Showing posts with label செய்திகள்-நிகழ்வு. Show all posts
Showing posts with label செய்திகள்-நிகழ்வு. Show all posts

Sunday, December 4, 2011

பெற்றோர்களே..கொஞ்சம் மாறுங்களேன்..




இன்று தினசரி ஒன்றில் வந்துள்ள செய்தி....என்னை இப்பதிவிட வைத்தது..

அமெரிக்காவில் பிராஜெக்ட் மேலாளராய் வேலை செய்யும் ஒருவருக்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்து, ஒரு வயதில் ஆண் குழந்தை ஒன்றும் உள்ளது.
கணவன்,மனைவி..தங்கள் குழந்தையுடன் நேற்று சென்னை வந்தனர்.

அவர்களை வரவேற்க வந்த இரு வீட்டாரும், குழந்தையை வாங்கி கொஞ்சினர்.பின்னர் மந்தைவெளியில் உள்ள தன் வீட்டிற்குச் செல்ல இஞ்சினீயர் கிளம்பினார்.ஆனால் மனைவியோ தனது வீட்டிற்கே முதலில் போக வேண்டும் என்றார்.இதில் இரு தரப்பிற்கும் தகராறு ஏற்பட்டது.

உடன் பெண்ணின் தந்தை, 'மகளையும், பேரனையும் நான்தான் அழைத்துச் செல்வேன்..நீங்கள் எங்களுடன் வருவதானால் வாருங்கள் அல்லது நீங்கள் மட்டும் உங்கள் வீட்டிற்குச் செல்லுங்கள்' என்று கூறி மகளையும், பேரனையும் காரில் அழைத்துச் சென்றார்.

இதனால் ஆத்திரம் அடைந்த கணவர், விமான நிலைய போலீசிற்குச் சென்று, 'மனைவியும், மகனும் மாயமாகி விட்டனர்.அவர்களை கண்டுபிடித்து தாருங்கள்' எனப் புகார் கொடுத்தார்.போலீஸ் விசாரணையில் பெண்ணின் தந்தையே பெண்ணை அழைத்துச் சென்றது தெரிய வந்தது.

இதை அடுத்து அவர்களை போலீசார் சமாதானப்படுத்தியதோடு, 'இரு வீட்டாரையும் ஈகோவை விட்டு அனுசரித்துச் செல்ல அறிவுறுத்தினர்.மனைவியின் விருப்பப்படி அவருடன் சேலம் சென்று இரு நாட்கள் இருந்துவிட்டு பின்னர் மனைவியை அழைத்துக் கொண்டு உங்கள் வீட்டிற்கு செல்லுங்கள்'என்றனர்.

இச் செய்தி ஒரு செய்தியா என்று சிலர் நினைக்கக் கூடும்..ஆனால் எனக்கு இது முக்கியச் செய்தி ஆகப் பட்டது.

பெண்கள் கணவன் வீட்டிற்குத்தான் முதலிடம் தர வேண்டும் என்று குறுகிய நோக்கம் இருந்த காலம் எல்லாம் போய் விட்டது.திருமணமானதும்..பெண்களின் பிறந்தவீடு உறவு முடிந்துவிட்டது..இனி புகுந்த வீடுதான் என்பதெல்லாம்..பழங்கதை.பிள்ளையைப் பெற்றோர்..தன் மகன் என எண்ணுவதைப்போல..பெண்ணைப் பெற்றோருக்கும்..அப்பெண் அவர்கள் வீட்டுக் குழந்தை..பெற்றோரால் பார்த்துப் பார்த்து வளர்க்கப்பட்டவள்..ஒவ்வொரு வயதிற்கும்..ஒவ்வொரு வித அலங்காரம் பண்ணி குழந்தை வளர்ச்சியை ரசித்தவர்கள்.அவளுக்கு பையனுக்கு இணையாகக் கல்வியறிவை ஊட்டியவர்கள்.எந்த அளவிலும்..பெண்ணைப் பெற்றோர்..பிள்ளையைப் பெற்றொரைவிடக் குறைந்தவர்கள் அல்ல..அதே போல பிள்ளையின் மீது நீங்கள் எவ்வளவு பாசம் வைத்திருக்கிறீர்களோ..அதில் எள்ளளவு பாசமும் குறையாமல் பெண் மீது பாசம் வைத்துள்ளவர்கள் அவர்கள்.

ஆகவே..வயதில் பெரியவர்களான பெற்றோர்கள்..இன்றைய காலகட்டத்தைப் புரிந்து கொண்டு அதற்கேற்றார் போல நடந்து கொள்ளுங்கள்.

