Tuesday, August 25, 2009

ஐ.டி.துறையின் இன்றைய நிலை..

தங்க சுரங்கம்..தகர சுரங்கமாகிறது என்று பத்திரிகையில் வந்த ஒரு கட்டுரையை நான் எடுத்துப்போட http://sowmyatheatres.blogspot.com/2008/10/blog-post_10.html
..தமிழ்நெஞ்சம்..இது பற்றி உங்களது எண்ணம் என்ன..எனக்கேட்டிருந்தார்.அதற்கான பதிவே இது.

ஒரு மாணவன் 9ம் வகுப்பு தேறி 10ம் வகுப்பு போகிறான்..அவனுக்கான பள்ளிச்செலவுகள் போக..மாதம் ஆயிரம் ரூபாய்க்கு செலவு செய்து..கணக்கு..மற்றும் சயின்ஸ் பாடங்களுக்கு டியூஷன் வைக்கப்படுகிறது.அவன் நல்ல மதிப்பெண் வாங்க வேண்டும் என குடும்பத்தினர் சில தியாகங்கள் செய்ய வேண்டியிருக்கிறது.புத்திசாலி பையனாய் இருப்பவன் 90 மதிப்பெண்கள் சராசரியாகப் பெற்று தேறுகிறான். அவன் வாங்காமல் போன மதிப்பெண் எங்கே? என்று தேடப்படுகிறது.
+2 சேருகிறான்..சயின்ஸ் குரூப்..மொத்தமாக பள்ளிச்செலவுகள்..வருஷம் முழுதும் என மொத்தமாக டியுஷன் ஃபீஸ்..கணக்கு..பிசிக்ஃஸ்,கெமிஸ்ட்ரி,கம்.சயின்ஸ் என.,இரண்டு வருடங்கள் பெற்றோர் வயிற்றில் நெருப்பு.பையன் நல்ல மதிப்பெண் பெற்று தேறினால்..கவுன்சிலிங்கில் நல்ல காலேஜ் கிடைக்கிறது.சற்று குறைவான(95%!!!)மதிப்பெண் ஆனால் சுயநிதி கல்லூரியில்..வாங்குவதில்லை என்று சொல்லியபடியே வாங்கும் கேபிடேஷன் ஃபீஸ்(லட்சங்கள்)செலுத்தி...ஃபீஸ் 4 வருஷங்களும் கட்டி படிப்பை முடிக்கிறான்.
10ம் மதிப்பெண்,+2 மதிப்பெண்,இஞ்சினீரிங்க் மதிப்பெண்(இது 75%குறையாமை இருந்தால்தான் கேம்பஸ் தேர்வில் நல்ல கம்பெனி ) பார்த்து வேலை கிடைக்கிறது.
இது எல்லாம் ஏன் சொல்கிறேன் என்றால்..இவ்வளவு கஷ்டங்கள்..தியாகங்கள் செய்தால் தான் வேலை.அதுவும் உடனே லட்சக்கணக்கில் இல்லை,..ப்ராஜெக்ட்..டீம் லீடர்..
இப்படியெல்லாம் மாதம் 25000க்குள்தான் சம்பளம்.காலநேரம் பார்க்காமல் ..ஆண்..பெண் என சலுகைகள் இல்லாமல்..உடலை வறுத்தி உழைக்க வேண்டும்.வாழ்வில் பல சௌகரியங்கள்..சின்னச்சின்ன சந்தோஷங்கள் எல்லாம் அவனுக்கு கிடையாது.

சரி இனி தலைப்பு...
இந்திய ஐ.டி.கம்பெனிகள் அமெரிக்கா போன்ற நாடுகளிலிருந்து அவுட் சோர்ஸிங் முறையில் வேலையைப் பெறுகின்றன.ஒரு மணி நேரத்திற்கு 15..20..யு.எஸ்.டாலர் என்ற முறையில் வாங்கிக்கொள்கின்றனர்..ஆனால் வேலையில் இருப்போருக்கு 2 அல்லது 3 டாலர் ஒரு மணி நேரத்துக்கு கொடுக்கப்படுகிறது.இரவு நேர வேலை. ஓரளவு நல்ல சம்பளம்..அதற்கு ஊழியர்கள் கொடுக்கும் விலை..நிம்மதியில்லா வாழ்க்கை,சிறு வயதிலேயே இரத்த அழுத்தம்,சர்க்கரை வியாதி போன்ற வியாதிகள்.

