Monday, September 20, 2010

அம்மா- தன்னலம் கருதாத ஒரே உயிர்



சமீபத்தில் ஒரு வார இதழில் ஒரு பெண் மருத்துவர்..அம்மாவின் பாசத்தையே ஒரு கேள்விக்குறியாக்கி இருக்கிறார்.

சமீபகாலங்களாக இவர் எதை எழுதினாலும்..படிக்க, கேட்க ஆட்கள் இருப்பதாக எண்ணிக்கொண்டுள்ளார்.

ஆனால் சமீபத்திய அஸ்திரங்கள் யாரும் ஏற்றுக்கொள்ளக் கூடிய வகையில் இல்லை.

1) பத்து மாதம் சுமந்து பெற்றேன் என்றாலே..பையனுக்கு அம்மா சென்டிமென்ட் அதிகம் என்பதால் சரெண்டர் ஆகி விடுவானாம்.ஆனால் மகள் அப்படியில்லையாம்.காரணம் அவளும் பிற்காலத்தில் பிரசிவிப்பதால்தானாம்...
உண்மையில், நடைமுறையில்..பெண்கள் தான் தாயிடம் பாசமாய் இருக்கிறார்கள்..காரணம் அவர்கள் தான் வலியை உணர்கிறவர்கள்.
அம்மா சென்டிமென்ட் உள்ளவர்கள் அறிவியல் பூர்வமாக சிந்திக்கும் திறன் அற்றவர்களாம்..
என்னே..ஒரு கண்டுபிடிப்பு.

2)ஆண் குழந்தையை பெற்றெடுப்பது..அவளே செய்த சாதனையாக பெண்கள் நினைக்கிறார்களாம்..தன் மகனை அதனால் பொத்தி பொத்தி வளர்க்கிறார்களாம்..இப்படி நடப்பதால் பையன் முதிர்ச்சி இல்லாமல் ஆகிறானாம்.
ஐம்பது வருடங்களுக்குமுன்னர் இருக்கிறார் அவர்..
நிகழ்காலத்திற்கு வந்து..நாட்டு நடப்பைப் பார்க்கட்டும்..இருபது வயது எட்டுவதற்குள்ளேயே இன்றைய இளைஞன் தன் எதிர்கால வாழ்வை திட்டமிட்டுக் கொள்கிறான்.சென்ற தலைமுறையில் தான் முதிர்ச்சி இன்றி இருந்தனர்

3)குழந்தை வளரும் போது..தாய்,தந்தை பாசக்கதைகளை சொல்லி வளர்க்கிறாளாம்.இது தன் தாய் தன்னை பாதுகாத்துக் கொள்ள ஒரு உத்தியாம்..
என்ன கதை சொல்லி வளர்க்கிறாள் என்பது இருக்கட்டும்..இன்றைய காலகட்டத்தில்..பெண்கள்..யார் கையையும் எதிர்பார்ப்பதில்லை.ஏன்..கணவனைக் கூட என்று சொல்லலாம்.அவள் வேலைக்குப் போகிறாள்.மற்ற ஆண்களைப் போல.இன்னும் சொல்லப் போனால், குடும்பத்தையே பல இடங்களில் பெண் தன் சம்பாத்தியத்தில் நடத்துகிறாள்.
இவர் சொல்வதைப் பார்த்தால், பெண், கடைசிவரை ஆணாதிக்கத்தில் கட்டுப்பட்டு இருப்பது போல உள்ளது.
நல்ல கதைகளை சொல்லி வளர்க்க வேண்டும்..அவற்றில் நீதி இருக்க வேண்டும்.அது, எந்த கதையாய் இருந்தால் என்ன.
இவர் சொன்னது போல காந்தியின் தாய், ஹரிசந்திரன் கதையையும் சொல்லி வளர்த்ததால்..கடைசிவரை உண்மை பேச வேண்டும் என்ற எண்ணம் பிள்ளைப்பருவத்தில் இருந்தே காந்தியின் மனதில் படிந்ததை ,சௌகரியமாக மறந்து விட்டார்.

4)ஆண் குழந்தைகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வளர்க்கிறார்களாம்..
ஆணுக்கு நிகராக..இன்று பெண்ணை படிக்க வைக்கிறார்கள்..
திருமணத்திற்கு பெண் இன்று நிபந்தனை விதிக்கிறாள்.

தன் பாதுகாப்பை அதிகரித்துக் கொள்ள தாய் ஆணுக்கு அதிக முக்கியத்துவம்,சலுகைகள்,சொகுசுகள் தந்து அவனை வளர்க்கிறார்களாம்.தன் பாதுகாப்பை வளர்த்துக் கொள்ள தாஜா செய்கிறாளாம்.அதனால் மகன்கள் 'நம் மேல் இவளுக்கு எவ்வளவு ஆசை..இவளுக்கு என்ன கைமாறு செய்யப்போகிறேனோ 'என எண்ணுவார்களாம்.என்ன ஒரு கண்டுபிடிப்பு..

