Thursday, August 6, 2009

சிவாஜி ஒரு சகாப்தம் - 21

சிவாஜி ஒரு சகாப்தம் - 21
1976ல் வந்த படங்கள்

உனக்காக நான்
கிரஹப்பிரவேசம்
சத்யம்
உத்தமன்
சித்ரா பௌர்ணமி
ரோஜாவின் ராஜா

இதில் கிரஹப்பிரவேசம்,சத்யம்,ஆகியவை நூறு நாட்கள் படங்கள்.உத்தமன் வெள்ளிவிழா படம்

சத்யம் இலங்கையிலும் 100 நாட்கள் ஓடியது.

உத்தமன் கொழும்பு,யாழ்ப்பாணம் நகரங்களில் வெள்ளிவிழா கொண்டாடியது.

உனக்காக நான் சுஜாதா சினி ஆர்ட்ஸ் சார்பில் கே பாலாஜி தயாரிப்பில் வந்த படம்.சிவாஜி,ஜெமினி, லட்சுமி நடித்தனர்.சி வி ராஜேந்திரன் இயக்கம்
எம் எஸ் விஸ்வநாதன் இசை.இப்படம் 1973ல் வந்த நமக்கரம் என்ற ஹிந்திப் படத்தின் தழுவல்

கிரகப்பிரவேசம், சிவாஜி, கே ஆர் விஜயா நடிக்க யோகானந்த் இயக்கத்தில் வந்த படம்.எம் எஸ் விஸ்வநாதன் இசை

சத்யம், எஸ் ஏ கண்ணன் இயக்கம்.சிவாஜி, தேவிகா, கமல் ஹாசன் நடித்திருந்தனர்.கே வி மகாதேவன் இயக்கம்

உத்தமன், சிவாஜி, மஞ்சுளா நடிக்க ஜகபதி ஆர்ட்ஸ் சார்பில் வந்த படம்.இயக்கம் வி பி ராஜேந்திரபிரசாத்.ஆ கலே லக்ஜா என்ற ஹிந்தி படத்தழுவல்.மகாதேவன் இசை

சித்ரா பௌர்ணமி, சிவாஜி, ஜெயலலிதா நடிக்க பி மாதவன் இயக்கம்.விஸ்வநாதன் இசை

ரோஜாவின் ராஜா விஜயன் இயக்கத்தில் சிவாஜியுடன் வாணீஸ்ரீ நடித்த படம்.விஸ்வநாதன் இசை

மற்றபடி..சற்றே தேக்கநிலை இவ்வாண்டும்..அடுத்த ஆண்டும்.

1977 படங்கள்
--------------------

அவன் ஒரு சரித்திரம்
தீபம்
இளையதலைமுறை
நான் பிறந்த மண்
அண்ணன் ஒரு கோயில்

இதில்..தீபமும்,அண்ணன் ஒரு கோயிலும்  100 நாள் படங்கள்.தீபம் இலங்கையிலும் 100 நாட்கள்.

அவன் ஒரு சரித்திரம்..சிவாஜி,மஞ்சுளா நடிக்க கே எஸ் பிரகாஷ் ராவ் இயக்கம்.விஸ்வநாத்ன் இசை

தீபம்..விஜயன் இயக்கம்.கே பாலாஜி தயாரிப்பாளர்.சிவாஜி,சுஜாதா நடிக்க இளையராஜா இசையமைத்தார்.தீக்கனல் என்ற மலையாளப் படத்தின் தழுவல். (ஹிந்தியில் அமர்தீப் என்றும், தெலுங்கில் அமரதீபம் என்றும் இப்படம் வெளிவந்தது.முறையே ராஜேஷ் கன்னா, கிருஷ்ணம் ராஜு நடித்தனர்)

இளையதலைமுறை..சிவாஜி, வாணிஸ்ரீ நடிக்க கிருஷ்ணன் பஞ்சு இயக்கம்.விஸ்வநாத்ன் இசை

நான் பிறந்த மண்..சிவாஜி,ஜெமினி,கே ஆர் விஜயா,கமல் ஹாசன் நடிக்க ஏ வின்சென்ட் இயக்கம்.விஸ்வநாதன் இசை

அண்ணன் ஒரு கோயில் ..சிவாஜி, சுஜாதா நடிக்க  கே விஜயன் இயக்கம்.விஸ்வநாத்ன் இசை.தேவரகன்னு என்னும் கன்னடப் படக்கதை

17 comments:

Starjan (ஸ்டார்ஜன்) said...

I am first

சிநேகிதன் அக்பர் said...

சில படங்களின் பெயரை கேள்விப்பட்டதே இல்லை. நல்ல தொகுப்பு.

