Sunday, September 23, 2012

பதிவர்கள் வாழ்க்கை- அறிந்த தகவல்கள்- ஒரு நேர்காணல்




நான் பார்த்த அந்த பதிவர் , மிகவும் வருத்தத்துடன் காணப்பட்டார்.அதுவே அவரை நேர்காணல் எடுக்கத்தூண்டியது.

உங்கள் பெயர்..ஊர் பற்றி சொல்ல முடியுமா? எத்தனை வருஷங்களாக பதிவிடுகிறீர்கள்?

என் பெயர் வேண்டாமே! சொன்னால்..நான் பிரபல பதிவரா..இல்லையா..என பல பதிவுகள் வந்து படிப்பவர்களுக்கு தலைவலியை ஏற்படுத்தும்.நான் கடந்த் சில மாதங்களாக பதிவிடுகிறேன்.சொந்த ஊர் எது எனில் 'யாதும் ஊரே" என்பேன்.நான் ஆணி பிடுங்குவேன்.

எப்படி பதிவுலகில் நுழைந்தீர்..

ஒரு நண்பர் என்னை இழுத்து விட்டு விட்டார்.பழையன பல கழிந்ததால்..புதியன ஆன என்னைப் போன்றோர் ஆர்வமுடன் நுழைந்துள்ளோம்.

ஆணி பிடுங்கி என்கிறீர்கள்..பதிவு இடும் முன் அனுபவம்..

நல்லா மொக்கை போடுவேன்.என் நண்பர்கள் நான் பேசினாலே 'பிளேடு' என்பார்கள்.இந்த் ஒரு தகுதி பதிவராக போதும் என்பதால்..இதுவே என் முன் அனுபவமானது

எப்போ பதிவு போடுவீங்க...என்னிக்கு லீவு

லீவுன்னு கிடையாது.பதிவு போட்டுக் கொண்டே இருப்பேன்.முக்கிய குறிக்கோள்..தமிழ் மணத்தில்..முதல் இருபது பதிவுக்குள் வார வாரம் வரவேண்டும் என்பதுதான்.தவிர்த்து ஏழு பதிவர்களுக்கு தவறாது வாக்களித்து..அதனால் அவர்களையும் என் பதிவிற்கு வாக்களிக்க வைத்து..ஒவ்வொரு பதிவையும் வாசகர் பரிந்துரையில் வரவழைப்பதுதான்.


கரெண்ட் பில்...

அது பற்றி எனக்கென்ன கவலை.ஆஃபீசில் தானே டைப் அடிக்கிறேன்

வாசகர் உங்க வலைப்பூவிற்கு வர ஏதேனும் யுக்தி கையாள்கிறீர்களா/

 ஆம்..பிரபல பதிவர்களைத் திட்டி பதிவிடுவேன்..சினிமா விமரிசனம் செய்வேன்..சில சமயம் படங்களைப் பார்க்காமலேயே!


எதிர்கால திட்டம்..

சில மாதங்கள் பதிவு இட்டுவிட்டு..ஒரு பதிவர் சந்திப்பில் கலந்துக் கொண்டுவிட்டு..பின் ..கூகுள் பிளஸ்சிற்கு தாவி விடுவேன்.

4 comments:

ப.கந்தசாமி said...

நல்ல திட்டங்கள் வைத்திருக்கிறாரே?

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

யார் அந்தப் பதிவர்?

CS. Mohan Kumar said...

பத்தே வரியில் பதிவு என்கிற பெயரில் ஒன்று எழுதுவது ஏன், தினமலர், தினமணியில் வரும் பரபரப்பு செய்திகளை ஹிட்ஸ்க்காக அவசர அவசரமாய் உடனே எடுத்து போடுவது ஏன் போன்ற கேள்விகளும் கேட்டிருக்கலாம் சார் !

வவ்வால் said...

ஹி..ஹி வரிக்கு வரி உள் குத்தா இருக்கே, யாருக்குன்னு சொல்லாமல், எல்லாருக்கும் பொதுவா வேற இருக்கு, மி...எஸ்கேப்!!!

த.ம.2012.