Friday, September 3, 2010

ரசிகர்களை மறந்த ரஜினி




மணமக்களுக்கு வாழ்த்துகள்

திரையுலக பிரபலங்கள் பத்திரிகையில் பேட்டி கொடுக்கும் போது 'ரசிகர்கள் தான் என்னை வாழவைக்கும் தெய்வங்கள்' என்று கூறுவதுண்டு,

அதே போன்று..தான் நடித்த திரைப்பட வெற்றி விழா,கலந்துக் கொள்ளும் பொது மேடைகள் இவற்றில் எதை மறந்தாலும் ரசிகர்களை மறக்காமல் அவர்களுக்கு நன்றியை சொல்வதுண்டு.

ஆனால்..அதுவே..தங்கள் வீட்டு விசேஷங்கள் நடந்தால்..ரசிகர்களை..அவர்களை..இந்நிலைக்குக் கொண்டுவந்த , அவர்களை வாழ வைத்த ரசிகர்களை சௌகரியமாக மறந்து விடுவதுண்டு..
அல்லது..கூட்டம் அதிகம் வந்தால் ..சட்டம்..ஒழுங்கு ..பாதிக்கப்படும் என ஒன்றைக் கூறி..அவர்களை புறக்கணிப்பதுண்டு.

அதற்கு..தானும் விதி விலக்கல்ல என்று நிரூபித்துள்ளார்..சூபர் ஸ்டார் ரஜினிகாந்த்.

தன் மகள் சௌந்தர்யா திருமணத்திற்கு..வரும் ரசிகர்களுக்கு சாப்பாடு போடுவது என்பது ரஜினிக்கு முடியாத செயலல்ல..

ஆனால், அவர் செய்ததோ..திருமணத்திற்கு அவர்கள் வர வேண்டாம்..அவர்கள் ஆசி ஒன்றே போதும் என அறிக்கை விட்டு விட்டார்.

ஆமாம்..மேட்டுக்குடி மக்கள் மட்டுமே கூடப்போகும் நிகழ்ச்சிக்கு..'அவன் 'வந்தால் ஒருவேளை கௌரவக்குறைவாகி விடும் என எண்ணினாரோ என்னவோ.

ஆனால்..மாதம் தவறாது ஒரு சிறுதொகையை..லாரன்ஸ் நடத்தும்..மாற்றுதிறனாளிப் பள்ளிக்கு சௌந்தர்யா வழங்கி வருவதால்..அதற்கு நன்றியாக லாரன்ஸ் 5000 பேருக்கு இன்று அன்னதானம் செய்கிறார்.

நடிகர்கள் யாராயிருந்தாலும்..அவர்கள் படம் வரும் அன்று தோரணம் கட்ட, பால்/பீர் அபிஷேகம் செய்ய மட்டுமே ரசிகர்கள் வேண்டும்.

மீத நேரங்களில்..அவன் தேவையில்லை..

ரஜினி மட்டும் விதிவிலக்கா என்ன.

40 comments:

goma said...

athaanda ithaandaa rajini kaanth naanthaandaa.....

கோவி.கண்ணன் said...

//திரையுலக பிரபலங்கள் பத்திரிகையில் பேட்டி கொடுக்கும் போது 'ரசிகர்கள் தான் என்னை வாழவைக்கும் தெய்வங்கள்' என்று கூறுவதுண்டு,//

முப்பத்து முக்கோடி தெய்வங்களை எந்திரனுக்கு கூப்பிட (மொய் எழுத கூப்பிட) முடியும். திருமணத்திற்கு ? அவ்வளவு இடம் போதாதே !

T.V.ராதாகிருஷ்ணன் said...

மனமிருந்தால் மார்க்கம் உண்டு..
ஜெ நடத்திய திருமணத்தை மறந்து விட்டீர்களா? கோவி.கண்ணன்

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி கோமா

subra said...

இந்த ரசிகர்களுக்கு இன்னும் இது புரியவே இல்லை

அபி அப்பா said...

எப்போதும் லைட்டா லைட்டா ஊசி வச்சு பேசும் நீங்க இந்த அளவு வெளிப்படையா பேசினதுக்கு காரணம் அந்த ரஜினி பேட்டி தான்!

KANTHANAAR said...