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி
ஸ்டார்ஜன்
அக்பர்

இராகவன் நைஜிரியா said...

உனக்காக நான்
கிரஹப்பிரவேசம்
சத்யம்
உத்தமன்
சித்ரா பௌர்ணமி
அவன் ஒரு சரித்திரம்
தீபம்
இளையதலைமுறை
நான் பிறந்த மண்

இந்தப் படங்கள் பெயர்கள் எல்லாம் கேள்விப் பட்டதேயில்லீங்க..

உங்களின் தொகுக்கும் திறமை ஆச்சரியப் படவைக்குது.

SUREஷ்(பழனியிலிருந்து) said...

உத்தமனுக்கு இன்னோரு பேரும் இருக்கு தல...,

SUREஷ்(பழனியிலிருந்து) said...

உங்கள் பதிவு படம் ஓடிய நாட்களை மறைமுகமாக சொல்கிறதே தல...,

T.V.ராதாகிருஷ்ணன் said...

//இராகவன் நைஜிரியா
உங்களின் தொகுக்கும் திறமை ஆச்சரியப் படவைக்குது.//
உங்கள் முதல் வருகைக்கும்..பாராட்டுதலுக்கும் நன்றி ராகவன்

T.V.ராதாகிருஷ்ணன் said...

//SUREஷ் (பழனியிலிருந்து) said...
உங்கள் பதிவு படம் ஓடிய நாட்களை மறைமுகமாக சொல்கிறதே தல...,//

அன்று ஓடாத அவர் படங்கள்..இன்று வெற்றியடையும் படங்களை விடச் சிறந்தது என்பதை மறைமுகமாக உணர்த்தவில்லையா? சுரேஷ்

T.V.ராதாகிருஷ்ணன் said...

//SUREஷ் (பழனியிலிருந்து) said...
உத்தமனுக்கு இன்னோரு பேரும் இருக்கு தல...,//

???!!!

ஜோ/Joe said...

//சத்யம் கொழும்பு,யாழ்ப்பாணம் நகரங்களில் வெள்ளிவிழா கொண்டாடியது.//

உத்தமன் என்றிருக்க வேண்டும்

ஜோ/Joe said...

திருவாளர் சுரேஷ் இங்கே என்ன சொல்ல வருகிறார் என தெரியவில்லை.

நடிகர் திலகம் நடிப்பில் மட்டும் சாதனை புரிந்தவர் அல்ல .தொடர்ந்து பல வருடங்களாக இடைவெளியின்றி தொடர்ந்து ஒருவரின் படங்கள் ஓடிக்கொண்டேயிருந்தது நடிகர் திலகம் என்ற ஒருவருக்கு மட்டும் தான் .

ஒரு சிலர் போல ஒரு படம் ஓடி முடிக்கும் வரை இடைவெளி விட அடுத்த பட தயாரிப்பாளரை நெருக்குதல் கொடுப்பதோ ,திட்டமிட்டு 100 நாள் ஓட்ட வைப்பதோ இல்லை .ஒரே நாளில் இரு படங்கள் வெளியாகி இரண்டுமே 100 நாள் படங்களான சரித்திரத்துக்கு சொந்தக்காரர் .

ஏற்கனவே வெளியாகி வெற்றி கரமாக ஓடிகொண்டிருக்கும் படம் 20 அல்ல்ச்து 30 நாட்களை கடக்கும் போதே இன்னொரு சூப்பர் ஹிட் படம் வெளியாகி முதல் படமும் வெள்ளி விழா கொண்டாட இரண்டாம் படமும் 100 நாட்களை கடக்க என எவனும் நினைத்துப்பார்க்க முடியாத சாதனைகளை பல முறை செய்தவர்.

அவருடைய படங்களுக்கு போட்டி அவருடைய படங்கள் தான் ..98 நாட்கள் ஓடிக்கொண்டிருக்கும் படம் அவரின் இன்னொரு படம் வெளியாவதால் வேறு வழியின்றி தூக்கப்பட்டு அதே திரையரங்கில் அடுத்த திரைப்படம் வெளியாவதெல்லாம் பல முறை நடந்தது ..அதற்காக இரண்டாம் பட தயாரிப்பாளரை காலம் கடந்து வெளியிடச் சொல்லி பேர் வாங்க நினைக்காதவர் நடிகர் திலகம்

தானுண்டு தன் நடிப்பு உண்டு என அதை தாண்டி தயாரிப்பாளர் ,இயக்குநர்களின் சுதந்திரத்தில் தலையிடாதவர் நடிகர் திலகம்.

மற்றவரின் பிரம்மாண்ட படங்களின் வெற்றிகளை ,வசூலை பாகப்பிரிவினை ,பாவமன்னிப்பு போன்ற வணிக மசாலா சாராத படங்களைக் கொண்டே தூக்கி எறிந்தவர் சிவாஜி.

