பருவ மழை பொய்த்ததால் வறட்சி ஏற்பட்டுள்ள ஆந்திராவில் கடந்த நாற்பது நாட்களில் 21 விவசாயிகள் தற்கொலை செய்துக் கொண்டுள்ளனர்.இதை ஆந்திர முதல்வர் ராஜசேகர் ரெட்டியும் உறுதி செய்துள்ளார்.இறந்த விவசாயிகளின் குடும்பங்களுக்கு தலா ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் பணம் வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.
மழையை நம்பி மட்டுமே விவசாயம் நடைபெறும் இடங்களில் மழை பொய்த்தால் ..சம்பந்தப்பட்ட குறு விவசாயிக்கு நஷ்டமும்..கடனும்..கடன் மேல் வட்டியும் சேர்ந்து வாழ வழி தெரியாது..தற்கொலையில் கொண்டுபோய் விட்டுவிடுகிறது.
கடந்த ஆண்டும்..மஹாராஷ்ட்ராவில் வாங்கிய கடனை திருப்பிக் கொடுக்க முடியாது..பல விவசாயிகள் தற்கொலை செய்துக் கொண்டனர்.அவர்கள் இறந்தபின் அவர் குடும்பத்திற்கு பண உதவி செய்வதால் என்ன பயன்..அந்த பணத்தையும் கடன் கொடுத்தவர்கள் பிடுங்கிக் கொள்ளப் போகின்றனர்.
அரசாங்கம்..விவசாயிகளுக்கு..பல சலுகைகள்,கடன் தள்ளுபடி போன்றவற்றை அளித்தாலும்..அது உண்மையில் அவர்களைப் போய் அடைகிறதா..அல்லது நடுவில்..பல இடைத்தரகர்கள் வாயில் விழுகிறதா..தெரியவில்லை.
நமக்கு..சோறு போடும் விவசாயி.. அவன் குடும்பம் சோறின்றி இறப்பதா..
இயற்கை அன்னை நம்மை மன்னிப்பாளா?
கோடிக்கணக்கில் இலவசங்களை அள்ளிவிடும் அரசுகள்..நாட்டின் ஆணிவேரான விவசாயிகளை புறக்கணிக்கலாமா?
ஒவ்வொரு மாநில அரசும் அந்தந்த மாநில விவசாயி குடும்பங்களை தத்தெடுத்துக் கொள்ளட்டும்..
இனி வரும் காலங்களில் வறுமைப் பேயை..விவசாயிகளின் குடும்பங்களிலிருந்து விரட்டட்டும்.
நாட்டில் விவசாயி மகிழ்ச்சியாய் இல்லாவிடின்..மற்றவர்கள் எப்படி மகிழ்ச்சியாய் இருக்க முடியும்?
5 comments:
ஏன் விவஷஅயம் பண்ணனும்.
இந்தக்கொடுமையை ஒருத்தனும் தடுக்கப்போறதில்லை
நன்றாய் சொன்னீர்கள்
மத்திய, மாநில அரசுகள் விவசாயிகள் நலன் காக்க ஏதாவது நல்ல திட்டம் கொண்டு வர வேண்டும்.
வருகைக்கும்..கருத்துக்கும் நன்றி ஆனந்த்
நன்றி சிவா
Post a Comment