ரஜினிய எப்படி குறை சொல்ல முடியும்... இந்த வீணாப்போன ரசிகன்தான் வெறி பிடிச்ச மாதிரி அலையறானே.. போதாக் குறைக்கு ரஜினி அரசியலுக்கு வந்தா ஒரு வார்ட் பதவி வாங்கியாவது கொள்ளையடிக்கலாம்னு சில பேரு நினைக்கிறாங்க...அவுங்க இவுங்கள உசுப்பேத்த, நம்பும் ரசிகக் கூட்டம் பாலும் பீரும் ஊத்துது.. ரஜினி பாத்தாரு...என்ன பண்ணினாலும் நம்ம கால சுத்தி வர்றானுங்கன்னு தன் புதிய படத்துக்கு மொய் எழுத உபயோக்ப் படுத்துறாரு...அவர் வீட்டுக் கல்யாணம் என்பது பணக்கார கல்யாணம்.. அப்படித்தான் இருக்கும்... அந்தப் பந்திய எடத்த கேக்க இந்த “ரசிகக் கூட்டத்துக்கு“ அந்தஸ்து தகுதி தேவையில்லையா...

Vidhya Chandrasekaran said...

ப்ராக்டிகலாய் அது சாத்தியமாகுமா சார்? அப்புறம் வந்த ரசிகர்களை சரியாக கவனிக்கவில்லை என்ற குறை வரும். இது அவர் பெர்சனல். பெர்சனல் லைஃபையும் ப்ரொபெஷனல் லைஃபையும் மிக்ஸ் செய்து பார்ப்பது ஆரோக்கியமானதல்லவே.

பிரபலமாய் இருப்பதற்கு இந்த விலை போலிருக்கு?

suki said...

எவளவு தூரம் இதில் தாங்கள் கூறுவதில் தர்க்கம் உள்ளது என்று பார்க்க வேண்டும் , நடைமுறை பிரட்சனைகலயும் பார்க்க வேண்டும் , கூட்ட நெரிசல்கள் ,பாதுகாப்பு காரணங்கள் என்று எத்தனயோ காரணம் இருக்கு, அவருக்கு எது நடந்தாலும் அதை விமர்சிக்க ஒரு சாரர் இங்கு உள்ளனர் , அதை புனித படுத்தவும் ஒரு சாரர் இங்கு உள்ளனர் ..ஜே நடத்திய திருமணத்தில் ஏற்பட்ட கசப்பு நினைவு இல்லையா ? எனக்கு தெரிந்து இது ஒரு நல்ல முடிவு தான்

ராம்ஜி_யாஹூ said...

அங்கிங்கு எனாது படி எங்கும் நிறைந்து இருக்கும் ரஜினி ரசிகர்கள் அத்துனை பெரும் சாரை சாரையாக சென்னைக்கு வந்தால் , பொதுமக்கள், மாணவர்களுக்கு இடையூறு ஏற்படும் என்ற நல்ல எண்ணத்திலேயே ரஜினி தன ரசிகர்களுக்கு அன்பு வேண்டுகோள் விடுத்தார்.

எல்லா ரஜினி ரசிகர்களுக்கும் இதில் உடன்பாடே.

மணிகண்டன் said...

உங்கள் லாஜிக் புல்லரிக்க வைக்கிறது சார் :)-

அரவிந்தன் said...

வர வேண்டாமென்று சொல்ல ஒரு விளம்பரம் கொடுக்க அவசியமென்ன.? அழைப்பிதழ் உள்ளவர்களை மட்டுமே அனுமதியுங்களேன்

T.V.ராதாகிருஷ்ணன் said...

// மணிகண்டன் said...
உங்கள் லாஜிக் புல்லரிக்க வைக்கிறது சார் //

நன்றி மணி..ஆனால் நான் காரணமில்லாமல் இந்த பதிவை போடவில்லை.அரவிந்தனின் பின்னூட்டம் படித்தால் அறிவுஜீவியான உங்களுக்கு ஓரளவு புரியும்

T.V.ராதாகிருஷ்ணன் said...

//suki said...
ஜே நடத்திய திருமணத்தில் ஏற்பட்ட கசப்பு நினைவு இல்லையா ?//

தான் உழைத்த பணத்தில் செலவு செய்தால்..கசப்பு உணர்வு ஏற்பட வழியில்லை.
வருகைக்கு நன்றி suki

மணிகண்டன் said...

அரவிந்தனின் பின்னூட்டம் படித்தும் புரியவில்லை சார் ! நான் இன்னும் அறிவுஜீவி ஆகல போல !

கல்வெட்டு said...

.

