Thursday, August 27, 2009

தேங்காய்..மாங்காய்..பட்டாணி..சுண்டல் (28-8-09)

இந்தியாவில் பல லட்சம் குழந்தைகளுக்கு..ஆரம்ப,நடுநிலை..மற்றும் கல்லூரி படிப்புகள் கூட வழங்கப்படவில்லை.ஆனாலும் கூட அங்கு தொழில் நுட்பக் கல்வி உலகத்திலேயே மிகச் சிறப்பாய் உள்ளது.இது போன்ற கல்வி திட்டம் தான் அனைவரும் பின்பற்ற வேண்டும்..என அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் கூறியுள்ளார்.

2.அண்ணாவின் நூற்றாண்டு விழாவை ஒட்டி அவரது உருவம் பொறித்த 5 ரூபாய் நாணயத்தை மத்திய அரசு வெளியிடுகிறது.சென்னை பல்கலைக் கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில்..அடுத்தமாதம் 15ஆம் தேதி இதற்கான விழா நடக்கிறது.முதல்வர் கலைஞர் தலைமையில்..மத்திய நிதி அமைச்சர் ப்ரணாப் முகர்ஜி பங்கேற்று நாணயத்தை வெளியிட உள்ளார்.

3.இன்று..தமிழ்த் திரையுலகில் ஒரு திரைக்கதை வசனகர்த்தாவிற்கு 3 படங்கள் இருக்கிறது.இதுவும் ஒரு சாதனை.அந்த திரை வசனகர்த்தா கலைஞர்.அவரின்..நீயின்றி நானில்லை கதையை இயக்குநர் இளவேனில் இயக்குகிறார்.தியாகராஜன் இயக்கத்தில் பொன்னர் சங்கர்,ஸ்ரீரங்கம் இயக்கத்தில் பெண்சிங்கம்.86 வயதிலும்..சாதனை புரிகிறார் கலைஞர்.

4.அப்பாவும்..அம்மாவும்..கட்டுப்பாடு என்ற பெயரில் தங்கள் குழந்தைகளை அடித்து நொறுக்குவார்கள்.பெற்றோரை எதிர்த்து பதில் தாக்குதல் நடத்த முடியாத அந்த குழந்தைகள் மனதில் ஆற்றாமை இருந்துக் கொண்டே இருக்கும்.அதனால்..பெற்றோரை பழி வாங்குகிறேன் என்று அவர்கள் விரும்பாத செயல்களை செய்துக் கொண்டு இருப்பார்கள்..ஆகவே..பெற்றோர் குழந்தைகள் மனதையும் புரிந்து நடக்க வேண்டும்.

5.இந்த வார அரசியல் ஜோக்கர் விருது பெறுபவர் லால்லு பிரசாத்...
பீகார் மாநிலம் பருவ மழை தவறியதால் வறட்சியில் சிக்கியுள்ளது.அதற்கு அவர் சொன்ன காரணம்.
சூரியகிரகணம் அன்று அந்த நேரத்தில்..முதல்வர் நிதீஷ்குமார்..பிஸ்கெட்,குளிர்பானம் சாப்பிட்டதால்தான்..பீகாரில் வறட்சி தாண்டவமாடுகிறது.

6.ஒரு ஜோக்..
டாக்டர் மூணு மாசமா தூக்கமே இல்லை
மூணு மாசம் என்ன பண்ணினீங்க..முதல்லயே வந்திருக்கலாமே
நிரந்தரமா தூங்க வைச்சுட்டீங்கன்னா என்ன செய்யறதுங்கற பயம்தான்

9 comments:

பீர் | Peer said...

:)

புருனோ Bruno said...

:) :)

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி
பீர்
புருனோ

மங்களூர் சிவா said...

:):):)

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி சிவா

IKrishs said...

நீயின்றி நானில்லை படம் தான் பெண் சிங்கம் என பெயர் மாற்றி இருகிறார்கள் ..
கிருஷ்

Cable சங்கர் said...

/இன்று..தமிழ்த் திரையுலகில் ஒரு திரைக்கதை வசனகர்த்தாவிற்கு 3 படங்கள் இருக்கிறது.இதுவும் ஒரு சாதனை.அந்த திரை வசனகர்த்தா கலைஞர்.அவரின்..நீயின்றி நானில்லை கதையை இயக்குநர் இளவேனில் இயக்குகிறார்.தியாகராஜன் இயக்கத்தில் பொன்னர் சங்கர்,ஸ்ரீரங்கம் இயக்கத்தில் பெண்சிங்கம்.86 வயதிலும்..சாதனை புரிகிறார் கலைஞர்.//

paavam அந்த படத்தை கட்டாயம வாங்கிக்க போற அமைச்சர்கள்.

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி UM

T.V.ராதாகிருஷ்ணன் said...

//paavam அந்த படத்தை கட்டாயம வாங்கிக்க போற அமைச்சர்கள்.//

:-))