Saturday, December 15, 2012

அமெரிக்கா சுவர்க்கமும் இல்லை..இந்தியா நரகமும் இல்லை..




அமெரிக்காவில், கனக்டிகட் என்னும் மாநிலத்தில் நியூடவ்ன் என்னும் ஊரில்  27 பேர் பலியாகியுள்ளனர்.. ஒரு 20 வயதுப் பையனால்.. துப்பாக்கியுடன் ஒரு பள்ளிக்குச் சென்ற அவன் அம்மாவையும் (அவர் ஒரு ஆசிரியை), மற்றும் அந்தப்பள்ளியில் இருந்த சிறுவர் சிறுமியர் (மாணவ மாணவியரை) 20 பேர் மற்றும் 8 பேர் (சக ஆசிரியை போன்றவர்களை) சுட்டு கொன்று இருக்கிறான்!

இது செய்தி...

இறந்தவர்களில் 6முதல் 10 வயதுவரை உள்ள குழந்தைகள் 20 பேர்..

கடந்த சில தினங்களுக்கு முன்தான்..அமெரிக்காவில் ஒரு மாலில் 3 பேர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.

பள்ளி துப்பாக்கிச் சூட்டில் சுட்டவன் 20 வயதே நிரம்பியவன்.ஏன் இப்படி..இங்குதான் அப்படி நடக்கிறதா...அதற்கான காரணம் என்ன...

துப்பாக்கி வைத்திருப்பவர் எண்ணிக்கை இங்கு அதிகம்...லைசன்ஸ் பெற்றுள்ளவர் அதிகம் என்றெல்லாம் சொல்வது..விவாதத்திற்கு வேண்டுமானால் சரியாய் இருக்கும்..

ஆனால்..உண்மையான காரணம்..மனநிலைதான் என்றே தோன்றுகிறது.

குழந்தைகளை..6 வயதிலேயே..பெற்றோர்கள் தங்களிடமிருந்து பிரிக்கின்றனர்.அந்தக் குழந்தைக்கு தனி படுக்கையறை..அவன் அந்த வயதிலேயே..பெற்றோர்களின் பாசத்தைக் கொஞ்சம்..கொஞ்சமாய் இழந்து விடுகிறான்.இது முக்கியமாக அவன் மனதில்..ஒரு வித தாக்கத்தை ஏற்படுத்திவிடுகிறது.நாளாவட்டத்தில்..அவன் ஒரு வெறுமையை உணர்கிறான்.மேலும்..பள்ளி படிப்பை முடித்து..அதாவது..15 வயதிற்கு மேல்..அவன்..தனித்துவப் படுத்தப்படுகிறான்.

சுருங்கச் சொன்னால்...6 வயதிற்கு மேல்..பெற்றோர் கவனிப்பு, அன்பு, பாசம் இதெல்லாம் அவனுக்கு முழுதுமாய்க் கிடைப்பதில்லை.இதுதான் முக்கியக் காரணமாய் நான் நினைக்கிறேன்.

ஆனால்...நம் நாட்டில்..பெற்றோர்கள்..குழந்தைகள் திருமணமாகும் வரை..பாசத்தைக் கொட்டி வளர்க்கின்றனர்.(இப்போது மெல்ல மெல்ல..அமெரிக்கக் கலாச்சாரம் நம்மிடமும் பெருகி வருவது..வேதனையைத்தான் தருகிறது)

அமெரிக்கா சுவர்க்கப் பூமியாய் தெரிந்தாலும்..உண்மையில் சொர்க்க பூமி நம் நாடுதான்.இதை அமெரிக்க வாழ் இந்தியர்கள் புரிந்துக் கொண்டுவருகிறார்கள்
.
மாற்றம் ஒன்றே மாறாதது என்பார்கள்..

அமெரிக்க வாழ் இந்தியனின் மன மாற்றங்கள் ..சிறிது..சிறிதாக ஏற்பட்டுக் கொண்டுதான் இருக்கிறது..குறைந்தது..அவர்கள் குழந்தைகம் எதிர்கால நன்மைக்காக.



3 comments:

வேகநரி said...

அமெரிக்கா சுவர்க்கமும் இல்லை
இந்தியா நரகமும் இல்லை
நூறு வீதமான உண்மை
நன்றி.

கோவி.கண்ணன் said...

பெரிய வேறுபாடு இல்லை, அமெரிக்காவில் தனிமனித வெறியால் குழந்தைகள் கொல்லப்படுவது போல் இந்தியாவில் அலட்சியங்களினால் நாள் தோறும் குழந்தைக் கொலைகள் தொடர்காதை தான்.

வருண் said...

இந்தியா சொர்க்கம்! அமெரிக்கா நரகம்! னும்னும் சொல்ல முடியாதுதான்.

ஆயுதங்கள் எளிதில் கிடைப்பதால் இதுபோல் அப்பாவிக் குழந்தைகள் பரிதாபமாக கொலைசெய்யப்படுவது...

அமெரிக்கர்களை உலகமே பார்த்து சிரிக்கும் ஒரு சூழலில்தான் இருக்கு! :(