Friday, August 7, 2009

சிவாஜி நடிப்பில் திருப்தி இல்லை - கமல்ஹாசன்

சத்யம் சினிமாஸ்..மற்றும் ரியல் இமேஜ் மீடியா டெக்னாலஜி இணைந்து தயாரிக்கும்..திரு திரு துறு துறு படத்தின் ஆடியோவை கமல் வெளியிட்டார்.

அப்போது அவர் பேசுகையில் சிவாஜி கணேசன் 20ஆம் நூற்றாண்டு கலஞர்.அவரை 19ம் நூற்றாண்டிலேயே வைத்திருந்து துரோகம் செய்து விட்டோம் என்றார்.

வித்தியாசமாக இருக்கட்டுமே என விழாவில் ஒவ்வொருவரும் திரு திரு என்று விழித்த அனுபவங்களை பகிர்ந்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டனர்.

ஆடியோ வெளியிட்டு அவர் மேலும் பேசுகையில்..

நான் வணக்கம் சொன்னதும் இங்கு பெரும் ஆரவாரம் எழுந்தது.அது பணிவுக்குக் கிடைத்த மரியாதை.பணிவிற்கும்,துணிவிற்கும்தான் இந்த மரியாதை கிடைக்கும்.

எனக்கு சிவாஜியுடன் ஒரு அனுபவம்..ஆனால் நான் திரு..திருன்னு விழிக்கவில்லை.தேவர்மகன் படபிடிப்பின் போது, ஒரு காட்சியில் சிவாஜி நடித்துவிட்டார்.ஆனால் எனக்கு முழு திருப்தி இல்லை.இயக்குநரிடம் சென்று..இன்னொரு தடவை அந்தக் காட்சியை எடுக்கலாம்.அவர் இன்னும் நல்லா பண்ணித் தருவார்..என்றேன்.அதை சிவாஜி கணேசன் கவனித்து விட்டார்.அவருக்கு ஏழெட்டுக் கண்கள்.எல்லாப் பக்கமும் கவனிப்பார்.

என்னை அழைத்தார்..'என்ன வேணும் முதலாளி?'என்றார் சிரித்தபடியே.

நான் உடனே..'படத்தில நீங்க பெரிய தேவர்.இது..கொஞ்சம் சின்ன தேவர் மாதிரி இருக்கிறது என்றேன்.அந்தக் காட்சி மீண்டும் படமாக்கப்பட்டு..சிவாஜியின் நடிப்பு மிக சிறப்பாக அமைந்தது.அது தான்..படத்தில் நான் மழையில் வழுக்கும் போது சிவாஜி பதறும் காட்சி.

சிவாஜி எப்படி நடிப்பார்? என்பது ரசிகன் என்ற முறையில் எனக்குத் தெரியும்.வியட்நாம் வீடு, எங்க ஊர் ராஜா எல்லாம் பார்த்திருக்கிறோம் அல்லவா?

20ஆம் நூற்றாண்டு நடிப்பை சிவாஜியால் காட்டமுடியும்.அந்த 20 ஆம் நூற்றாண்டு நடிகரை 19ஆம் நூற்றாண்டில் வைத்திருந்தது நம் தவறு.அந்த துரோகம் எனக்கும் நடந்து விடக் கூடாது.டைரக்டர்கள் நடிப்பை சொல்லித் தர வேண்டும்.என் எதிர்காலம் அவர்கள் கையில் தான் இருக்கிறது.

இந்த படம் முழுக்க..முழுக்க டிஜிட்டலில் தயாராகி உள்ளது.மிகவும் மகிழ்ச்சி.இதுதான் எதிர்கால சினிமா. என்றும் கூறினார்.

(சிவாஜி 21ஆம் நூற்றாண்டு நடிகர்..20 ஆம் நூற்றாண்டிலேயே வைத்திருந்தது நம் தவறு..என கமல் சொல்லி இருக்க நினைத்திருப்பார் என எண்ணுகிறேன்.)

