சமுதாய எழுச்சிக்காகவும் அரசியல் மறுமலர்ச்சிக்காகவும் தங்களை
ஒப்படைத்துக் கொண்ட தோழர்கள், உடன்பிறப்புகள்,
'கூடா நட்பு கேடாய் முடியும்!' என்ற பொன்மொழியை மறந்துவிடாமல்
பயணம் நடத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் " .இது கலைஞரின் பிறந்த நாள் செய்தி உடன் பிறப்புகளுக்கு .
இந்நிலையில் இன்று திருவாரூர் வாக்காளப் பெருமக்களுக்கு நன்றி அறிவிப்பு கூட்டத்தில் பேசிய கலைஞர்..கனிமொழி பற்றி பேசுகையில்..
திகார் ஜெயிலில் இன்று இருக்கிறார்..கலைஞர் டீ.வி., யில் பங்குதாரராய் இருந்த ஒரே காரணத்தால்..
இது மத்திய அரசு உத்தரவாலோ..அல்லது அவர்கள் அலட்சியத்தாலோ..அல்லது வேறு ஏதோ காரணத்தாலோ நடந்துள்ளது என்றுள்ளார்..
இதிலிருந்து கூடா நட்பு என யாரச் சொல்லியிருப்பார் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி.
டிஸ்கி-
கொடுங்காலைக் கைவிடுவார் கேண்மை அடுங்காலை
உள்ளினும் உள்ளஞ் சுடும்
(ஒருவர் கொலைக்கு ஆளாகும்போது கூட, தனக்குக் கேடு வந்த நேரம் கை விட்டு ஒதுங்கி ஓடிவிட்ட நண்பர்களை நினைத்து விட்டால் அந்த நினைப்பு அவரது நெஞ்சத்தைச் சுட்டுப் பொசுக்கும்)
2 comments:
கொள்ளைக்குப் போனாலும் கூட்டு ஆகாதுன்னு ஒரு பழமொழி இருக்கே சார். அத எப்ப சொல்லுவாராம்:))
//இதிலிருந்து கூடா நட்பு என யாரச் சொல்லியிருப்பார் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி//யாரைச் சொன்னார் என்பது எங்களுக்கு புரியவில்லை. காங்கிரசுடன் கூட்டணியையா? இல்லை மருத்துவருடன் வைத்துக்கொண்டது பற்றியா?
இல்லை மகள் கனிமொழியுடன் நட்பு வைத்திருந்தவர்களை பற்றியா?
Post a Comment