இப்படி தேவையில்லா வாழ்வானாலும்..பொன் முட்டையிடும் வாத்தே ஐ.டி.துறை.இப்போது..அகில உலகிலேயே பொருளாதார சிக்கல் உள்ளது.ஏர்வேஸ் ஆட் குறைப்பு பற்றி பேசாத நாம்..இத் துறை பற்றி மட்டும் ஏன் அலட்டிக் கொள்ள வேண்டும்.
நம் புத்திசாலி ஊழியர்களும்..தேர்ந்த ஆங்கிலமும் இருக்கும் வரை நமக்கு கவலை இல்லை..
இடையே இப்பொழுது இருப்பதெல்லாம் just passing clouds .

யாரும் மனம் தளர வேண்டாம்.

(மீள்பதிவு)

இதையும் பார்க்கவும்

8 comments:

ஐந்திணை said...

ஹ்ம்

T.V.ராதாகிருஷ்ணன் said...

// ஐந்திணை said...
ஹ்ம்//

:-)))

Unknown said...

<<
நம் புத்திசாலி ஊழியர்களும்..தேர்ந்த ஆங்கிலமும் இருக்கும் வரை நமக்கு கவலை இல்லை..
இடையே இப்பொழுது இருப்பதெல்லாம் just passing clouds .

யாரும் மனம் தளர வேண்டாம்.
>>

ஒரே சோகமா இருக்கே :(( :(

T.V.ராதாகிருஷ்ணன் said...

//Mãstän said...
<<
நம் புத்திசாலி ஊழியர்களும்..தேர்ந்த ஆங்கிலமும் இருக்கும் வரை நமக்கு கவலை இல்லை..
இடையே இப்பொழுது இருப்பதெல்லாம் just passing clouds .

யாரும் மனம் தளர வேண்டாம்.
>>

ஒரே சோகமா இருக்கே :(( :(//

மனம் தளர வேண்டாம்

காலப் பறவை said...

//ஐ.டி.துறையின் இன்றைய நிலை

தலைப்பை பார்த்து உள்ளே வந்தால், இன்றைய நிலமையை சொல்லாமல் விட்டு விட்டீர்களே பாஸ் :-)

துபாய் ராஜா said...

//காலப் பறவை said...
//ஐ.டி.துறையின் இன்றைய நிலை

தலைப்பை பார்த்து உள்ளே வந்தால், இன்றைய நிலமையை சொல்லாமல் விட்டு விட்டீர்களே பாஸ் :-)//

ர்ர்ர்ரிப்ப்ப்பீபீபீட்ட்ட்டேடேடேய்ய்ய்ய்ய்

ராஜாதி ராஜ் said...

எனக்கும் அதே தான் தோன்றுகிறது .... தலைப்புக்கும் சொன்ன விஷயத்துக்கும் சம்பந்தம் இல்லாதது போல்..

நட்புடன்,
ராஜ்.

T.V.ராதாகிருஷ்ணன் said...

இது ஒரு மீள் பதிவு..அதனால் இன்றைய நிலை பற்றி எதும் சொல்லாதது போல் தோன்றுகிறது.இப்போது இப்பதிவை போட்டதற்கு காரணம்...'சும்மா கிடைத்துவிடவில்லை சுதந்திரம்" என்பார்களே ..அதுபோல..கடின உழைப்பால்தான் அவனுக்கு இந்நிலையை எட்டமுடிந்தது என்பதை உணர்த்தவே..மேலும் ஒரு சிலருக்கு புரிய வேண்டும் என்றும் எண்ணம்.அவ்வளவே
nanri

காலப் பறவை
துபாய் ராஜா
ராஜாதி ராஜ்