Sunday, December 4, 2011

பெற்றோர்களே..கொஞ்சம் மாறுங்களேன்..
இன்று தினசரி ஒன்றில் வந்துள்ள செய்தி....என்னை இப்பதிவிட வைத்தது..

அமெரிக்காவில் பிராஜெக்ட் மேலாளராய் வேலை செய்யும் ஒருவருக்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்து, ஒரு வயதில் ஆண் குழந்தை ஒன்றும் உள்ளது.
கணவன்,மனைவி..தங்கள் குழந்தையுடன் நேற்று சென்னை வந்தனர்.

அவர்களை வரவேற்க வந்த இரு வீட்டாரும், குழந்தையை வாங்கி கொஞ்சினர்.பின்னர் மந்தைவெளியில் உள்ள தன் வீட்டிற்குச் செல்ல இஞ்சினீயர் கிளம்பினார்.ஆனால் மனைவியோ தனது வீட்டிற்கே முதலில் போக வேண்டும் என்றார்.இதில் இரு தரப்பிற்கும் தகராறு ஏற்பட்டது.

உடன் பெண்ணின் தந்தை, 'மகளையும், பேரனையும் நான்தான் அழைத்துச் செல்வேன்..நீங்கள் எங்களுடன் வருவதானால் வாருங்கள் அல்லது நீங்கள் மட்டும் உங்கள் வீட்டிற்குச் செல்லுங்கள்' என்று கூறி மகளையும், பேரனையும் காரில் அழைத்துச் சென்றார்.

இதனால் ஆத்திரம் அடைந்த கணவர், விமான நிலைய போலீசிற்குச் சென்று, 'மனைவியும், மகனும் மாயமாகி விட்டனர்.அவர்களை கண்டுபிடித்து தாருங்கள்' எனப் புகார் கொடுத்தார்.போலீஸ் விசாரணையில் பெண்ணின் தந்தையே பெண்ணை அழைத்துச் சென்றது தெரிய வந்தது.

இதை அடுத்து அவர்களை போலீசார் சமாதானப்படுத்தியதோடு, 'இரு வீட்டாரையும் ஈகோவை விட்டு அனுசரித்துச் செல்ல அறிவுறுத்தினர்.மனைவியின் விருப்பப்படி அவருடன் சேலம் சென்று இரு நாட்கள் இருந்துவிட்டு பின்னர் மனைவியை அழைத்துக் கொண்டு உங்கள் வீட்டிற்கு செல்லுங்கள்'என்றனர்.

இச் செய்தி ஒரு செய்தியா என்று சிலர் நினைக்கக் கூடும்..ஆனால் எனக்கு இது முக்கியச் செய்தி ஆகப் பட்டது.

பெண்கள் கணவன் வீட்டிற்குத்தான் முதலிடம் தர வேண்டும் என்று குறுகிய நோக்கம் இருந்த காலம் எல்லாம் போய் விட்டது.திருமணமானதும்..பெண்களின் பிறந்தவீடு உறவு முடிந்துவிட்டது..இனி புகுந்த வீடுதான் என்பதெல்லாம்..பழங்கதை.பிள்ளையைப் பெற்றோர்..தன் மகன் என எண்ணுவதைப்போல..பெண்ணைப் பெற்றோருக்கும்..அப்பெண் அவர்கள் வீட்டுக் குழந்தை..பெற்றோரால் பார்த்துப் பார்த்து வளர்க்கப்பட்டவள்..ஒவ்வொரு வயதிற்கும்..ஒவ்வொரு வித அலங்காரம் பண்ணி குழந்தை வளர்ச்சியை ரசித்தவர்கள்.அவளுக்கு பையனுக்கு இணையாகக் கல்வியறிவை ஊட்டியவர்கள்.எந்த அளவிலும்..பெண்ணைப் பெற்றோர்..பிள்ளையைப் பெற்றொரைவிடக் குறைந்தவர்கள் அல்ல..அதே போல பிள்ளையின் மீது நீங்கள் எவ்வளவு பாசம் வைத்திருக்கிறீர்களோ..அதில் எள்ளளவு பாசமும் குறையாமல் பெண் மீது பாசம் வைத்துள்ளவர்கள் அவர்கள்.

ஆகவே..வயதில் பெரியவர்களான பெற்றோர்கள்..இன்றைய காலகட்டத்தைப் புரிந்து கொண்டு அதற்கேற்றார் போல நடந்து கொள்ளுங்கள்.

நான் மேலே சொன்ன செய்தியில், கணவனும் சரி,பிள்ளையைப் பெற்றோரும் சரி...நீண்ட நாட்களுக்குப் பிறகு வருகிறாய்..முதலில் உன் வீட்டிற்குச் சென்று உன் பெற்றோருடன் சில நாட்கள் இருந்து விட்டு வா..என்று சொல்லியிருந்தால்..அந்தப் பெண்ணும் மகிழ்ந்திருப்பாள்..தனது மாமியார்,மாமனார் மீது நல்ல எண்ணமும் உருவாகி இருக்கும்...திட்டமிட்டப்படி இல்லாமல் விரைவில் தன் பெற்றோர் வீட்டிலிருந்து கிளம்பியிருப்பாள்.

மேலும் பெண்ணின் தந்தையும் சற்று விட்டுக் கொடுத்து தன் பெண்ணிடம்..'நீ அவர்கள் வீட்டில் இரண்டு நாள் இருந்துவிட்டு கணவன், குழந்தையை அழைத்துக் கொண்டு நம் வீட்டிற்கு வந்து சில நாள் தங்கலாம்' என்று அறிவுறுத்தி இருக்கலாம்.