வருடம் முழுவதும் தொடர்ந்து தன் படங்கள் வரிசையாக வெளிவந்தாலும் மக்கள் ஆதரவு கிடைக்கும் என்ற நம்பிக்கையும் தைரியமும் கொண்டு நிரூபித்துக் காட்டியவர் நடிகர் திலகம்.

இங்கே குறிப்பிட்ட வருடத்தில் கூட ரோஜாவின் ராஜா படம் வெளியாகி (25.12.1976), 20 நாட்கள் ஆகும் முன்பே அடுத்த படம் (அவன் ஒரு சரித்திரம் -14.01.1977) வெளியாக, அடுத்த 10 நாட்களில் அடுத்த நடிகர் திலகத்தின் படம் (தீபம்- 26.01.1977) வெளி வந்தது .

SUREஷ்(பழனியிலிருந்து) said...

// ஜோ/Joe said...

திருவாளர் சுரேஷ் இங்கே என்ன சொல்ல வருகிறார் என தெரியவில்லை.//

வாங்க தோழரே..,

இந்தத்தொடரின் பிற பகுதிகளில் நான் இட்ட பின்னூட்டங்களைப் படித்துப் பாருங்கள். நீங்கள் சுருக்கமாகச் சொன்னதை நான் ஒவ்வொரு பதிவிலும் விளக்கமாகச் சொல்லி இருக்கிறேன்.

சிவாஜி அவர்களின் படங்கள் என்றுமே அரிச்சுவடிதான். ஆனால் இந்தப் பட்டியலில் உள்ள படங்கள் சற்று மிகை நடிப்புக்குச் சென்றவை. வெளியான கால கட்டத்தைத் தாண்டி வெளியே வந்தால் அவரது ரசிகர்களால் மட்டுமே ரசிக்க முடியும். இது இந்த பதிவில் இடம் படங்களுக்கான விமர் சனமே தவிர சிவாஜி அவர்களைப் பற்றி அல்ல..,

சிவாஜி அவர்களையும், அவரது நடிப்புத் திறமையைப் பற்றி விமர்சனம் செய்யவும் யாருக்குமே உரிமை கிடையாது. சில படங்கள் காலத்தின் கட்டாயத்தாலும் இந்திப் படத் தாக்கத்தாலும் அழுகாச்சி இயக்குநர்களாலும் வந்தவை. அந்தக் கட்டம் 75ல் ஆரம்பித்து சூடு பிடித்து சிவாஜி அவர்களை தனிமைப் படுத்தியது. அதைத்தான் அவ்வாறு குறிப்பிட்டேன்.

உத்தமன் படத்தின் இன்னொரு பெயர்'
சிம்லாவில் சிவாஜி. நான் அந்தப் படத்தை 95ல் பார்த்தபோது பட போஸ்டரில் அந்தப் பெயர்தான் பெரிதாக இருந்தது. உத்தமன் குட்டியூண்டு எழுத்தில் இருந்தது.

T.V.ராதாகிருஷ்ணன் said...

//ஜோ/Joe said...
//சத்யம் கொழும்பு,யாழ்ப்பாணம் நகரங்களில் வெள்ளிவிழா கொண்டாடியது.//

உத்தமன் என்றிருக்க வேண்டும்//

தட்டச்சுபிழை..மற்றிவிட்டேன்

T.V.ராதாகிருஷ்ணன் said...

//
ஜோ/Joe said...
திருவாளர் சுரேஷ் இங்கே என்ன சொல்ல வருகிறார் என தெரியவில்லை.

நடிகர் திலகம் நடிப்பில் மட்டும் சாதனை புரிந்தவர் அல்ல .தொடர்ந்து பல வருடங்களாக இடைவெளியின்றி தொடர்ந்து ஒருவரின் படங்கள் ஓடிக்கொண்டேயிருந்தது நடிகர் திலகம் என்ற ஒருவருக்கு மட்டும் தான் .

ஒரு சிலர் போல ஒரு படம் ஓடி முடிக்கும் வரை இடைவெளி விட அடுத்த பட தயாரிப்பாளரை நெருக்குதல் கொடுப்பதோ ,திட்டமிட்டு 100 நாள் ஓட்ட வைப்பதோ இல்லை .ஒரே நாளில் இரு படங்கள் வெளியாகி இரண்டுமே 100 நாள் படங்களான சரித்திரத்துக்கு சொந்தக்காரர் .