இந்தக் கூமுட்டைகள் என்றாவது தனது ஆரம்பபள்ளி ஆசிரியர், அல்லது தான் எல் கேஜியில் படித்த போது தன்னை ரிக்சாவில் இழுத்துப்போன ஒருவர், அல்லது தினமும் பார்க்கும் பஸ் கண்டக்கடர் ....என்று யாருடைய குடும்ப திருமணத்திற்காகவும் "நான் வருகிறேன், ஏன் அழைக்கவில்லை?" என்று வருத்தப்பட்டு இருப்பார்களா?

மேட்டுக்குடி எச்சி இலைதான் வேண்டும் என்றால் நாயாகத்தான் இருக்க வேண்டும்.

கூழாக இருந்தாலும் நாற்றமெடுத்த உடையாக இருந்தாலும் மனிதம் முக்கியம் என்று நினைத்தால் ராஜாவாக் இருக்கலாம்.

குடி வெட்டுபவர் குப்பை கூட்டுபவர் தினமும் ரோட்டில் பார்க்கும் கான்ஸடபிள் குடும்ப திருமணங்களுக்கு அவர்களை வருந்தி அழைக்கவைத்து சென்று வாருங்கள் (அவசியம் கூப்பிடுங்க என்று நச்சரித்து அன்பைக் கொட்டி) ..மனது இலகுவாகும் மனிதம் வரும்.

கொடுத்த காசுக்கு சினிமா நடிப்பை விற்பவனைவிட குறைந்தகாசுக்கு நமக்கு கல்வி கொடுத்தவன் மகான். யாருக்கு இரசிகனாக இருக்கவேண்டும் என்பதை முடிவுசெய்ய வேண்டியது நமது கையில். பன்றிகள் மெடிவு எடுத்தால் முடிவெடுத்தால் அது சாக்கடையாகவும் இருக்கலாம். (டியர் பன்றீஸ் உங்களை வம்பில் இழுத்தமைக்கு மன்னிக்கவும்)

.

Ahamed irshad said...

சரியாக சொன்னீர்கள் சார்..

ஸ்ரீமதன் said...

அவரது தனி வாழ்வில் நடக்கும் ஒரு விசயத்துக்கு ரசிகர்களை அழைக்கவில்லை என்பது சரியே.

விளம்பரம் குடுக்காமல் விட்டு,வந்த ரசிகர்களை உள்ளே விடாமல் திருப்பி அனுப்புவதை விட ,முன்பே தகுந்த காரணங்களை சொல்லி வரவேண்டாம் என்பது சரிதான்.

நீங்கள் சொல்லும் செல்வி.ஜெயலலிதா நடத்திய திருமணத்தினால் இன்னலும்,எரிச்சலும் அடைந்தவர்களே அதிகம்.

கல்வெட்டு said...

.

அனைவரும் சொல்வது போல இதில் நடிகர் ரஜினி மீது குற்றம் இல்லை. அவர‌து தொழில் நடிப்பு.

ஹோட்டலில் முதலாளி அவரது கடையில் வந்து நாஸ்தா சாப்பிட்ட எல்லா வாடிக்கையாளர்களுக்கு எல்லாம் பத்திரிக்கை வைத்து அழைக்க வேண்டுமெ என்று எப்படி எதிர்பார்க்கலாம்? தொழில் வேறு குடும்பம் வேறு.

.

மர்மயோகி said...

ரஜினி தன ரசிகர்களை நன்றாகத்தான் தெரிந்து வைத்து இருக்கிறான்..இந்த மாதிரி பொறுக்கி கூட்டங்களை ஒரு கல்யாணத்துக்கு அழைத்தால் உருப்படுமா?
அதுபோக அந்த கல்யாணத்தை பார்த்து என்னதான் புடுங்கபோறீங்க? போய் வேற வேலை இருந்தா பாருங்கடா..

பாசகி said...

என்ன ஒரு அற்புதமான பதிவு! சிந்தனையை கிளரும் பின்னூட்டங்கள்!

மர்மயோகிகள் வாழும் தஞ்சாவூர் கல்வெட்டு-ல எழுதி வைத்தீர்களானால் பின் வரும் சந்ததியினர் நின் புகழ் பாடும்.

My heartiest wishes to Soundarya and Aswinkumar:)

Thalaivar's disciple,
Basaki

அரவிந்தன் said...

அழையுங்கள் என்று சொல்லவில்லை.

