ஒன்று எங்கள் ஜாதியே.....ஒன்று எங்கள் நீதியே.... நம்மால் முடியாதது....யாராலும் முடியாது.. யாராலும் முடியாதது....நம்மால் முடியும்
Monday, December 3, 2012
'ஹயத்' Hayat (ஈரானியன் மூவி.) விமரிசனம்..
'ஹயத்' Hayat (ஈரானியன் மூவி.) விமரிசனம்..
ஹயத் என்னும் ஈரானியன் படத்தை சமீபத்தில் பார்த்தேன்.
அதை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்..
குழந்தைகள் What is determination and struggle என்பதை அறிய இப்படம் பார்க்க வேண்டியது அவசியம்
ஹயத் என்னும் பத்து..அல்லது பன்னிரெண்டு வயது இருக்கும் பெண்ணிற்கு..மேலே படிக்க எழுத வேண்டிய ஸ்காலர்ஷிப்பிறகான பரீட்சை அன்று காலை.
மின்சாரமும்..கட்..(மின்சாரம் வரும்போது...இயக்குநரின் அருமையான இயக்க டச்..)
காலையில் எழுந்ததுமே..தந்தை நினைவின்றி படுக்கையில்...ஹயத்தின் தாயார் , அவள் செய்ய வேண்டிய காரியங்களைச் சொல்லி விட்டு...தந்தையை மருத்துவ மனைக்கு எடுத்துச் செல்கிறார்.
ஹயத்..வீட்டு மாட்டிற்குத் தீவனம் வைத்து விட்டு..தங்கை பாப்பாவை...தம்பியை பார்த்துக் கொள்ள சொல்லிவிட்டு..வேலைகளை கவனிக்கிறாள்.அடடா..ஒரு வறுமை நிலையில் உள்ள வீட்டு குழந்தைகள் படும் பாட்டை பட இயக்குநர் எவ்வளவு அருமையாக சொல்லியிருக்கிறார்...
பரீட்சைக்கு நேரமாகிறது.தம்பி பள்ளிக்கு செல்கிறான்.ஹயத்..தங்கை பாப்பாவை எடுத்துக் கொண்டு யார் வீட்டிலாவது விட்டு விட்டு பரீட்சைக்கு செல்ல பார்க்கிறாள்.சரிபடவில்லை.
அந்த பெண் குழந்தையை வைத்துக்கொண்டு...பாடங்களையும் மனதில் சொல்லிக் கொண்டு..கவலையுடன் அலைவது..பார்க்கும் போது சோகம் நம்மை தொற்றிக் கொள்கிறது.(valume of milk to calculate maths,physics to bend a lock...இப்படி பாட ஞாபகங்கள்)
அந்தப் பெண்ணின் நடிப்பு.அவளது தம்பி அக்பரின் நடிப்பு..இவற்றை பாராட்டி சொல்லிக் கொண்டே போகலாம்..
அவளால் பரீட்சை எழுத முடிந்ததா..? குழந்தையை எங்கே விட்டுச் சென்றாள்...படத்தை பாருங்களேன்..
Directed by
Gholam Reza Ramezani (as Gholamreza Ramezani)
Writing credits
(in alphabetical order)
Mojtaba Khoshkdaman
Gholam Reza Ramezani
Cast (in alphabetical order)
Mohammad Sa'eed Babakhanlo ... Nabat
Mehrdad Hassani ... Akbar
Ghazaleh Parsafar ... Ghazaleh
Produced by
Mohammed Bagher Ashtiani .... producer
Original Music by
Hamidreza Sadri
Cinematography by
Saed Nikzat
Film Editing by
Saeed Shahsavar
Subscribe to:
Post Comments (Atom)
5 comments:
ஈரானிய படங்கள் நல்ல ரசனைக்குரியவை.
மிகவும் ஆவலை தூண்டியது உங்கள் பதிவு.
Canada Tamil News
அப்படியே "Barren", "Offside", "the day when i become a women" போன்ற படங்களையும் பாருங்கள்...
இரானியப் படங்களுக்கே உண்டான மெல்லிய தனிமனித சோகம், சமூகச் சீண்டல்கள், அரசியல் குறைபாடுகள் போன்றவற்றை உணர்வுப் பூர்வமாக வடித்திருப்பார்கள். "Offside" விறுவிறுப்புக்கு குறைவில்லாத படம்.
அப்படியே "Barren", "Offside", "the day when i become a women" போன்ற படங்களையும் பாருங்கள்...
இரானியப் படங்களுக்கே உண்டான மெல்லிய தனிமனித சோகம், சமூகச் சீண்டல்கள், அரசியல் குறைபாடுகள் போன்றவற்றை உணர்வுப் பூர்வமாக வடித்திருப்பார்கள். "Offside" விறுவிறுப்புக்கு குறைவில்லாத படம்.
Berrenசில ஆண்டுகளுக்கு முன்னரே பார்த்து விட்டேன்.
வருகைக்கு நன்றி மலரின் நினைவுகள்
வருகைக்கு நன்றி M.Shanmugam
Post a Comment