ஏற்கனவே வெளியாகி வெற்றி கரமாக ஓடிகொண்டிருக்கும் படம் 20 அல்ல்ச்து 30 நாட்களை கடக்கும் போதே இன்னொரு சூப்பர் ஹிட் படம் வெளியாகி முதல் படமும் வெள்ளி விழா கொண்டாட இரண்டாம் படமும் 100 நாட்களை கடக்க என எவனும் நினைத்துப்பார்க்க முடியாத சாதனைகளை பல முறை செய்தவர்.

அவருடைய படங்களுக்கு போட்டி அவருடைய படங்கள் தான் ..98 நாட்கள் ஓடிக்கொண்டிருக்கும் படம் அவரின் இன்னொரு படம் வெளியாவதால் வேறு வழியின்றி தூக்கப்பட்டு அதே திரையரங்கில் அடுத்த திரைப்படம் வெளியாவதெல்லாம் பல முறை நடந்தது ..அதற்காக இரண்டாம் பட தயாரிப்பாளரை காலம் கடந்து வெளியிடச் சொல்லி பேர் வாங்க நினைக்காதவர் நடிகர் திலகம்

தானுண்டு தன் நடிப்பு உண்டு என அதை தாண்டி தயாரிப்பாளர் ,இயக்குநர்களின் சுதந்திரத்தில் தலையிடாதவர் நடிகர் திலகம்.

மற்றவரின் பிரம்மாண்ட படங்களின் வெற்றிகளை ,வசூலை பாகப்பிரிவினை ,பாவமன்னிப்பு போன்ற வணிக மசாலா சாராத படங்களைக் கொண்டே தூக்கி எறிந்தவர் சிவாஜி.

வருடம் முழுவதும் தொடர்ந்து தன் படங்கள் வரிசையாக வெளிவந்தாலும் மக்கள் ஆதரவு கிடைக்கும் என்ற நம்பிக்கையும் தைரியமும் கொண்டு நிரூபித்துக் காட்டியவர் நடிகர் திலகம்.

இங்கே குறிப்பிட்ட வருடத்தில் கூட ரோஜாவின் ராஜா படம் வெளியாகி (25.12.1976), 20 நாட்கள் ஆகும் முன்பே அடுத்த படம் (அவன் ஒரு சரித்திரம் -14.01.1977) வெளியாக, அடுத்த 10 நாட்களில் அடுத்த நடிகர் திலகத்தின் படம் (தீபம்- 26.01.1977) வெளி வந்தது //

நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை..தில்லானா மோகனாம்பாள் 100 ஆவது நாள் விளம்பரத்தில்..அதுவரை ஆன வசூலை மனதில் கொண்டு..'வெள்ளி விழா நோக்கி' என விளம்பரப்படுத்தினார்கள்.ஆனால் பிறகு வசூல் குறைந்ததால்...படத்தை ஓட்டாமல்...படம் எடுக்கப்பட்டுவிட்டது.
அதே போல்..பாசமலர் எடுத்த மோகன் ஆர்ட்ஸ் அடுத்தபடம்..குங்குமம் எதிர்ப்பார்த்த வெற்றி பெறாவிடினும்..படத்தை வீம்புக்கு ஓட்டாமல் எடுத்துவிட்டனர்.இப்படி சிவாஜி படங்களை சொல்லிக் கொண்டே போகலாம்.இங்கு சுரேஷ் சொன்னது..சும்மா..ஒரு ஜோக்கிற்கு..மற்றபடி நம்மைப் போல் சிவாஜிபடங்கள் பற்றி பல விவரங்களை தெரிந்து வைத்துக் கொண்டிருக்கும் சிவாஜி பிரியர் அவர்.

T.V.ராதாகிருஷ்ணன் said...

// SUREஷ் (பழனியிலிருந்து)
உத்தமன் படத்தின் இன்னொரு பெயர்'
சிம்லாவில் சிவாஜி. நான் அந்தப் படத்தை 95ல் பார்த்தபோது பட போஸ்டரில் அந்தப் பெயர்தான் பெரிதாக இருந்தது. உத்தமன் குட்டியூண்டு எழுத்தில் இருந்தது.//

இது புது செய்தி..
தகவலுக்கு நன்றி

SANKAR said...

கிரகபிரவேசம் படத்தில்"எங்க வீட்டு ராணீக்கிப்போ இளமை திரும்புது"அருமையான பாடல்.
உத்தமன் படத்தில்"படகு படகு ஆசைபடகு"பாட்டில் இளையதிலகம் பிரபு
SCATTING விளையாடும் காட்சியில்
வருவார்.

தீபம் இளையராஜா இசையில் 3வது படம்.பூவிழிவாசலில் யாரடி வந்தது கிளியே கிளியே பாடல் அருமை.

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கும்..தகவலுக்கும் நன்றி சங்கர்