மொத்தத்தில் இப்போதைய தேவை..புரிந்துணர்வும்..விட்டுக் கொடுத்தலுமே...இதை அனைவரும் புரிந்து கொண்டால்..பிரச்னை இல்லை.


வயதானவர்கள் தங்கள் பிடிவாதத்தால்...ஒரு அருமையான உறவுகளிடையே கடைசிவரை ஒரு பிளவு ஏற்பட்டு விட்டதை ஏன் உணர மறுக்கிறார்கள்.

கணவனானாலும் சரி..மனைவியானாலும் சரி..அவர்களுக்கான முடிவுகளை அவர்களே எடுத்துக் கொள்ள வேண்டிய வயதை அடைந்து விட்டனர்..அவர்களுக்குள் பேசி முடிவெடுக்கட்டும்.இடையே ..இரு தரப்பு பெற்றோரும் தங்கள் எல்லையை உணர்ந்து..அத்துடன் நிற்க வேண்டும்.

இன்னமும் சென்ற நூற்றாண்டிலேயே இருப்பதில்  கேடுதான் விளையும்.


21 comments:

ராமலக்ஷ்மி said...

/புரிந்துணர்வும்..விட்டுக் கொடுத்தலுமே.../

சரியாகச் சொன்னீர்கள். அவசியமான பகிர்வு.

Sivamjothi said...

Nice article..

goma said...

இனிமேலும் பையனைப்பெற்றவர்கள்தான் உயர்வு என்ற எண்ணம் எடுபடாது.
பெண்களின் தரமும் மதிப்பும் உயர்ந்து கொண்டிருக்கிறது

தமிழ்வாசி பிரகாஷ் said...

விட்டுக்கொடுத்தல் என்பது இன்றைய காலகட்டத்தில் ரொம்ப முக்கியமான ஒன்று.... திருமணத்தில் மட்டுமல்ல எல்லா விசயங்களிலும்...


வாசிக்க:
நடிகை அஞ்சலி பய(ங்கர) டேட்டா - ரசிகனின் காமெடி கும்மி

திண்டுக்கல் தனபாலன் said...

அருமை... அருமை...
நம்ம தளத்தில்:
"அறிந்ததா? தெரிந்ததா? புரிந்ததா? - பகுதி 1"

revathi said...

Arumaiyaana pathivu..:) romba nalla irukku..:)
Reva

முனைவர்.இரா.குணசீலன் said...

இரு தரப்பு பெற்றோரும் தங்கள் எல்லையை உணர்ந்து..அத்துடன் நிற்க வேண்டும்.

உண்மை.

ஹேமா said...

முன்னமே திட்டமிடாமையும்,புரிதலில்லாமையுமே எல்லாக் குடும்பங்களிலும் பிரச்சனை !

Kanchana Radhakrishnan said...

வருகைக்கு நன்றி ராமலக்ஷ்மி

Kanchana Radhakrishnan said...

வருகைக்கு நன்றி Sivamjothi

Kanchana Radhakrishnan said...

வருகைக்கு நன்றி goma

Kanchana Radhakrishnan said...

வருகைக்கு நன்றி தமிழ்வாசி பிரகாஷ்

Kanchana Radhakrishnan said...

வருகைக்கு நன்றி திண்டுக்கல் தனபாலன்

Kanchana Radhakrishnan said...

வருகைக்கு நன்றி reva

Kanchana Radhakrishnan said...

வருகைக்கு நன்றி முனைவர்.இரா.குணசீலன்

Kanchana Radhakrishnan said...

வருகைக்கு நன்றி ஹேமா

மாதேவி said...

"புரிதலும் விட்டுக்கொடுத்தலும்" இல்லாவிட்டால் பிரச்சனைகள்தான்.

Kanchana Radhakrishnan said...

வருகைக்கு நன்றி மாதேவி

goma said...
This comment has been removed by the author.
goma said...

தம் குழந்தைகள் அமெரிக்காவிலிருந்து வராமல்,இந்தியாவின் எங்கோ ஒரு மூலையிலிருந்து விமானம் மூலம் வரட்டும் எத்தனை பெற்றோர் ஏர்போர்ட்டுக்கு வரவேற்க செல்வார்கள்....

T.V.ராதாகிருஷ்ணன் said...

sorry goma..உங்களின் இந்த கருத்தை நான் ஏற்கவில்லை.
நீங்கள் சொல்வது வேண்டுமானால் 15 ..20 ஆண்டுகளுக்கு முன்பு இருந்திருக்கக் கூடும்.அப்போதும் பெற்றோர்கள்..முதலில் தங்கள் மகன்/மகளைத்தான் முதலில் எதிர்ப்பார்ப்பார்கள்.ஆனால் இன்று தாராளமயமாக்களால் எல்லாம் மாறிவிட்டது.மேலை நாட்டுப் பொருள்கள் எல்லாம் இந்தியாவிலேயே கிடைக்கிறது.அதுவும் அங்கு விட குறைவான விலையில்..ஆகவே பெட்டி பார்க்கும் வழக்கங்கள் போய்விட்டது.
இப்போது பெற்றோர்களைக் கவர்வது எல்லாம் தன் மகன்/மகளுடன் வரும் குட்டிக் குழந்தைகள் தான்.அவற்றின் மீதான பாசம்தான்