ஆனால் அழைக்காமலே இரசிகர்கள் வந்து தொல்லை தருவார் என்று நினைத்த இரஜினியின் கெட்ட எண்ணம் கண்டிக்கப்படவேண்டியது

அழையா வீட்டுக்கு செல்லுமளவுக்கு தமிழர்கள் என்ன தன்மானம் இல்லாதவர்களா என்ன

ஸ்ரீமதன் said...

@அரவிந்தன்

ஒரு சின்ன உதாரணம் .பிரபல நடிகர்களின் பிறந்த நாளுக்கு கூடத்தான் ரசிகர்களை யாரும் கூப்பிடுவது இல்லை. ஆனால் அவர்களின் வீடு,தெருக்களில் அன்றைய தினம் இருக்கும் கூட்டத்தை பார்த்து இருக்குறீர்களா?எதாவது கடை திறப்பு விழாவிற்கு நடிகர்/நடிகைகள் வந்தால் கூட என்ன ஒரு கூட்டம்? அதனால் எவ்வளவு இடைஞ்சல்கள் ?

இதில் மானம்,ரோஷம் , அழையா விருந்து என்பதெல்லாம் மிக அதிக பட்ச சொற்கள்.ஆர்வத்தினால் வருபவர்கள் நிறைய.அதனால் எந்த இன்னலும் வர கூடாது என்று முன்கூட்டியே விளம்பரம் செய்து அதை தவிர்க்க நினைத்தால் அதையும் விமர்சிப்பதை என்ன சொல்வது ?

Vibunan said...

thamzha.. come out of cinema world..

ஸ்ரீமதன் said...

@கல்வெட்டு

மிக எளிய ஆனால் மிக சரியான எடுத்துக்காட்டு

கல்வெட்டு said...

//
அரவிந்தன்...
அழையா வீட்டுக்கு செல்லுமளவுக்கு தமிழர்கள் என்ன தன்மானம் இல்லாதவர்களா என்ன ?//


அரவிந்தன்,
சொந்த மாமன் வீடு கல்யாணம் அல்லது பெரியப்பா சித்தப்பா...என்று உறவுகளில் வரும் விழாக்கள் போன்றவவைக்களுக்குத்தான் மொன்னைத் தமிழன் வீரம் வீராப்பு எல்லாம்...

ஜிகினா கூட்டம் அல்லது அரசியல் வியாதிகளுக்கு அல்லது கதைப் புக் ரைட்டர்களுக்கு அல்லது ஏதோ ஒரு பிரபலத்திற்கு (பிரபலம் என்றால் என்ன என்பது ரூம் போட்டு பேச வேண்டியது) தானாகவே நேர்ந்துவிட்டுக் கொண்ட கூட்டங்கள் அவர்களைக் காண அவர்கள் கக்கூசில் இருந்தாலும் காத்து இருக்கும்.

நீங்க வேறு... அழைப்பு ..மானம்... என்று சொல்லிக் கொண்டு... :-(((

சினிமா என்பது ஒரு தொழில் என்ற புரிதல் இல்லாமையால்தான் தனது கனவுக் கன்னி யாரையாவது கல்யாணம் செய்துவிட்டாள் அவளை கதாநாயகி அந்தஸ்தில் இருந்து கடாசிவிட்டு அடுத்த கன்னிக்கு போய்விடுகிறான்.

கேட்டால் பென்சில் கொடுக்கிறோம் என்பார்கள். கூமுட்டைகளா, பென்சில் தையல் மெசின் கொடுப்பதை உன் காசில் இருந்து கொடுக்கும் போது உனது அப்பா அல்லது உனது வாத்தியார் அல்லது உனது ஊர்ச் சாக்கடையச் சுத்தம் செய்யும் ஒருவரின் பேரில் கொடுக்க வேண்டியதுதானே?

பிரபலங்களின் புகழில் நிழல்தேடி தானும் ஒரு அங்கீகரிக்கப்பட்ட அல்லக்கை ஆக வேண்டும் என்பதுதான் நமது நிலை. :-((((

.

வருண் said...

***Blogger கல்வெட்டு said...

.

இந்தக் கூமுட்டைகள் என்றாவது தனது ஆரம்பபள்ளி ஆசிரியர், அல்லது தான் எல் கேஜியில் படித்த போது தன்னை ரிக்சாவில் இழுத்துப்போன ஒருவர், அல்லது தினமும் பார்க்கும் பஸ் கண்டக்கடர் ....என்று யாருடைய குடும்ப திருமணத்திற்காகவும் "நான் வருகிறேன், ஏன் அழைக்கவில்லை?" என்று வருத்தப்பட்டு இருப்பார்களா?***

I am sure you are another hypocrite with a BIG MOUTH and talk loudly bcos it is about Rajni!

