நண்பர் ஒருவருடன் பேசிக் கொண்டிருந்த போது..இன்றைய நிகழ்ச்சிகள் குறித்துச் சொல்கையில்..இந்து மதத்தில் சகிப்புத் தன்மை அதிகம் என்றார்.
அவர் சொன்னது உண்மையா? என யோசித்தேன்..
இந்துக்கள் என்பவர்கள் பற்றி நான் ஆழமாக உள்ளே செல்ல விரும்பவில்லை.ஆனால் பெரும்பாலும் அவர்கள் இந்தியாவில்தான் உள்ளனர்.ஆனால் மற்ற இரு பெரு மதங்கள் உலகளவில் பரவியுள்ளன.ஆகவே எந்த நாட்டில் அவர்களுக்கு அநீதியோ, அச்சமோ ஏற்பட்டால் மற்ற நாட்டில் உள்ள அம்மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து எதிர்ப்பை வெளியிடுகின்றனர்.
ஆனால்...இந்துக்களோ..அப்படியில்லை..
இங்கு என்ன பிரச்னை என்றாலும்..அதற்கு அரசியல், ஜாதி, இனம்,பகுத்தறிவு , என வண்ணம் பூசப்படுகிறது.ஒரே கட்சியைச் சேர்ந்தவர்களும்..ஒவ்வொரு மாநிலத்திற்கு ஒரு நிலைப்பாட்டை எடுக்கின்றனர்.
ஆயிரம் உண்டு இங்கு சாதி..இதில் அந்நியர் வந்து புகல் என்ன நீதி..என்று பாடினாலும்..நம்மை நாமே ஒருவருக்கு ஒருவர்..அந்நியராய் பார்க்க ஆரம்பித்துவிட்டோம்.என்று சொன்னால் அதில் தப்பில்லை.
மேலும்...
மத்திய பிரதேசத்தில்..ராஜபக்சே வருவதைக் கண்டித்து மறியல் செய்யும் வைகோ விற்கு..நம் நாட்டு கட்சியினர் எத்தனை பேர் உடன் சேர்ந்தார்கள்.வாளாய் இருந்தார்கள்..
இதன் பெயர் சகிப்புத் தன்மையா?
இலங்கை தமிழர், தமிழக மீனவர்கள்..என நம் நாட்டினரைக்கூட பிரித்து சொல்பவர்கள் தானே நாம்.
பெயருக்கும், புகழுக்கும் ,பதவிக்கும் ஆசைப்பட்டு..அதை மற்றவன் அடைந்து விடுவானோ என்ற எண்ணம் நம்மில் இருக்கும் வரை நமக்கு விடிவு ஏது?
2 comments:
///////ஒரு சராசரி ஹிந்து இவற்றில் எதையுமே தெரியாமல் இருக்கின்றான்./////
.
// எந்த நாட்டில் அவர்களுக்கு அநீதியோ, அச்சமோ ஏற்பட்டால் மற்ற நாட்டில் உள்ள அம்மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து எதிர்ப்பை வெளியிடுகின்றனர்//
Hinduism is not grouping the people. It gives them a route to be released from the world and gain spiritual success
Post a Comment