நான் மேலே சொன்ன செய்தியில், கணவனும் சரி,பிள்ளையைப் பெற்றோரும் சரி...நீண்ட நாட்களுக்குப் பிறகு வருகிறாய்..முதலில் உன் வீட்டிற்குச் சென்று உன் பெற்றோருடன் சில நாட்கள் இருந்து விட்டு வா..என்று சொல்லியிருந்தால்..அந்தப் பெண்ணும் மகிழ்ந்திருப்பாள்..தனது மாமியார்,மாமனார் மீது நல்ல எண்ணமும் உருவாகி இருக்கும்...திட்டமிட்டப்படி இல்லாமல் விரைவில் தன் பெற்றோர் வீட்டிலிருந்து கிளம்பியிருப்பாள்.

மேலும் பெண்ணின் தந்தையும் சற்று விட்டுக் கொடுத்து தன் பெண்ணிடம்..'நீ அவர்கள் வீட்டில் இரண்டு நாள் இருந்துவிட்டு கணவன், குழந்தையை அழைத்துக் கொண்டு நம் வீட்டிற்கு வந்து சில நாள் தங்கலாம்' என்று அறிவுறுத்தி இருக்கலாம்.

மொத்தத்தில் இப்போதைய தேவை..புரிந்துணர்வும்..விட்டுக் கொடுத்தலுமே...இதை அனைவரும் புரிந்து கொண்டால்..பிரச்னை இல்லை.


வயதானவர்கள் தங்கள் பிடிவாதத்தால்...ஒரு அருமையான உறவுகளிடையே கடைசிவரை ஒரு பிளவு ஏற்பட்டு விட்டதை ஏன் உணர மறுக்கிறார்கள்.

கணவனானாலும் சரி..மனைவியானாலும் சரி..அவர்களுக்கான முடிவுகளை அவர்களே எடுத்துக் கொள்ள வேண்டிய வயதை அடைந்து விட்டனர்..அவர்களுக்குள் பேசி முடிவெடுக்கட்டும்.இடையே ..இரு தரப்பு பெற்றோரும் தங்கள் எல்லையை உணர்ந்து..அத்துடன் நிற்க வேண்டும்.

இன்னமும் சென்ற நூற்றாண்டிலேயே இருப்பதில்  கேடுதான் விளையும்.


Friday, March 18, 2011

தேங்காய்..மாங்காய்..பட்டாணி..சுண்டல்(18-3-11)





ஒட்டகம் மணிக்கு 15 கிலோமீட்டர் வீதம் 18 மணிநேரம் தொடர்ந்து பாலவனத்தில் நடந்துச் செல்லுமாம்..பெட்ரோல் விலை ஏறிக்கொண்டே போகும் நிலையில்..வீட்டிற்கு ஒரு ஒட்டகம் வளர்க்கலாம்.



2)ஜூன் மாதம் முதல் 25 காசு நாணயம் செல்லாது என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.ஆனால் நடைமுறையில் இப்போதே யாரும் 25 காசை வாங்குவதில்லை



3)இந்த வார குமுதம் இதழில் 'அரசு' கேள்வி பதிலில் ஒரு வாசகர் 'சிறுகதைகள்' பற்றிய கேள்விக்கு அரசு அளித்துள்ள பதில்..

"இப்படித்தான் எழுத வேண்டும் என்பது ஒருவகை.எப்படியும் எழுதலாம் என்பது இன்னொரு வகை.முதலாவது வகைக்கு எழுத ஆள் கிடைப்பது அரிதாக இருப்பதால் சிறுகதைக்கு இது சுனாமி காலம்"

இந்த பதில் உண்மைதானா..

தமிழில் இன்று எழுத்தாளர்களே இல்லையா..

சிறுகதை எழுத்தாளர்களும்..தமிழ் ஆர்வலர்களும், இலக்கியவாதிகளும் என்ன சொல்கிறார்கள்...தெரியவில்லை



4)நம் நாட்டில் செல்ஃபோன்,மெகாசீரியல் இரண்டும் மனிதர்களின் நேரத்தை வீணடிப்பதுடன்..மூளையையும் மழுங்கச் செய்வதாக ஒரு ஆய்வு அறிக்கை கூறுகிறது.



5)ஜப்பான் மொத்தம் 2456 தீவுகளைக் கொண்டதாம்.மொத்த பரப்பளவு 3லட்சத்து77ஆயிரத்து 923 சதுரகிலோமீட்டராம்.பொருளாதாரத்தில் அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தில் இருக்கிறதாம்.இது பொறுக்காமல் தான் இயற்கை அவ்வப்போது தன் சீற்றத்தைக் காட்டுகிறதோ!!



