களங்கப் படுத்தியதாக கை வெட்டப்பட்டவர்..கல்லூரி நிர்வாகத்தால் டிஸ்மிஸ் செய்யப்பட்டதாக செய்தி வந்துள்ளது.
ஜோசப்..செய்தது..சரியா..தவறா ..என்ற சர்ச்சைக்கு நாம் போக வேண்டாம்.
அவர் அப்படி சிலபஸ்ஸில் இல்லாக் கேள்வியைக் கேட்டிருந்தால்..அதற்கு மாணவர்கள் விடை அளித்திருக்க வேண்டாம்..நடைமுறையில்..பல தேர்வுகளில் அப்படி நடந்து..அதற்கான போனஸ் மதிப்பெண்களை மாணவர்கள் பெற்றுள்ளனர்.
ஆனால்..அவர் நோக்கம்..மத உணர்வைத் தூண்டி விடுவதுதான் ..என்றால்..பணிநீக்கம் என்பது அதிக பட்சத் தண்டனை.
எற்கனவே..இதற்காக ஓரு கும்பல் அவருடைய கையை வெட்டி உள்ளது.
கேள்வித் தாள் தயாரிப்பில் ஜோசப் குற்றம் செய்தது நிரூபிக்கப் பட்டுள்ளது.எனவே டிஸ்மிஸ் செய்யப்பட்டுள்ளார்' என கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
தான் ஏதும் தவறிழைக்கவில்லை என்றும்..அதற்கான விளக்கத்தை நிர்வாகத்திடம் அளித்துள்ளதாகவும்..வேலை நீக்கம் தனக்கு அதிர்ச்சி அளித்துள்ளதாகவும் ஜோசப்கூறியுள்ளார்.
ஆசிரியர் தினத்தன்று செய்தித்தாளில் இப்படி ஒரு செய்தி..
நாம் சொல்வதெல்லாம்..'எழுத்தறிவித்தவன் இறைவனாகும்' என்பதை போதிக்கும் ஆசிரியர்கள் அதன்படி தாங்கள் நடந்துக் கொள்ள வேண்டும்.
கழைக்கூத்தாடி..கம்பி மீது பேலன்ஸ் செய்து நடப்பது போல ஆசிரியர் தொழில் இன்றாகிவிட்டது..
இந்நிலையில்.. பெற்றோரும்...எடுத்தற்கெல்லாம் ஆசிரியர் மீது குறை சொல்லாமால்...'தன் குற்றம் காண்பீர்களானால்...'..நல்ல மாணவன் உருவாக்கும் பணியில் நம் பங்கும் இருக்கும்.
உமாசங்கருக்கு குரல் கொடுத்த பதிவர்கள்..ஒரு குற்றத்திற்கு இரண்டு தண்டனை வழங்கப்பட்டுள்ள ஜோசப் பிற்கு குரல் கொடுப்பார்களா?
Subscribe to:
Post Comments (Atom)
4 comments:
இது கோர்ட்ல ஜெயிச்சிட்டு வரும்:)
தவறோ சரியோ ஆசிரியர் செய்தது , ஆனால் வன்முறை அதற்க்கு தீர்வாகாது
வருகைக்கு நன்றி Bala
வருகைக்கு நன்றி dr suneel krishnan
Post a Comment