தமிழகத்தில் வரும் சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி தனித்து போட்டியிட்டால் ஆட்சியைப் பிடிக்கும் என மாநில இளைஞர் காங்கிரஸ் தலைவர் யுவராஜா பேசினார்.
÷ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்றத் தொகுதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற, சட்டமன்ற, வட்ட, நகர, கிராம இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டம், ஸ்ரீபெரும்புதூரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
÷கூட்டத்தில் அகில இந்திய பொதுசெயலாளர் பிரிவர்ந்சிங் பேசுகையில், "வரும் பஞ்சாயத்துத் தேர்தலில் இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு அதிக இடங்கள் ஒதுக்கப்பட உள்ளது.
÷இதில் பொதுமக்களின் பிரச்னைகளுக்காக சிறப்பாக செயல்படும் இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும்' என்றார்.
÷மாநில இளைஞர் காங்கிரஸ் தலைவர் யுவராஜா பேசுகையில், "தமிழகத்தில் 63 லட்சம் இளைஞர் காங்கிரஸ் உறுப்பினர்கள் உள்ளனர்.
தமிழக சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி தனித்து போட்டியிட்டால் கூட ஆட்சியை பிடித்து விட முடியும்.
÷காங்கிரஸ் கட்சிக்கு கூட்டணி கட்சிகள் ஒதுக்கப்படும் தொகுதிகளில் மூன்றில் ஒரு பங்கு இளைஞர் காங்கிரஸýக்கு ஒதுக்க கேட்டு வருகிறோம்.
÷அதில் குறிப்பிடத்தக்க தொகுதிகளில் ஸ்ரீபெரும்புதூர் சட்டமன்றத் தொகுதியும் ஒன்று.
காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தில் மின்வெட்டு இருக்காது. வரும் உள்ளாட்சித் தேர்தலில் காங்கிரஸ் கட்சி தனித்து போட்டியிடும்.
அதில் இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு அதிக அளவில் சீட் வழங்கப்படும்' என தெரிவித்தார்.
கூட்டத்துக்கு, இளைஞர் காங்கிரஸ் தலைவர் அருவிபாபு தலைமை தாங்கினார்.
ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்றத் தொகுதி இளைஞர் காங்கிரஸ் பொறுப்பாளர் ஜாகிர் அப்பாஸ் முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில், சட்டமன்றத் தொகுதி இளைஞர் காங்கிரஸ் தலைவர்கள் தீனத்குமார், சுதாபிரசாத், நரேஷ்குமார், ஜெயசரவணன், துணைத் தலைவர்கள் செல்வராஜ், விஜய்ஆனந்த், ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்றத் தொகுதி துணைத் தலைவர் மகேஷ் உள்ளிட்ட ஏராளமான இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
(நன்றி தினமணி)
(காங்கிரஸ் தனித்து போட்டியிட்டால் ஆட்சியைப் பிடிக்கும் என்று சொன்ன இளைஞர் காங்கிரஸ் தலைவர் யுவராஜா சொன்ன ஜோக் உலகளவில் முதலிடத்தை பெறும் ஜோக் என்பதில் ஐயமில்லை)
12 comments:
என்னத்த சொல்ல?
/காங்கிரஸ் தனித்து போட்டியிட்டால் ஆட்சியைப் பிடிக்கும் என்று சொன்ன இளைஞர் காங்கிரஸ் தலைவர் யுவராஜா சொன்ன ஜோக் உலகளவில் முதலிடத்தை பெறும் ஜோக் என்பதில் ஐயமில்லை//
நிச்சயம்...
பீகாரை மறந்துட்டாங்க போல...
பெரிய ஜோக் நிச்சயமா..
எத்த்னை ஜென்மம் எடுத்தாலும் தனித்து முடியாது
வருகைக்கு நன்றி Chitra
வருகைக்கு நன்றி சங்கவி
வருகைக்கு நன்றி வேடந்தாங்கல் - கருன்
வருகைக்கு நன்றி செந்தில்குமார்
எவ்வளவு கஷ்டப்பட்டு யோசிச்சாலும் நமக்கு இந்த மாதிரி ஜோக்ஸ் தோண மாட்டேங்குது சார்...
வருகைக்கு நன்றி Sukumar Swaminathan
பதிவர்கள் சார்பில் ஒரு பாராட்டு விழா நடத்தலாமா என்று யோசிக்கிறேன்
வருகைக்கு நன்றி ஜீவன்சிவம்
Post a Comment