ஒன்று எங்கள் ஜாதியே.....ஒன்று எங்கள் நீதியே.... நம்மால் முடியாதது....யாராலும் முடியாது.. யாராலும் முடியாதது....நம்மால் முடியும்
Monday, September 6, 2010
'A Bunch of Jokers'
மக்களுக்கு இலவச கோதுமை வழங்குவது குறித்து சுப்ரீம் கோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது.அரசின் கொள்கை வடிவமைத்தலில் நீதிமன்றங்கள் தலையிடக் கூடாது என்பது என் கருத்து....இது நமது பிரதமர் பத்திரிகையாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளது.
உச்ச நீதி மன்றம்..அரசு கிடங்குகளில் வீணாகக் கெட்டுப் போகும் தானியங்களை இலவசமாக ஏழைகளுக்குக் கொடுக்கலாம்..என்று சொன்னபோது..சரத்பவார்..இலவசமாக கொடுப்பது பற்றி உச்ச நீதிமன்ற யோசனையை..ஏற்கமுடியாது எனக்கூறியதும்...நீதிபதிகள் இது யோசனை அல்ல உத்தரவு என்று சொன்னார்கள்.
அதற்கான பிரதமரின் பதில்தான் மேலே சொல்லப்பட்டது..
சரி..விஷயத்திற்கு வருவோம்...
கடந்த 1997 முதல் 2007 வரை 1.83 லட்சம் டன் கோதுமை,6.33லட்சம் டன் அரிசி,2.20 லட்சம் டன் நெல்,111 லட்சம் டன் மக்காச்சோளம் வீணாகி உள்ளன.
ஆண்டுக்கு சரியான பராமரிப்பு இல்லாமல் 50000 கோடி ரூபாய் மதிப்பிற்கான உணவு தானியங்கள் வீணாகின்றன.
தேசிய உணவு பாதுகாப்பு சட்டம் என்ற ஆயுதம் மிக முக்கியமானது.'மக்களுக்கு பலனில்லா சட்டம் என்ன சட்டம் ' என்று கேட்கிறது நாட்டின் உச்ச நீதிமன்றம்.
பொருள் வீணாய் போனாலும்..பரவாயில்லை..கொள்கை முக்கியம் என்கிறார் பிரதமர்..ஆனால் அவரே நாட்டில் 37 விழுக்காடு வறுமை கோட்டின் கீழ் உள்ள ஏழைகள் என்கிறார்.
சரி..அவர்களுக்குக் கொடுக்க வேண்டாம்..பள்ளிக் குழந்தைகள் உணவு திட்டத்திற்குக் கொடுக்கலாம்...முதியோர் இல்லங்களுக்குக் கொடுக்கலாம்..நாட்டில் இன்று இல்லாத ஆதரவற்றோர் இல்லங்களா இல்லை?
சரத் பவார்..இலவசமாய் கொடுக்க முடியாது என்றார்..அவர் என்ன சொல்வது நான் சொல்கிறேன் என்கிறார் பிரதமர்.
ஒரு பழைய திரைப்படத்தில்..மருமகள்..பிச்சைக்காரர்க்கு போட ஏதுமில்லை என்பார்...பிச்சைக்காரர் கிளம்புவார்..உடன் மாமியார்..அவரைக் கூப்பிடுவார்.பிச்சைக் கிடைக்கும் என அவர் வருவார்.
பின் மாமியார்..அவ என்ன சொல்றது நான் சொல்றேன்..பிச்சை கிடையாது போ என்பார்.
இப்படி ஒரு நகைச்சுவைக் காட்சி.
கிரிக்கெட் வீரர் மொகீந்தர் அமர்நாத் ஒரு சமயம்..தேர்வுக்குழுவினரை ,'A Bunch of Jokers' என்று சொன்னது இந்த நேரத்தில் ஞாபகம் வந்துத் தொலைக்கிறது.
Labels:
நிகழ்வு
Subscribe to:
Post Comments (Atom)
8 comments:
//பின் மாமியார்..அவ என்ன சொல்றது நான் சொல்றேன்..பிச்சை கிடையாது போ என்பார்.//
:)
:(
அதற்குச் சொன்ன விளக்கம் மகா கேவலம். உணவுப் பொருளைப் பாதுகாக்க கிடங்கு இல்லை. கட்டுநாயகா விமான தளம் கட்டித்தர ரொம்ப அவசியம். பத்திகிட்டு வருது:((
வருகைக்கு நன்றி கோவி
//வானம்பாடிகள் said...
அதற்குச் சொன்ன விளக்கம் மகா கேவலம். உணவுப் பொருளைப் பாதுகாக்க கிடங்கு இல்லை. கட்டுநாயகா விமான தளம் கட்டித்தர ரொம்ப அவசியம். பத்திகிட்டு வருது:(( //
வருகைக்கு நன்றி Bala
உச்ச நீதி மன்றம்..அரசு கிடங்குகளில் வீணாகக் கெட்டுப் போகும் தானியங்களை இலவசமாக ஏழைகளுக்குக் கொடுக்கலாம்..என்று சொன்னபோது..சரத்பவார்..இலவசமாக கொடுப்பது பற்றி உச்ச நீதிமன்ற யோசனையை..ஏற்கமுடியாது எனக்கூறியதும்...நீதிபதிகள் இது யோசனை அல்ல உத்தரவு என்று சொன்னார்கள்...........சரி சரி....ப்கிர்விற்கு நன்றி சார்..
:((
வருகைக்கு நன்றி நித்திலம்-சிப்பிக்குள் முத்து
//வித்யா said...
:(( //
நன்றி வித்யா
Post a Comment