எனது முந்தைய பதிவில்..ஐ.டி.யின் தற்போதய நிலை குறித்து ஏதும் சொல்லவில்லையே என நண்பர்கள் காலப்பறவை,துபாய் ராஜா,ராஜாதி ராஜ் ஆகியோர் பின்னூட்டம் இட்டிருந்தனர்.ஆகவே இப்பதிவு.
அமெரிக்காவின் பொருளாதார சீர்குலைவு..பல நாடுகளில் எதிரொலிக்கவே செய்தது.அதன் பாதிப்பு நம் நாட்டிலும் தெரிந்தது.பொருளாதார வளர்ச்சி கிட்டத்தட்ட 7 சதவிகிதம் இருப்பதாகவும்..பண வீக்க விகிதம் மைனசில் போவதாகவும் புள்ளி விவரங்கள் இருந்தாலும்..ஐ.டி.,செக்டார் பாதிப்பு இருக்கிறது.
பல நிறுவனங்கள் அளித்து வந்த ஊதியத்தில்..ஒரு குறிப்பிட்ட சதவிகிதம் குறைந்தது.ஊதியத்தை நம்பி தவணை முறையில் வீட்டு கடன் வாங்கியோர் தவணை கட்ட முடியா நிலை.ரியல் எஸ்டேட்
துறையும் அதனால் வீழ்ச்சி.கேம்பஸ் இன்டெர்வியூ..கடந்த வருடம்..கல்லூரிகளில் நடத்தப் படவில்லை.
இன்ஃபோஸிஸ் போன்ற நிறுவனங்கள் கூட..தங்கள் ஊழியர்களை 'பெஞ்ச்" என்ற சொல்லப்படும் முறையில்..காத்திருக்க வைத்துள்ளது.
2007 ஆம் ஆண்டு..ஒரு கல்லூரியில் கேம்பஸ் இண்டெர்வியூவில் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களை கற்புநிறை கணினி நிறுவனம் இன்னமும் வேலையில் சேர்க்கவில்லையாம்.அந்த மாணவர்கள் நிலை திரிசங்குசொர்க்கம் தான்.
இதெற்கெல்லாம் என்று விடிவுகாலம் வரும்? என கேள்விக்குறியுடன் மாணவர்கள் தரப்பு.ஆனால்..மென்பொருள் வல்லுநர்கள் தங்களுக்குள் சொல்லிக்கொள்ளும் அறிவுரை..
Love your job but don't love your company because you may not know when your company stops loving you
எவ்வளவு மனக்குறையிருந்தால் இப்படி சொல்லத் தோன்றும்.
இனி நிலை எப்படி.?..சற்றும் கவலை வேண்டாம்..
வெளிநாடுகளிலிருந்து..குறிப்பாக அமெரிக்காவிலிருந்து கிடைக்கும்..வேலைகள் நம் நிறுவனங்களுக்கு குறையலாம்.ஆனால் இல்லாமல் போகாது.வாங்கும் ஊதியம் சற்றே குறையலாம். வேலைபோகாது.
நம்பிக்கையே வாழ்க்கை.
சமீபத்தில் இந்தியா விஜயம் செய்த அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் கூட..உலகிலேயே பொறியியல் துறை கல்வியில் இந்தியாதான் சிறந்தது எனக் கூறியுள்ளதை இங்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.
பில்கேட்ஸின் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தில் 43 சதவிகிதம் இந்தியர்களே..
இந்தியர்களை விடுத்து..மென்பொருள்துறையை நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை.
ஆகவே..நண்பர்களே கவலையை விடுங்கள்..
வாழ்வில் மீண்டும் வசந்தம் மலரும்.
10 comments:
இந்நிலை மீண்டும் வராதிருக்க என்ன செய்யவேண்டும்?
/
கற்புநிறை கணினி நிறுவனம்
/
patni
:)))))))))))))))))
நம்பிக்கை தான் வாழ்க்கை..
கண்மூடித்தனமாக முதலாளித்துவத்தை அமல்படுத்தியதுதான் தற்போதைய பிரச்சனைகளுக்கு காரணம் என்று நினைக்கிறேன். கட்டுபடுத்தப்பட்ட முதாலாளித்துவமே சிறந்தது. விரைவில் குறைகள் களையப்பட்டு பொருளாதாரம் சீர்படும் என்றுதான் தோன்றுகிறது.
//பீர் | Peer said...
இந்நிலை மீண்டும் வராதிருக்க என்ன செய்யவேண்டும்?//
எனக்குத் தெரிந்து..முதலில் ஜாப் செக்யூரிடி வேண்டும்.இரண்டாவது..எல்லா நிறுவனங்களிலும் சேம் ஒர்க் சேம் பே என்ற நிலை வேண்டும்.இதனால்..ஒரு நிறுவனத்திலிருந்து..மறு நிறுவனத்திற்கு தாவும் நிலை இருக்காது.வங்கிகளில் காணப்படுவதுபோல பொதுவான யூனியன் வேண்டும்.எல்லாவற்றிற்கும் மேல் பொறாமை உணர்ச்சி விட்டொழிக்க வெண்டும்.
எந்த ஐ.டி.,நிறுவன பேலன்ஸ் சீட்டும் நஷ்டத்தைக் காட்டவில்லை..அதை கவனித்தீர்களா?
//மங்களூர் சிவா said...
/
கற்புநிறை கணினி நிறுவனம்
/
patni
:)))))))))))))))))//
அப்படியா சிவா?
:-)))
//SanjaiGandhi said...
நம்பிக்கை தான் வாழ்க்கை..//
வருகைக்கு நன்றி சஞ்செய்
//Robin said...
கண்மூடித்தனமாக முதலாளித்துவத்தை அமல்படுத்தியதுதான் தற்போதைய பிரச்சனைகளுக்கு காரணம் என்று நினைக்கிறேன். கட்டுபடுத்தப்பட்ட முதாலாளித்துவமே சிறந்தது. விரைவில் குறைகள் களையப்பட்டு பொருளாதாரம் சீர்படும் என்றுதான் தோன்றுகிறது.//
விரைவில் சீர்படும் Robin
மந்தம் ஏற்படாத ஒரே துறை அரசியல் தானுங்க, ஆனா பாருங்க படிச்சவுடனே அரசியல் ஒரு சாக்கடைனு தத்துவம் பேச ஆரம்பிச்சுடறாங்க
///உடன்பிறப்பு said...
மந்தம் ஏற்படாத ஒரே துறை அரசியல் தானுங்க, ஆனா பாருங்க படிச்சவுடனே அரசியல் ஒரு சாக்கடைனு தத்துவம் பேச ஆரம்பிச்சுடறாங்க///
அரசியல்ல முன்னுக்குவர தனித்திறமை வேண்டும்.அது அனைவருக்கும் கிடையாது.சீச்சீ இந்த பழம் புளிக்கும் கதைதான்.நீண்டநாட்கள் கழித்து நம் பதிவு பக்கம் வந்ததற்கு நன்றி உடன்பிறப்பு
Post a Comment