Friday, March 18, 2011

தேங்காய்..மாங்காய்..பட்டாணி..சுண்டல்(18-3-11)

ஒட்டகம் மணிக்கு 15 கிலோமீட்டர் வீதம் 18 மணிநேரம் தொடர்ந்து பாலவனத்தில் நடந்துச் செல்லுமாம்..பெட்ரோல் விலை ஏறிக்கொண்டே போகும் நிலையில்..வீட்டிற்கு ஒரு ஒட்டகம் வளர்க்கலாம்.2)ஜூன் மாதம் முதல் 25 காசு நாணயம் செல்லாது என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.ஆனால் நடைமுறையில் இப்போதே யாரும் 25 காசை வாங்குவதில்லை3)இந்த வார குமுதம் இதழில் 'அரசு' கேள்வி பதிலில் ஒரு வாசகர் 'சிறுகதைகள்' பற்றிய கேள்விக்கு அரசு அளித்துள்ள பதில்..

"இப்படித்தான் எழுத வேண்டும் என்பது ஒருவகை.எப்படியும் எழுதலாம் என்பது இன்னொரு வகை.முதலாவது வகைக்கு எழுத ஆள் கிடைப்பது அரிதாக இருப்பதால் சிறுகதைக்கு இது சுனாமி காலம்"

இந்த பதில் உண்மைதானா..

தமிழில் இன்று எழுத்தாளர்களே இல்லையா..

சிறுகதை எழுத்தாளர்களும்..தமிழ் ஆர்வலர்களும், இலக்கியவாதிகளும் என்ன சொல்கிறார்கள்...தெரியவில்லை4)நம் நாட்டில் செல்ஃபோன்,மெகாசீரியல் இரண்டும் மனிதர்களின் நேரத்தை வீணடிப்பதுடன்..மூளையையும் மழுங்கச் செய்வதாக ஒரு ஆய்வு அறிக்கை கூறுகிறது.5)ஜப்பான் மொத்தம் 2456 தீவுகளைக் கொண்டதாம்.மொத்த பரப்பளவு 3லட்சத்து77ஆயிரத்து 923 சதுரகிலோமீட்டராம்.பொருளாதாரத்தில் அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தில் இருக்கிறதாம்.இது பொறுக்காமல் தான் இயற்கை அவ்வப்போது தன் சீற்றத்தைக் காட்டுகிறதோ!!6)1966ஆம் ஆண்டு சிறந்த நடிகருக்கான விருதை நடிகவேள் எம்.ஆர்.ராதாவிற்கு தமிழக அரசு வழங்க இருந்தது.அவ்விருதை அன்றைய கவர்னர் வழங்க இருந்தார்.மொழி தெரியாத அவர் என் படத்தை பார்த்திருக்க வாய்ப்பில்லை.என் படத்தை பார்க்காதவர் கொடுக்கும் விருதை நான் வாங்கத் தயாராய் இல்லை என்று விட்டாராம் ராதா.7) ஒரு ஜோக்..

தலைவர் யாருடனோ கூட்டணி வைக்க கேட்கச் சொல்லியிருக்காரே....யாருடனாம்..

உலகக் கோப்பையை வெல்லும் அணி கூட்டணிக்குத் தயாரா என கேட்கச் சொல்லியிருக்காராம்.

2)தலைவர் ஏன்..கொள்கை பரப்புச் செயலாளர் பதவியை கட்சியிலிருந்து எடுத்துவிட்டார்..

கட்சிக்கு என்று எதுவும் கொள்கை இல்லை என்பதை இப்போதுதான் புரிந்துக் கொண்டாராம்

13 comments:

goma said...

வீட்டிற்கு ஒரு ஒட்டகம் வளர்க்கலாம்.