Tell me you are not one another koomuttai?!

Do you really have any conscience or full of garbage as you sound?

வருண் said...

***September 3, 2010 5:23:00 AM PDT
அரவிந்தன் said...

அழையுங்கள் என்று சொல்லவில்லை.

ஆனால் அழைக்காமலே இரசிகர்கள் வந்து தொல்லை தருவார் என்று நினைத்த இரஜினியின் கெட்ட எண்ணம் கண்டிக்கப்படவேண்டியது***

கெட்ட எண்ணம்? (சிரிப்பு அடக்க முடியலை)

அன்பு ரசிகர்களும் வருவார்கள், இதை வச்சு அரசியல் செய்ய உங்களைமாதிரி சில இழிபிறவிகள் ரசிகர்கள்னு சொல்லிக்கொண்டு வந்து எதாவது இழிச்செயல் செய்யலாம் . செய்துவிட்டு அப்பாவி ரசிகர்கள் மேல் பலியைப் போடலாம் என்பது இல்லாத உங்க மூளைக்கு எட்டாதது பெரிய ஆச்சர்யம் இல்லை, பாருங்க!

அரவிந்தன் said...

//தாவது கடை திறப்பு விழாவிற்கு நடிகர்/நடிகைகள் வந்தால் கூட என்ன ஒரு கூட்டம்? அதனால் எவ்வளவு இடைஞ்சல்கள்//

கூட்டத்தினை ஒழுங்கபடுத்த வேண்டியது போக்குவத்து போலிஸின் கடமை.

சென்னை கத்திபாரா பாலத்தின் மீது எந்திரன் படப்பிடிப்பு நடந்தபோது எத்துனை பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர்.

அரவிந்தன் said...

//இதை வச்சு அரசியல் செய்ய உங்களைமாதிரி சில இழிபிறவிகள் ரசிகர்கள்னு சொல்லிக்கொண்டு வந்து எதாவது இழிச்செயல் செய்யலாம் . செய்துவிட்டு அப்பாவி ரசிகர்கள் மேல் பலியைப் போடலாம் என்பது இல்லாத உங்க மூளைக்கு //

என்ன செய்வது எனக்கு தான் மூளையே இல்லையே அதான் உங்கள மாதிரி கிரிமினிலா யோசிக்க முடியல. இது வேறு ஒருவரின் தளம் அதானால இதோட முடித்துக்கொள்கிறேன்

வருண் said...

**கூட்டத்தினை ஒழுங்கபடுத்த வேண்டியது போக்குவத்து போலிஸின் கடமை.**

தோடா! ரஜிகாந்த் பெண்ணின் திருமணம்தான் போலிஸ்க்கு முக்கியமான மேட்டர் பாருங்க!

There is absolutely no need for wasting polices for this event. Are they not having any other important business?? You sound so ridiculous!

கிரி said...

சந்தோசமா சார் ! :-)

T.V.ராதாகிருஷ்ணன் said...

பின்னூட்டங்கள் மட்டுறுத்தப்பட்டுள்ளன.அவரவர் எண்ணங்களை வெளியிடுவதில் தவறில்லை..ஆனால் அவை தரம் தாழ்ந்ததாய் இருக்கக் கூடாது.சிலர் பின்னூட்டங்கள் நீக்கப்பட்டுள்ளன.அதற்கு மன்னிக்கவும்

settaikkaran said...

சென்னை நகரில் உள்ள ரசிகர்கள் வந்தாலே போதும், எழும்பூரில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டிருக்கும். அண்மையில் திருப்பூரிலிருந்து ஒரு அரசியல்வாதி நானூறு லாரிகளில் வந்து சென்னையைத் திக்குமுக்காட வைத்தது தெரியுமா உங்களுக்கு? இதில் மேட்டுக்குடி என்ற வார்த்தையை அனாவசியமாக உபயோகித்திருக்கிறீர்கள்! :-) நடத்துங்கள்!!

settaikkaran said...

//பின்னூட்டங்கள் மட்டுறுத்தப்பட்டுள்ளன.அவரவர் எண்ணங்களை வெளியிடுவதில் தவறில்லை..ஆனால் அவை தரம் தாழ்ந்ததாய் இருக்கக் கூடாது.சிலர் பின்னூட்டங்கள் நீக்கப்பட்டுள்ளன.அதற்கு மன்னிக்கவும் //

இன்னும் நீக்கப்பட வேண்டிய பின்னூட்டங்கள் ஒன்றிரெண்டு மீதமிருக்கின்றன. உங்களுக்கு ஆதரவாக எழுதிய பின்னூட்டங்கள் மட்டும் மட்டமாக இருந்தால் பரவாயில்லையா? பிரமாதம் உங்களது நியாயம்!

