Sunday, August 16, 2009

மனிதனாகும் ஆசை வேண்டாம்.

நன்றியில் நாயாய் இரு
வீரத்தில் சிங்கமாய் இரு
ஞாபகத்தில் யானையாய் இரு
உறவுகளில் காக்கையாய் இரு
மானத்தில் மானாய் இரு
தந்திரத்தில் நரியாய் இரு
சேமிப்பில் ஒட்டகமாய் இரு -ஆனால்
மனிதா
மனிதனாய் மட்டும் இருந்திடாதே!!!

ஓ..மிருகங்களே..
நீங்கள் நீங்களாகவே இருங்கள்
மனிதனாகும் ஆசை வேண்டாம்...

10 comments:

SP.VR. SUBBIAH said...

கண்போன பாதையில் கால் போகலாமா
கால்போன பாதையில் மனம் போகலாமா
மனம்போன பாதையில் மனிதன் போகலாமா
மனிதன்போன பாதையில் மறந்தும் போகலாமா?

ஷைலஜா said...

நல்ல கவிதை..மனிதாபிமானம் இல்லாத மனிதனுக்கு தரும் டோஸா இது ராதாக்ருஷ்ணன்?!

கோவி.கண்ணன் said...

கவிதையும் எழுதுவிங்களா ?

சொல்லவே இல்லை !

மங்களூர் சிவா said...

கவிதையும் எழுதுவிங்களா ?

சொல்லவே இல்லை !

goma said...

மனிதனாக மட்டும் மனிதனுக்குத் தெரியவில்லை...ஓஹ்...

T.V.ராதாகிருஷ்ணன் said...

//SP.VR. SUBBIAH said...
கண்போன பாதையில் கால் போகலாமா
கால்போன பாதையில் மனம் போகலாமா
மனம்போன பாதையில் மனிதன் போகலாமா
மனிதன்போன பாதையில் மறந்தும் போகலாமா?//

எப்படி எந்த நடிப்பாய் இருந்தாலும் சிவாஜி ஞாபகத்தில் வருவாரோ..அதுபோல எல்லா கவிதைகளும் கண்னதாசன் தொட்டதே
நீண்ட நாட்கள் கழித்து..என் வலைப்பக்கம் வந்துள்ள ஆசிரியருக்கு நன்றி

T.V.ராதாகிருஷ்ணன் said...

//ஷைலஜா said...
நல்ல கவிதை..மனிதாபிமானம் இல்லாத மனிதனுக்கு தரும்//

ஆகா...கவிதைக்கு ஒரு ஷைலஜா என்ற நிலையில் உள்ள தங்கள் பாராட்டுக்கு நன்றி

T.V.ராதாகிருஷ்ணன் said...

//கோவி.கண்ணன் said...
கவிதையும் எழுதுவிங்களா ?

சொல்லவே இல்லை !//

நான் ஏதோ கிறுக்கப் போக அதற்கு கவிதை என்ற பெயரிட்ட உங்களுக்கு நன்றி கோவி

T.V.ராதாகிருஷ்ணன் said...

//மங்களூர் சிவா said...
கவிதையும் எழுதுவிங்களா ?

சொல்லவே இல்லை //

நான் ஏதோ கிறுக்கப் போக அதற்கு கவிதை என்ற பெயரிட்ட உங்களுக்கு நன்றி சிவா

T.V.ராதாகிருஷ்ணன் said...

//goma said...
மனிதனாக மட்டும் மனிதனுக்குத் தெரியவில்லை...ஓஹ்...//

வருகைக்கு நன்றி கோமா