மன்மோகன் சிங்- இது குறித்து நான் மௌனமாய் இருப்பதற்குக் காரணம்..என் மௌனம் ஆயிரம் பதிலுக்கு சமம் என்பதால் தான்.
சிதம்பரம் - மக்கள் ஐஸ்கிரீம் விலை உயர்ந்தால் மௌனமாய் உள்ளனர்.பிஸ்ஸா விலை உயர்ந்தால் மௌனமாய் ஏற்றுக் கொள்கின்றனர்.டீசல் உயர்ந்தால் ஏன் கத்துகிறார்கள்? என்றே புரியவில்லை.
கலைஞர்- தி.மு.க., இந்த உயர்வை வன்மையாகக் கண்டிக்கிறது.ஆனால் இது விஷயமாக மைய அரசைக் கண்டிக்காது
ஜெயலலிதா- டீசல் விலை உயர்வை நான் முதலிலேயே கண்டித்தேன்.கருணாநிதி இப்போது கண்டிப்பது போல கபட நாடகம் ஆடுகிறார்.
ராமதாஸ்- இந்த விலை உயர்வுக்கு திராவிடக் கட்சிகளே காரணம்.அடுத்தத் தேர்தலில் யாருடனும் கூட்டணியின்றி பா.ம.க., ஆட்சியைப் பிடிக்கும்
விஜய்காந்த்- ஜெ வும் கலைஞரும் தமிழகத்தைக் கெடுத்ததோடு இல்லாமல்..இப்போது பாரதத்தையே கெடுக்க சூழ்ச்சி செய்கிறார்கள்.இதை நான் முறியெடுப்பேன்.திமுக, அதிமுக செயற்குழு, பொதுக்குழு கூட்டத்தை தேமுதிக புறக்கணிக்கும்
அத்வானி - இந்த விலை உயர்வால் பாராளுமன்றத்திற்கு முன்னதாக தேர்தல் வர வாய்ப்பிருக்கு.
சுப்ரமணியசுவாமி- இந்த உயர்வுக்கு காரணம் சோனியாவும் சிதம்பரமும் தான்.அதற்கான ஆதாரங்களைத் திரட்டிவருகிறேன்.கூடிய விரைவில் இவர்கள் மீது வழக்குத் தொடர்வேன்.
வைகோ- கன்யாகுமரியிலிருந்து..தூத்துக்குடி வரை இந்த உயர்வைக் கண்டித்து மதிமுக போராட்டம் நடத்தும்.
கம்யூனிஸ்ட்கள்- இந்த உயர்வை கண்டிக்கிறோம்.முதல்வரை மரியாதை நிமித்தம் சந்திக்க உள்ளோம்.
8 comments:
என்ன சொல்வது இதை..யாராவது ஒருத்தர் நல்லவங்களா இருந்து இத சொன்னா ஒத்துக்கலாம்....எல்லாமே இப்படித்தான்ன.... நிஜமாகவே நகைசுவையாக தான் இருக்கிறது....
நன்றி,
மலர்
http://www.ezedcal.com/ta (வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)
ஹா... ஹா... இப்படித்தான் சொல்வார்கள்...
(மன்மோகன் சிங்..., சுப்ரமணியசுவாமி..., கம்யூனிஸ்ட்கள்...)
வருகைக்கு நன்றி easy
வருகைக்கு நன்றி திண்டுக்கல் தனபாலன்
ஹி ஹி ஹி.. ராமதாஸ் & சுப்ரமணியசுவாமி செம செம! :D
வருகைக்கு நன்றி வரலாற்று சுவடுகள்
super comments and welcome the true lines.
வருகைக்கு நன்றி n.k.senthil nathan mks
Post a Comment