Friday, September 28, 2012

சாப்பாட்டுக்கடை - நெல்லை டீ ஸ்டால்




(நன்றி -மணிஜி)

சைதாபேட்டையில் ஒரு சந்து முனையில் இருக்கிறது நெல்லை டீ ஸ்டால்.. டோக்கன் சிஸ்டம் கிடையாது.. உங்கள் விருப்பப்படி லைட்டாகவோ, ஸ்ட்ராங்காகவோ . மீடியமாகவோ டீ கொடுப்பார்கள்.. நான் அவுன்ஸ் டீதான் குடிப்பேன். டீ மாஸ்டர் ஆரம்ப காலங்களில் லுங்கி கட்டிக்கொண்டிருப்பார்.. இப்போது ஷார்ட்ஸ் போட்டுக்கொண்டிக்கிருக்கிறார். சௌகரியமாக இருக்கிறது என்கிறார்.. என்ன...மூக்கு சிந்தினால் துடைக்கத்தான் கொஞ்சம் கஷ்டம் என்றார் . அவருக்கு சொந்த ஊர் கோயில்பட்டி.. அவருடன் கூடப்பிறந்தவர்கள் 6 பேர்.. அனவரும் டீக்கடைகளில்தான் வேலை செய்கிறார்கள்.. அவர்களும் ஷார்ட்ஸ்தானா என்ற என் நகைச்சுவையை ரசிக்க வில்லை.. 80:20 என்ற விகிதத்தில் டீ த்தூளுடன் புளியங்கொட்டையை கலக்கும் ரகசியத்தையும் என்னிடம் சொன்னார்..கடையின் மைனஸ் என்று பார்த்தால் டீ குடித்தால் காசு கேட்கிறார்கள்.. அதை தவிர வேறு எதுவும் குறிப்பாக இல்லை..

தாம்பரத்தில் இருந்து வருகிறவர்கள் ..சைதை பஸ் நிலையத்தில் இறங்கி போகலாம்.. மின்சார வண்டியிலும் போகலாம்.. பைக்கில் வருபவர்கள்.. கலைஞர் ஆர்ச் தாண்டி இடது புறம் திரும்பி போகலாம்.

10 comments:

வவ்வால் said...

அருமையாக இருக்கிறது,தொடருங்கள்.

த.ம:2012

வவ்வால் said...

ஹி..ஹி அந்த கடையில் குருடாயிலில் சுட்ட போண்டாவும்,பஜ்ஜியும் விஷேஷம், எண்ணையை பிழிந்து எடுக்க எட்டாக கிழித்த தினத்தந்தி தருவது சிறப்பு.

எதிர்களை அழிக்க ஒரு போண்டா வாங்கி தந்தால் போதும்!!!

குட்டிபிசாசு said...

//தாம்பரத்தில் இருந்து வருகிறவர்கள் ..சைதை பஸ் நிலையத்தில் இறங்கி போகலாம்.//

பூந்தமல்லியில் இருந்து வந்தால்...சைதை பஸ் நிலையத்தில் இறங்கத் தேவையில்லையா?

T.V.ராதாகிருஷ்ணன் said...

பூந்தமல்லியில் நெல்லை டீஸ்டால் கிளை உள்ளது.
வருகைக்கு நன்றி குட்டிபிசாசு

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி வவ்வால்

கோவி.கண்ணன் said...

:)

நான் எங்க ஊருக்குச் சென்று வந்தால் கருவாட்டுக் கடை பற்றி எழுத உள்ளேன்.

:)

மணிஜி said...

:-))

வவ்வால் said...

கோவி,

வால்டாக்ஸ் ரோட்டில் நிறைய கறுவாட்டு கடைகள் மொத்த விலையில் விற்கிறார்கள் ,மலிவா கிடைக்கும்,உங்களுக்கு போட்டியா நானும் கறுவாட்டு பதிவு போடுவேன் :-))

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி கோவி.கண்ணன்

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி மணி ஜி.