Wednesday, August 26, 2009

என்னவாயிற்று மணற்கேணி 2009 போட்டி

ஆகஸ்ட் 15ஆம் நாள் கடைசி தினமாக அறிவிக்கப்பட்ட மணற்கேணி 2009 போட்டி..சிங்கை பதிவர்களும்..தமிழ்வெளியும் சேர்ந்து நடத்த இருக்கும் போட்டி.

போட்டியின் கடைசி நாள் தள்ளிவைக்கப்பட்டிருக்கிறது..ஒரு போட்டியின் தேதி தள்ளி வைக்கப்பட்டால்..தள்ளி வைக்கப் பட்ட தேதியை அறிவிக்க வேண்டும்.ஆனால் இந்நாள்வரை அதை அறிவிக்கவில்லை.அதற்கான காரணம் கீழ்காணும் ஏதேனும் இருக்கும் என தோன்றுகிறது.

1.கருத்தாய்வுப் போட்டி என்றதும்..ஆகா..இதில் கலந்துக் கொண்டால்..நம்மால் வெல்லமுடியாது.இதற்கான இலக்கிய அறிவு நம்மிடம் இல்லை என பலர் எண்ண இடம் கொடுத்துவிட்டது.கோவி இதற்கான விளக்கம் கொடுத்தும்..அது சரிவர சென்றடையவில்லை.

2.உரையாடல் சிறுகதைப் போட்டி முடிவுகள் வேறு..இருபது கதைகள் என்றபோதே நமக்கு கிடைக்கவில்லை..3 பரிசுகள் என்றால் எப்படி கிடைக்கும் என்ற மனப்பான்மை .இதை அறிந்துதான்..நடத்துநர்கள் கலந்துக் கொள்ளும் அனைவருக்கும் சிறப்பு பரிசு உண்டு எனவும் அறிவித்தனர்.(இதை அறிவித்ததும் தான்..நானும்..சிறப்பு பரிசாக ஒரு புத்தகமாவது கிடைக்கும்..என என் படைப்பை அனுப்பி வைத்தேன்)

3.பல பதிவர்கள் அவர்கள் எழுதும் நடைமுறை தமிழ்..இப்போட்டிக்கு ஒத்துவராது என கலந்துக் கொள்ளவில்லை என தோன்றுகிறது.

4.எதிர்ப்பார்த்த அளவிற்கு..கட்டுரைகள் வராததால்..என்ன செய்வது என விழிக்கின்றனர் தேர்வுக் குழுவினர்.

5.இதனிடையே..சிங்கைநாதன் உடல்நிலை வேறு பாதிக்கப்பட்டதால்... சிங்கை பதிவர்கள் முழு ஈடுபாடும் இப்போது அதில் இருக்கிறது..

காரணத்தை தெரிந்துக் கொள்ள ஆசை..நான் மணி கட்டிவிட்டேன்.

சரி.இப்போது..என்னதான் சொல்ல வருகிறீர்கள்..என்கிறீர்களா....சிங்கை செல்லும் அதிர்ஷ்டம் எனக்கில்லை..சிறப்பு பரிசையாவது அனுப்பிவையுங்கள்..என்கிறேன்.

12 comments:

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

அன்பின் டிவிஆர் ஐயா,

1)அண்மையில்(23.08.2009) கூட சிங்கை பதிவர்கள் குழுமத்தின் சார்பில் சிங்கை வாசகர் வட்ட நிகழ்ச்சியில் மணற்கேணி2009 பற்றி பேசியிருக்கிறோம்.

2)சிங்கை நாதன் சம்மந்தமாக பதிவர்கள் பங்காற்றுவதால் போட்டி நடத்துவதில் தொய்வு ஏற்பட்டுவிட்டது என்ற கருத்தை ஏற்றுக்கொள்ள முடியாது. மணற்கேணி2009 நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெறுகின்றன.

3)விரைவில் போட்டிக்கான இறுதி நாள் அறிவிக்கப்படும். பெரும்பாலான பதிவர்களின் வேண்டுகோளுக்கிணங்க நீட்டித்திருக்கிறோம். கட்டுரைகள் நிறைவாக வந்தவண்ணம் இருக்கின்றன.

