சுந்தன் எனும் யக்ஷனுடைய மனைவி தாடகையும், அவன் மகன் மாரீசனும் ஆவர்.
தாடகையும் மாரீசனும் இந்த தேசத்தை நாசம் செய்து கோர வனமாக்கிவிட்டார்கள்.
அந்த தாடகைக்கு பயந்து அந்த வனத்திற்கு யாரும் வருவதில்லை.தாடகை ஆயிரம் யானை பலம் கொண்டவள்.அவளுடைய உபத்திரவத்தைப் போக்கவே உன்னை அழைத்து வந்தேன்.ரிஷிகளை தொந்தரவு செய்யும் இந்த அரக்கி உன்னால் கொல்லப்படுவாள்' என்பதில் சந்தேகம் இல்லை என விஸ்வாமித்திரர் ராமனிடம் கூறினார்.
இது புராணத்தில் சொல்லப்பட்டுள்ளது.
கலைஞர் நேற்று ஒரு திருமண நிகழ்ச்சியில் பேசுகையில்..'புராணத்தில், ராமாயணத்தில் ராமன்14 ஆண்டுகாலம் ஆட்சியிலே இல்லை.அவன் ஆட்சியிலே இல்லாத காலத்தில்தான் அவன் தாடகைக்கு புத்தி கற்பித்தான் என எழுதியுள்ளார்கள்.ஆகவே ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும், தவறுகளை சுட்டிக்காட்டவும்,நாட்டுக்கு வருகின்ற கேடுபாடுகளைக் களையவும் தடுத்து நிறுத்தவும் நாம் முயலவேண்டும் என்றுள்ளார்..
நம் சந்தேகங்கள்..
1) ஜெ தாடகை என்னும் அரக்கியா?
2) ஆயிரம் யானை பலம் கொண்டவரா? ஜெ
3)கலைஞர் ராமனா
4) அதனால் தான் தான் பொறியாளர் இல்லை என்பதால்...சேது பாலம் கட்டியதாக புராணத்தில் சொல்லப்படும் ராமன் ஒரு பொறியாளரா? என அன்று கலைஞர் கேட்டிருப்பாரோ?
5)இங்கு தாடகையை அறிமுகப் படுத்தியவர் யார்?
6)மீண்டும் ஆட்சிக்கு வர இவர்களுக்கும் 14 ஆண்டுகள் ஆகும் என்கிறாரா?
3 comments:
அவர் ராமன் தான சார் தெரியாதா.....சந்தேகம் இருந்தா அவர்
மனைவி கிட்டயோ இல்ல துணைவி கிட்டயோ கேட்டுப் பாருங்க..
இப்படி எல்லாம் பேசுவதுதான் அரசியல் நாகரீகம் போல டி வி ஆர்.
மேலும் வாசிக்க....
Do Visit
http://www.verysadhu.blogspot.com/
Post a Comment