படத்தின் இயக்குநர் நந்தினி.

6 comments:

ஜோ/Joe said...

இந்த மேட்டரை ஏற்கனவே படிச்சிட்டதால தலைப்பைப் பார்த்ததும் அதிர்ச்சி வரல்ல :)

SUREஷ்(பழனியிலிருந்து) said...

//.டைரக்டர்கள் நடிப்பை சொல்லித் தர வேண்டும்.//

உண்மையில் சிவாஜிக்குக் கிடைத்த இயக்குநர்கள் பெரும்பாலும் ஒரே ஒரு சுவை மட்டுமே காட்டின்ர்.

எம்.ஜி. ஆர் போல அவரும் தனது எண்ணத்திற்கேற்ப திரைப்படங்களை இயக்கி இருக்க வேண்டும்.

அல்லது தன் கம்பெனியிலிருந்து பல சோதனை முயற்சிகளை செய்திருக்க வேண்டும். ஆனால் புதிய பறவை போல் வெகு சில சோதனை முயற்சிகளே நடந்தன.

திறமையான இயக்குநர்கள் என்ன போர்வையில் இருந்தவர்கள் சிவாஜியை ஒரு குறிப்பிட்ட பாதையில் மட்டும் அழைத்து வந்து அவரின் பல கோணங்களை மக்களுக்கு கொண்டு வரத் தவறி விட்டனர்.

தவிரவும் தேவர் மகனில் ரீ டேக் வாங்கியது அவரிடம் ரீ டேக் சொல்ல பல இயக்குநர்களுக்கு தைரியம் இருந்திருக்காது.

உண்மையில் சிவாஜி தனது திறமைக்கேற்ற சாதனைகளைச் செய்ய இங்கு வழி வகை இல்லை என்றே சொல்ல வேண்டும்.

ஸ்டைல் மன்னன் என்று ரஜினியைச் சொல்கிறோம். அவரது ஸ்டைல் மன்னன் பட்டத்திற்கும் மிக முக்கிய காரணமே அவரது சிகரெட் பிடிக்கும் ஸ்டைல் தான். தலைமுடியை சிலுப்புவதும் கூட சொல்லலாம்.

ஊட்டிவரை உறவு, புதிய பறவை போன்ற படங்களில் பல ஸ்டைல்களில் சிவாஜி அதைச் செய்திருப்பார். தலை முடியை சிலுப்புவது பலே பாண்டியாவிலேயே வந்திருக்கும். ஆனால் முடியைச் சிலுப்புவது ரஜினி ஸ்டைல் என்று ஆகிப் போனது.

Jawahar said...

எதிர்பார்க்க வைத்த தலைப்பு. ஏமாற்றாத ஆர்டிகிள். எல்லாத்தையும் விட செல்லக் குட்டு கடைசீலே..

நல்லாருக்கு குருஜி!

http://kgjawarlal.wordpress.com

T.V.ராதாகிருஷ்ணன் said...

//ஜோ/Joe said...
இந்த மேட்டரை ஏற்கனவே படிச்சிட்டதால தலைப்பைப் பார்த்ததும் அதிர்ச்சி வரல்ல :)//

நீங்க வருவீங்கன்னும் தெரியும்..முன்னமே மேட்டரை படிச்சிருப்பீங்கன்னும் தெரியும், பின்னூட்டம் இடுவீங்கன்னும் தெரியும்..ஏன் எனில் தலைப்பில் சிவாஜி பெயர் இருக்கிறதே!
நன்றி ஜோ

T.V.ராதாகிருஷ்ணன் said...

ரஜினி மட்டுமல்ல..யார் எந்த பாத்திரத்தில் நடித்தாலும்..அந்த நடிப்பில் சிவாஜியின் சாயல் இருக்கும்...அவர் ஒரு பல்கலைக்கழகம்.
வருகைக்கு நன்றி சுரேஷ்

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கும்..பாராட்டுக்கும் நன்றி
Jawarlal