அஹோரி said...

உங்கள் கருத்து தவறு. பிறந்த நாளுக்கு கூட ரசிகர்கள் சென்னை வர வேண்டாம் என்று ரஜினி அறிக்கை கொடுப்பார்.

இந்த வேஸ்ட் மேட்டருக்கு பதில் , கருணாநிதி ஊழல பத்தி பதிவு போட்டு , அறிவுகெட்ட தமிழனுக்கு அறிவூட்ட முயற்சி பண்ணி இருக்கலாம்.

R. Jagannathan said...

Please see the site < idlyvadai@blogspot.com > . They have published a letter from so-called Rajini fans. The comments to the blog invariably condemn the fans as well as the magazine for publishing the letter. I don't think any argument in the comments by your supporters to this blog is convincing. - R. Jagannathan

R.Gopi said...

ஏன் சார்....

விகடன் விவகாரத்துக்காக பதிப்பிலிட்ட அந்த கடிதத்திற்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறீர்கள்... யப்பா, நெனச்சாலே புல்லரிக்குது சார்..

இதே விகடன், தன் வாசகர்கள் எல்லாரையும் தன் இல்ல திருமணத்திற்கு அழைக்குமா, நடைமுறையில் சாத்தியமா என்றெல்லாம் நினைத்து பார்த்திருந்தால், இது போன்று ஒரு பதிவு எழுதுவீரா நீர்...

படம் வெளியாகும் திரையரங்கு உள்ள இடங்களில் படம் வெளியாகும் அன்று கூடுகிற கூட்டத்தையே சமாளிக்க முடிவதில்லை... இதில், அனைவரையும் கூப்பிடு, ஜெயலலிதா வளர்ப்பு மகன் திருமணம் நடத்தியது போல் செயல்படு என்றெல்லாம் சொல்வது மிகவும் குழந்தை தனமானது என்று தெரியாமலா எழுதுகிறீர்கள்!?

எப்படியோ எண்ணிக்கைக்கு இன்னொரு பதிவாச்சு....

நடத்துங்க....

இந்த “உண்மையான ஆதங்கமோ அல்லது பொறாமையோ” எதுவா இருந்தாலும், எல்லா மேட்டர்லயும் காட்டறீங்களான்னு பார்ப்போம்....

R.Gopi said...

//அஹோரி said...
உங்கள் கருத்து தவறு. பிறந்த நாளுக்கு கூட ரசிகர்கள் சென்னை வர வேண்டாம் என்று ரஜினி அறிக்கை கொடுப்பார்.

இந்த வேஸ்ட் மேட்டருக்கு பதில் , கருணாநிதி ஊழல பத்தி பதிவு போட்டு , அறிவுகெட்ட தமிழனுக்கு அறிவூட்ட //

*********

இந்த கருத்தை நான் ஆமோதிக்கிறேன்

T.V.ராதாகிருஷ்ணன் said...

அன்பின் கோபி
வணக்கம்
முதலில் உங்களுக்கு ஒன்றை தெளிவுபடுத்த விரும்புகிறேன்.
விகடனில் வெளிவருவதற்கு முன்னரே..நான் இந்த இடுகையை எழுதிவிட்டேன்.
குசேலர் தோல்விக்குப் பின் ராகவேந்திரா மண்டபத்தில் ரசிகமன்றத்தினரை அவர் சந்திக்க வில்லையா? அது எப்படி சாத்தியமாயிற்று..
இப்போது கூட திருமணத்திற்கு முன் அவரது அறிக்கையே சற்று வருத்தத்தைத் தந்தது.
நாணயத்திற்கு இரு பக்கம் உண்டு என்பது போல..
எனது கருத்து போல உங்களுக்கும் ஒரு கருத்து இருக்கும்.அதை நான் மதிக்கிறேன்.
அதனால் உங்கள் பின்னூட்டம் எனக்கு புல்லரிக்கவில்லை.
மற்றபடி என் இடுகைகளில் அவ்வப்போது.என் ஆதங்கங்களை விருப்பு,வெறுப்பின்றியே எழுதியே வருகிறேன்.
நன்றி

அன்புடன்
ராதாகிருஷ்ணன்