கவனிக்க ஒட்டகம் பாலைவனத்தில்தான் பயணிக்கும்
------------------------
இப்போதே யாரும் 25 காசை வாங்குவதில்லை

நாணயம் ரொம்ப கெட்டுப்போச்சு
-------------------

தமிழில் இன்று எழுத்தாளர்களே இல்லையா..
இருக்கிறார்கள் வாசகர்கள்தான் இல்லை
--------------------
செல்ஃபோன்,மெகாசீரியல் இரண்டும் மனிதர்களின் நேரத்தை வீணடிப்பதுடன்..மூளையையும் மழுங்கச் செய்வதாக ஒரு ஆய்வு அறிக்கை
அதோடு சுடோகுவையும் சேர்த்துக் கொள்ளுங்கள்
-------------

இது பொறுக்காமல் தான் இயற்கை அவ்வப்போது தன் சீற்றத்தைக் காட்டுகிறதோ!!
இயற்கை என்ன ,அமெரிக்காவுக்கு மாமனா மச்சானா
---------------


என் படத்தை பார்க்காதவர் கொடுக்கும் விருதை நான் வாங்கத் தயாராய் இல்லை என்று விட்டாராம் ராதா.

இவர்தான் உன்மையான கலைஞர்,நடிகர்...

D.R.Ashok said...

nice titbits

MANO நாஞ்சில் மனோ said...

//ஒட்டகம் மணிக்கு 15 கிலோமீட்டர் வீதம் 18 மணிநேரம் தொடர்ந்து பாலவனத்தில் நடந்துச் செல்லுமாம்..பெட்ரோல் விலை ஏறிக்கொண்டே போகும் நிலையில்..வீட்டிற்கு ஒரு ஒட்டகம் வளர்க்கலாம்.//

ஹே ஹே ஹே ஹே இது நல்ல ஐடியாவா இருக்கே....

MANO நாஞ்சில் மனோ said...

//)1966ஆம் ஆண்டு சிறந்த நடிகருக்கான விருதை நடிகவேள் எம்.ஆர்.ராதாவிற்கு தமிழக அரசு வழங்க இருந்தது.அவ்விருதை அன்றைய கவர்னர் வழங்க இருந்தார்.மொழி தெரியாத அவர் என் படத்தை பார்த்திருக்க வாய்ப்பில்லை.என் படத்தை பார்க்காதவர் கொடுக்கும் விருதை நான் வாங்கத் தயாராய் இல்லை என்று விட்டாராம் ராதா.//

இந்த கட்ஸ் இன்னைக்கு எந்த நடிகனுக்கு இருக்கு சொல்லுங்க...?

MANO நாஞ்சில் மனோ said...

/தலைவர் ஏன்..கொள்கை பரப்புச் செயலாளர் பதவியை கட்சியிலிருந்து எடுத்துவிட்டார்..

கட்சிக்கு என்று எதுவும் கொள்கை இல்லை என்பதை இப்போதுதான் புரிந்துக் கொண்டாராம்////


கி கி கி கி கி கி கி கி கி.......

தமிழ்வாசி - Prakash said...

ஒரு ஒட்டகம் விலைக்கு கிடைக்குமா.. கேட்டு சொல்லுங்கள்.

ஹேமா said...

எம்.ஆர்.ராதாவின் தமிழ்ப்பற்று மனதை நெகிழவைக்கிறது !

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி goma

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி D R Ashok

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி Mano

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி Prakash

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி
ஹேமா

ஜோக்கர் வீரசேகர் said...

அமெரிக்காவிற்கு அடுத்த பெரிய பொருளாதாரமாக உள்ளது சீனா. ஜப்பான் மூன்றாவது பெரிய பொருளாதாரம். சிறிது காலத்தின் முன்னரே சீனா ஜப்பானை முந்தியது. மூன்றாவதாக ஆன பின் சுனாமி தாக்கியது கூட ஒருவகையில் உலகபொருளாதாரத்திற்கு நல்லதென அறிஞ்ஞர்கள் அனுமானிக்கிறார்கள். 2வதாக இருக்கும்போது இவ் அழிவு ஏற்பட்டிருந்தால் உலக் பொருளாதாரமும் பெரிய சரிவை சந்தித்திருக்குமென அனுமானிக்கிறார்கள்.