அனைவரும் பங்கெடுத்தால் மகிழ்வோம்!

பூனைக்கு மணி கட்டிய டிவிஆர் ஐயாவுக்கு நன்றி!

சிங்கை பதிவர் குழுமம்,
தமிழ்வெளி இணைய தளம்,
மணற்கேணி2009.

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கும்..தகவலுக்கும் நன்றி
ஜோதிபாரதி

கோவி.கண்ணன் said...

மணற்கேணியை தூர் வாருகிறோம், கொஞ்சம் பொறுத்தருள்க !
:)

அப்பாவி முரு said...

// கோவி.கண்ணன் said...
மணற்கேணியை தூர் வாருகிறோம், கொஞ்சம் பொறுத்தருள்க !

:)//

இன்னும் நிறைய ஊற்று கண்களுக்காக காத்திருக்கிறோம்...

குழலி / Kuzhali said...

// அப்பாவி முரு said...
// கோவி.கண்ணன் said...
மணற்கேணியை தூர் வாருகிறோம், கொஞ்சம் பொறுத்தருள்க !

:)//

இன்னும் நிறைய ஊற்று கண்களுக்காக காத்திருக்கிறோம்...
//
வழிமொழிகிறேன்

Anonymous said...

உங்க வலைப்பதிவுக்கு அதிக ஹிட்ஸ் வேண்டுமா அப்போ உங்க பதிவுகளை tamil10.com தளத்தில் இணையுங்கள் .பதிவுகளை இணைக்க இங்கே சொடுக்கி தளத்திற்குச் செல்லுங்கள்

T.V.ராதாகிருஷ்ணன் said...

// கோவி.கண்ணன் said...
மணற்கேணியை தூர் வாருகிறோம், கொஞ்சம் பொறுத்தருள்க !
:)//

ஊற்று பெருக்கெடுக்க வாழ்த்துகள்

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி.உங்கள் கருத்துகளை வழிமொழிகிறேன்
அப்பாவி முரு
குழலி

T.V.ராதாகிருஷ்ணன் said...

நன்றி தமிழினி

ஷைலஜா said...

ராதாக்ருஷ்ணன்
உங்கபதிவைப்படிச்சதும்தான் போட்டிநாள் தள்ளிவைக்கப்படிருப்பதை அறிகிறேன் என்னிக்கு கடைசிநாள்? நான் அனுப்பி இருக்கேன் ஏதோ தெரிஞ்சதை எழுதினாலும் நேரம் கிடைச்சா இன்னும் சிறப்பா முயல ஓர் ஆவல்தான்:)

T.V.ராதாகிருஷ்ணன் said...

///ஷைலஜா said...
ராதாக்ருஷ்ணன்
உங்கபதிவைப்படிச்சதும்தான் போட்டிநாள் தள்ளிவைக்கப்படிருப்பதை அறிகிறேன் என்னிக்கு கடைசிநாள்? நான் அனுப்பி இருக்கேன் ஏதோ தெரிஞ்சதை எழுதினாலும் நேரம் கிடைச்சா இன்னும் சிறப்பா முயல ஓர் ஆவல்தான்:)///


தள்ளிவைக்கப்பட்ட தேதி இன்னமும் அறிவிக்கவில்லை.ஆகவே..நீங்கள் முன்னர் அனுப்பிய படைப்பிலேயே..திருத்தங்களும் செய்து..புதியதை ஏற்கச் சொல்லலாம்.வருகைக்கு நன்றி ஷைலஜா

ஷைலஜா said...

//தள்ளிவைக்கப்பட்ட தேதி இன்னமும் அறிவிக்கவில்லை.ஆகவே..நீங்கள் முன்னர் அனுப்பிய படைப்பிலேயே..திருத்தங்களும் செய்து..புதியதை ஏற்கச் சொல்லலாம்.வருகைக்கு நன்றி ஷைலஜா

August 27, 2009 7:29:00 AM PDT ////


thanks for the info Radhakrishnan