ஒருவர் கவிஞராக இருப்பார்..அல்லது
எழுத்தாளராக இருப்பார்..அல்லது
திரைப்பட வசனகர்த்தாவாக இருப்பார்..அல்லது
இலக்கியவாதியாக இருப்பார்..அல்லது
திரைப்பட பாடலாசிரியராக இருப்பார்..அல்லது
அரசியல்வாதியாக இருப்பார்.....ஆனால்
தமிழன்னை..தன் செல்லப்புதல்வன் கலைஞருக்கு...எல்லாவற்றையும்...வாரி..வாரி...வழங்கி இருக்கிறாள்.
ஆம்...அந்த தமிழன்னையின் செல்லப்பிள்ளை தான்...நம் கலைஞர்.
இப்பதிவு...திரைப்பட பாடலாசிரியராக கலைஞர்.
பல திரைப்படங்களுக்கு..திரைக்கதை,வசனம் எழுதியவர் அவர் என்பதை நாம் அறிவோம்.ஆனால்..பலருக்கு, குறிப்பாக இளம் தலைமுறையினருக்கு அவர் ஒரு திரைப்பட பாடலாசிரியர் என்பது தெரியாது.
1950ல் வந்த மந்திரிகுமாரி படத்தில் இடம் பெற்ற கலைஞர் பாடல்..
அருமைக் கன்னுக்குட்டி - என்
எருமைக் கன்னுக்குட்டி...
ஊருக்கு உழைப்பவன்டி..ஒரு
குற்றம் அறியான்டி
உதைப்பட்டு சாவான்டி....
என்று வரும் வரிகள்...
அடுத்து....அறிஞர் அண்ணாவின் ரங்கோன் ராதா படத்தில் கலைஞரின் பாடல்...
பொதுநலம்..என்றும் பொதுநலம்
புகழ் உடலைக் காக்கும்..மிகப் புனிதமான செயல்
பொதுநலம்.....என்ற பாடல்
(பூம்புகார்..படத்தில் வரும் அவர் பாடல்..சுந்தராம்பாள் பாடுவார்..
'வாழ்க்கை என்னும் ஓடம்
வழங்குகின்ற பாடம்
மானிடனின் மனதினில்
மறக்க வொண்ணா வேதம்....- என்ற பாடல்.
மறக்கமுடியுமா...என்ற படத்தில்..அவர் எழுதிய ஒரு அருமையான பாடல்....
காகித ஓடம் கடலலை மேலே
போவதுபோல ...மூவரும் போவோம்...- மறக்கமுடியா பாடல்.
எல்லாவற்றையும் விட நம்மால் மறக்கமுடியாதது...பராசக்தியில்...
பூமாலை..நீயே
புழுதி மண்மேலே-வீணே
வந்தேன்..தவழ்ந்தாய்....என்ற பாடல்.
தவிர...பூமாலை படத்தில்..'கன்னம்..கன்னம்..சந்தனக்கிண்ணம்' என்ற பாடல்..
ராஜா ராணியில்'பூனைக்கண்ணை மூடிக்கொண்டால் பூலோகம் இருண்டு போகுமா..மியாவ்..மியாவ்...' பாடல்.
எனக்கு நினைவில் தற்போது வந்த பாடல்கள் இவை.
கடல் நீரை..குடத்திற்குள் அடக்கி விட முடியுமா?
14 comments:
ஓட்டுப் போட்டாச்சு...,
அவர் பாடல்கள் பிரசித்தி பெற்றவை.அவரது வீடுகளூம் பாடல் பெற்ற ஸ்தலங்கள்
// தண்டோரா இனி... மணிஜி.. said...
அவர் பாடல்கள் பிரசித்தி பெற்றவை.அவரது வீடுகளூம் பாடல் பெற்ற ஸ்தலங்கள்
///
:))))))))))
பராசக்தி-யில் 'கா கா கா' பாடலும் கலைஞர் எழுதியது தானே?
அதில காகத்தை பார்த்து சொல்லுவார்
"பட்சி சாதி நீங்க ..எங்க பகுத்தறிவாளர பாக்காதீங்க
பட்சமா இருங்க ..பகுத்துண்டு வாழுங்க ..பழக்கத்த மாத்தாதீங்க"
//SUREஷ் (பழனியிலிருந்து) said...
ஓட்டுப் போட்டாச்சு...,//
நன்றி சுரேஷ்
//தண்டோரா இனி... மணிஜி.. said...
அவர் பாடல்கள் பிரசித்தி பெற்றவை.அவரது வீடுகளூம் பாடல் பெற்ற ஸ்தலங்கள்//
வருகைக்கும்..கருத்துக்கும் நன்றி
வருகைக்கு நன்றி அக்னி
இன்னும் பெரிதாக எழுதியிருக்கலாம்..
//ஜோ/Joe said...
பராசக்தி-யில் 'கா கா கா' பாடலும் கலைஞர் எழுதியது தானே?
அதில காகத்தை பார்த்து சொல்லுவார்
"பட்சி சாதி நீங்க ..எங்க பகுத்தறிவாளர பாக்காதீங்க
பட்சமா இருங்க ..பகுத்துண்டு வாழுங்க ..பழக்கத்த மாத்தாதீங்க"//
ஆம்..அப்பாடல் அவர் எழுதியதுதான்.மேலும் சில வரிகள்
எச்சிலை தன்னிலே
எறியும் சோத்துக்கு
பிச்சைக்கார சண்டை ரோட்டிலே
இளைத்தவன்..வலுத்தவன்
இனச்சண்டை..பணச்சண்டை
எத்தனையோ நாட்டிலே
பட்சி சாதி நீங்க
பகுத்த்றிவாளரைப் பார்க்காதீங்க
பட்சமா இருங்க
பகுத்துண்டு வாழுங்க
பழக்கத்தை மாத்தாதீங்க..
ஆமாம் ஜோ..57 ஆண்டுகள் ஆகியும் பாடல் வரிகளை மறக்கமுடியவில்லை.
//ஆதிமூலகிருஷ்ணன் said...
இன்னும் பெரிதாக எழுதியிருக்கலாம்..//
கலைஞரின் கலைச்சேவைப் பற்றி..ஒரு தொடரே போடும் எண்ணம் உண்டு.நேரம்..காலம்..ஒத்துழைத்தால் விரைவில் பதிவேன்.அதற்காகத்தான் அதிகப்படியான விவரங்களை இப்போது கொடுக்கவில்லை.
வருகைக்கு நன்றி ஆதி.
மிகவும் gadget பயனுள்ளது ஒன்றை gadget உருவாக்கி உள்ளேன் இதில் தமிழ் தமிழிஷ்தமிழ்மணம் திரட்டி போன்ற வலைபூக்களை ஒரே இடத்தில் பார்க்க இந்த gadget பயனுள்ளதாக இருக்கும் இந்த உங்கள் வலைப்பூவில் gadget இணைக்க இங்கே கொடுக்கப்பட்ட இணையத்தளத்துக்கு சென்று அங்கே code கொப்பி செய்து உங்கள் இணையத்தளத்தில் இணையுங்கள் www.tamil.com
நன்றி
ஈழவன்
அவர் எழுதிய திரைப்படப் பாடல் அத்தனையும் தேன் துளிகள்
வருகைக்கு நன்றி goma
தகவலுக்கு நன்றி ஈழவன்
Post a Comment