Wednesday, September 12, 2012

அப்பா........(சிறுகதை)






'செல்வம்...நீ அலுவலகத்திற்கு கிளம்பறதுக்கு முன்னால ஐநூறு ரூபாய் கொடுத்துட்டுப்போ...மருத்துவர் கிட்டே போகணும்..இராத்திரி ஆரம்பித்த நெஞ்சுவலி இன்னமும் இருக்கு' என்றார் சுந்தரேசன் மகனிடம்.

'மாதக்கடைசி..பணத்துக்கு நான் எங்கப்பா போவேன்?'சட்டைபையைத் தடவிப்பார்த்துக் கொண்டே சொன்னான் செல்வம்.

நாளைக்கு அவனது திருமணநாள்..திருமணமாகி பத்து ஆண்டுகள் முடிந்திருந்தன.

'புடவை ஒன்று வாங்கிக்கொடுத்து மனைவியை நாளைக்கு இன்ப அதிர்ச்சிக்குள்ளாக்கவேண்டும்'என்று எண்ணி இரண்டாயிரம் ரூபாயை சட்டைப்பையில் பத்திரமாய் வைத்திருந்தான்.

'என்னடா..செல்வம் இப்படிச்சொல்றே..இனிமே நெஞ்சுவலின்னா..தாமதிக்காம உடனே எங்கிட்டே வரணும்னு..மருத்துவர் போன முறையே சொல்லியிருக்காரே..மறந்துட்டியா?'

'மருத்துவருக்கு என்னப்பா..அப்படித்தான் சொல்வார்.இப்ப எல்லாம் தலைவலின்னு போனால் கூட ..எக்ஸ்ரே எடுன்னு..ஸ்கேன் எடுன்னு நம்பகிட்டே இருக்கிற பணத்தையெல்லாம் கறந்துடுவார்..கொஞ்சம்
பெருங்காயத்தூளை வாயில் போட்டு..கொஞ்சம் மோர் குடிங்க சரியாகிவிடும்...'என்று கூறியபடியே அலுவலகம் கிளம்பினான் செல்வம்.

மாலை மணி மூணு இருக்கும்.

அலுவலகத்திற்கு செல்வத்தின் மனைவி தொலைபேசினாள்'அப்பா..மூச்சு பேச்சு இல்லாம கிடக்கிறார்..உடனே வாங்க..'

அவன் வீடு போய் சேர்வதற்குள்..சுந்தரேசன் கதை முடிந்து விட்டது.

இறுதிக் காரியங்கள் எல்லாம் முடிந்ததும்..அப்பாவுடையது என்று சொல்லிக்கொள்ள இருந்த மரப்பெட்டி ஒன்றைத்திறந்தான்.

அதில் சில தேவையில்லாத பழுப்பேறிய காகிதங்கள்..அம்மா போட்டிருந்த சில கண்ணாடி வளையல்கள்..அப்புறம்..அவன் குழந்தையாய் இருந்தபோது போட்டிருந்த சில சட்டைகள்..பிறகு..அது என்ன நீல நிறத்தில் .. சிறு புத்தகம் போல்...

எடுத்தவன் அதிர்ந்தான் ...வீட்டின் அருகாமையில் இருந்த ஒரு வங்கி சேமிப்புக் கணக்குப் புத்தகம்.

சுந்தரேசன்..சிறிது சிறிதாக அறுபதாயிரம் ரூபாய் வரை..தன் மகனை வாரிசுதாரராகப் போட்டு பணம் சேர்த்திருந்ததை அது காட்டியது.

11 comments:

Yaathoramani.blogspot.com said...

பெத்த மனதிற்கும்
பிள்ளை மனதிற்கும் உள்ள வித்தியாசம் இதுதானோ
இறுதி வரிகள் படித்ததும்
மனம் நெகிழ்ந்தது
மனம் கவர்ந்த பதிவு
தொடர வாழ்த்துக்கள்

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி ரமணி

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி Easy (EZ) Editorial Calendar

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

நெகிழ்ந்தேன்.

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி நண்டு @நொரண்டு

MARI The Great said...

இறுதி வரிகள்...அதிர்ச்சி... நெகிழ்ச்சி..

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி வரலாற்று சுவடுகள்

Ganapathi DCW said...

This is real story in our Tamil nadu state

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி Ganapathi DCW

திண்டுக்கல் தனபாலன் said...

பல பேருக்கு 'இருக்கும் போது' அருமை தெரிவதில்லை...

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி திண்டுக்கல் தனபாலன்