6)1966ஆம் ஆண்டு சிறந்த நடிகருக்கான விருதை நடிகவேள் எம்.ஆர்.ராதாவிற்கு தமிழக அரசு வழங்க இருந்தது.அவ்விருதை அன்றைய கவர்னர் வழங்க இருந்தார்.மொழி தெரியாத அவர் என் படத்தை பார்த்திருக்க வாய்ப்பில்லை.என் படத்தை பார்க்காதவர் கொடுக்கும் விருதை நான் வாங்கத் தயாராய் இல்லை என்று விட்டாராம் ராதா.



7) ஒரு ஜோக்..

தலைவர் யாருடனோ கூட்டணி வைக்க கேட்கச் சொல்லியிருக்காரே....யாருடனாம்..

உலகக் கோப்பையை வெல்லும் அணி கூட்டணிக்குத் தயாரா என கேட்கச் சொல்லியிருக்காராம்.

2)தலைவர் ஏன்..கொள்கை பரப்புச் செயலாளர் பதவியை கட்சியிலிருந்து எடுத்துவிட்டார்..

கட்சிக்கு என்று எதுவும் கொள்கை இல்லை என்பதை இப்போதுதான் புரிந்துக் கொண்டாராம்

Wednesday, February 23, 2011

உலகின் மிகப் பெரிய ஜோக்

தமிழகத்தில் வரும் சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி தனித்து போட்டியிட்டால் ஆட்சியைப் பிடிக்கும் என மாநில இளைஞர் காங்கிரஸ் தலைவர் யுவராஜா பேசினார்.

÷ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்றத் தொகுதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற, சட்டமன்ற, வட்ட, நகர, கிராம இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டம், ஸ்ரீபெரும்புதூரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

÷கூட்டத்தில் அகில இந்திய பொதுசெயலாளர் பிரிவர்ந்சிங் பேசுகையில், "வரும் பஞ்சாயத்துத் தேர்தலில் இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு அதிக இடங்கள் ஒதுக்கப்பட உள்ளது.

÷இதில் பொதுமக்களின் பிரச்னைகளுக்காக சிறப்பாக செயல்படும் இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும்' என்றார்.

÷மாநில இளைஞர் காங்கிரஸ் தலைவர் யுவராஜா பேசுகையில், "தமிழகத்தில் 63 லட்சம் இளைஞர் காங்கிரஸ் உறுப்பினர்கள் உள்ளனர்.

தமிழக சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி தனித்து போட்டியிட்டால் கூட ஆட்சியை பிடித்து விட முடியும்.

÷காங்கிரஸ் கட்சிக்கு கூட்டணி கட்சிகள் ஒதுக்கப்படும் தொகுதிகளில் மூன்றில் ஒரு பங்கு இளைஞர் காங்கிரஸýக்கு ஒதுக்க கேட்டு வருகிறோம்.

÷அதில் குறிப்பிடத்தக்க தொகுதிகளில் ஸ்ரீபெரும்புதூர் சட்டமன்றத் தொகுதியும் ஒன்று.

காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தில் மின்வெட்டு இருக்காது. வரும் உள்ளாட்சித் தேர்தலில் காங்கிரஸ் கட்சி தனித்து போட்டியிடும்.


அதில் இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு அதிக அளவில் சீட் வழங்கப்படும்' என தெரிவித்தார்.

கூட்டத்துக்கு, இளைஞர் காங்கிரஸ் தலைவர் அருவிபாபு தலைமை தாங்கினார்.

ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்றத் தொகுதி இளைஞர் காங்கிரஸ் பொறுப்பாளர் ஜாகிர் அப்பாஸ் முன்னிலை வகித்தார்.

கூட்டத்தில், சட்டமன்றத் தொகுதி இளைஞர் காங்கிரஸ் தலைவர்கள் தீனத்குமார், சுதாபிரசாத், நரேஷ்குமார், ஜெயசரவணன், துணைத் தலைவர்கள் செல்வராஜ், விஜய்ஆனந்த், ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்றத் தொகுதி துணைத் தலைவர் மகேஷ் உள்ளிட்ட ஏராளமான இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.


(நன்றி தினமணி)


(காங்கிரஸ் தனித்து போட்டியிட்டால் ஆட்சியைப் பிடிக்கும் என்று சொன்ன இளைஞர் காங்கிரஸ் தலைவர் யுவராஜா சொன்ன ஜோக் உலகளவில் முதலிடத்தை பெறும் ஜோக் என்பதில் ஐயமில்லை)