Tuesday, September 11, 2012

மெகா சீரியல்களும்..பதிவர்களும்..




மெகா சீரியல்கள் ஒரே மாதிரி..பெண்களை அழ வைக்க வேண்டும் என்னும் நோக்கிலேயே எடுக்கப்படுகின்றன என்பது ஒரு பக்கம் இருந்தாலும்..

அந்தத் தொடர்களில்..பெண்ணே பெண்ணுக்கு எதிரியாய் ..கதாநாயகியை கொடுமைப் படுத்துவதும்..அடியாட்களை வைத்து கொலை செய்வதும் போன்ற அநியாயத்திற்கு லாஜிக்குடன் காட்சிகள் அமைந்திருக்கும்.

இதற்கிடையே, தொடர்களை எப்படி வளர்ப்பது எனத் தெரியாமல்...

வேறு ஒரு தொடரில்..யாருக்கேனும் பக்கவாதம் வருவதாய் இருந்தால்..அதேபோன்று அடுத்தவாரம் வேறு ஒரு தொடரில் ஒரு கதாபாத்திரத்திற்கு அந்த நோய் வந்திருக்கும்..

கணவன் மனைவிக்குத் தெரியாமல்..வேறொரு பெண்ணுடன் வாழ்வது போல வந்தால்....வேறு தொடர்களிலும் அதே போன்ற காட்சிகளை எதிர்பார்க்கலாம்..

இதெல்லாம் கற்பனை வளம் குறைவதால் என்று கூற முடியாது..சீரியலை சேனல்கள் வளர்க்கச் சொன்னால் ..கதாசிரியர்தான் என்ன செய்வார்..இயக்குநர்தான் என்ன செய்வார்..தயாரிப்பாளர்தான் என்ன செய்வார்.நடிகர்களும் மீட்டர் விழுந்தால் போதும் என்பவர்கள்..

அது போகட்டும்..பதிவர்களுக்கும்..இதற்கும் என்ன சம்பந்தம் என்கிறீர்களா..?

இங்கும் கிட்டத்தட்ட அதுதான் நடைபெறுகிறது..

ஒரு பதிவரின்..பதிவு அதிக கமெண்டுகளையும், ஓட்டுகளையும், வருவோர் எண்ணிக்கையையும் அதிகரித்தால்..

அந்த பதிவை முன்மாதிரியாகக் கொண்டே..பல பதிவர்களின் பதிவுகள்...

உதாரணத்திற்கு..பதிவர் சந்திப்பு பற்றிய அநேக பதிவுகள்..

பிறகு....

இன்னும் சொல்லுவேன்..ஆனால்..

நான் யாரைப்பார்த்தாவது..பொறாமைக் கொண்டு..இப்பதிவை எழுதியுள்ளதாக சிலர் நினைத்துவிடக் கூடும்.ஆகவே இத்துடன் நிறுத்துக் கொள்கிறேன்.


5 comments:

கோவை நேரம் said...

நல்ல வேளை..நான் பதிவர் சந்திப்பு பற்றி எழுதல...

கோவி.கண்ணன் said...

//நான் யாரைப்பார்த்தாவது..பொறாமைக் கொண்டு..இப்பதிவை எழுதியுள்ளதாக சிலர் நினைத்துவிடக் கூடும்.ஆகவே இத்துடன் நிறுத்துக் கொள்கிறேன். //

பதிவு எழுதுவது கருத்து சுதந்திரம், மற்றவர்கள் என்ன சொல்வார்கள் என்று நினைக்கத் தேவை இல்லை

திண்டுக்கல் தனபாலன் said...

நான் எனக்காக தான் பதிவு எழுதுகிறேன் தவிர, மற்றவர்களுக்காக அல்ல... பதிவு எழுதுவது வாழ்வின் சிறு பகுதி... எப்போது பதிவுகளை எழுத வேண்டாம் என்று நினைக்கிறேனோ / முடியவில்லையோ... அப்போது என்னுடைய எந்த ஒரு பதிவையும் delete செய்யக் கூடாது என்ற முடிவோடு தான் எழுதுகிறேன்... ஏன்...? யோசிங்க...

வேற வேலை இருக்குங்க... மற்றபடி நீங்கள் சொல்வதெல்லாம் / நினைப்பதெல்லாம் : இதுவும் கடந்து போகும்...

Easy (EZ) Editorial Calendar said...

எல்லாம் சீரியல் படுத்தும் பாடு!!!!

நன்றி,
மலர்
http://www.ezedcal.com/ta (வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

T.V.ராதாகிருஷ்ணன் said...

அனைவருக்கும் நன்றி