அடடா..இவர் அம்மாக்களை என்னமாய் புரிந்து வைத்திருக்கிறார்!!!

அம்மாவிற்கு அனைத்து பிள்ளைகளும் சமம்..இன்னும் சொல்லப் போனால்..தான் துயரம் அடைந்தாலும்..ஆண் குழந்தையாய் இருந்தாலும், பெண் குழந்தையாய் இருந்தாலும் பாகுபாடின்றி பிள்ளைகள் நலம் நாடுபவள் அவள்.

5)ஆண்களுக்கு, சமையல், சலவை,வீட்டு துப்புரவு ஆகிய வேலைகளை சொல்லித் தருவதில்லையாம்.அவன் இதற்கெல்லாம் சுயமாய் பழகிவிட்டால்..அவளை விட்டுவிடுவானோ என எண்ணி.அவர்கள் நிரந்தரமாக தன்னை நம்பி வாழ வேண்டியவர்களாக மகனை ஆக்கிவிடுகிறார்களாம்.கட்டுரையாளர், ஜாக்கிரதையாக இந்த இடத்தில் சில தாய்மார்கள் என்று எழுதிவிட்டார்.

அவர்களுக்கு வீட்டு வேலையெல்லாம் சொல்லித்தராதது..தாய் அல்ல..சமுதாயத்தின் ஆணாதிக்கம்..
அதுவும் சில காலமாக மாறி வருகிறது.இன்று பல வீடுகளில் அனைத்துப் பொறுப்பையும் இரு பாலாரும் கவனித்துக் கொள்கின்றனர்.
நாளடைவில் முற்றிலும் மாறிவிடும்.

தாய், அன்பெனும் ஆயுதத்தை பயன்படுத்தி மகனை அடிமையாக்கிவிடுகிறார்களாம்.இது தெரியாமல்'எங்க அம்மா மாதிரி வருமா?' என கண்மூடித்தனமாக ஆண் நினைக்கிறானாம்..

அபூர்வ கண்டுபிடிப்பு..

தாயின் அன்பிற்கும், பாசத்திற்கும் காரணம்..அவள் சுயநலம் என்னும் அர்த்தத்தில் கட்டுரையை முடிக்கிறார் இவர்.

இவர் தாயையும், அவர் அன்பையும் புரிந்துக் கொண்டதில் ஏதோ ..தவறிழைத்திருக்கிறார் என்றே தோன்றுகிறது.

20 comments:

Chitra said...

அவரின் கட்டுரையை நான் இன்னும் வாசிக்காததால், கருத்து சொல்ல இயலவில்லை.

thiyaa said...

அருமையான தரமான பகிர்வு

ஹுஸைனம்மா said...

நானும் இதேபோலத்தான் எண்ணினேன். கொஞ்சம் ஓவராகத்தான் சொல்வதாகத் தெரிகிறது. இது உண்மையென்றால், நாட்டில் ஏன் முதியோர் இல்லங்கள் பெருகிவருகிறது?

suneel krishnan said...

என்னால் இவர் எழுதியதை ஜீரணிக்கவே முடியவில்லை .இது அவரின் தனி பட்ட கருத்து , இதில் மனோதத்துவ அடிப்படை பெரியதாக எதுவும் இருப்பதாக தெரியவில்லை , ஆங்காங்கே சில விஷயங்கள் உண்மை என்றாலும் இதை முழுமயாக ஏற்றுக்கொள்ள முடியவில்லை .அம்மாவை நேசிப்பதை ஏதோ பெரிய கொலை குற்றம் போல் சித்தரிக்கிறார் .

T.V.ராதாகிருஷ்ணன் said...

//Chitra said...
அவரின் கட்டுரையை நான் இன்னும் வாசிக்காததால், கருத்து சொல்ல இயலவில்லை.//


படித்துவிட்டு கருத்தைச் சொல்லுங்கள் சித்ரா
வருகைக்கு நன்றி

T.V.ராதாகிருஷ்ணன் said...

//தியாவின் பேனா said...
அருமையான தரமான பகிர்வு//

நன்றி தியாவின் பேனா

T.V.ராதாகிருஷ்ணன் said...

//ஹுஸைனம்மா said...
நானும் இதேபோலத்தான் எண்ணினேன். கொஞ்சம் ஓவராகத்தான் சொல்வதாகத் தெரிகிறது. இது உண்மையென்றால், நாட்டில் ஏன் முதியோர் இல்லங்கள் பெருகிவருகிறது?//

வருகைக்கு நன்றி ஹுஸைனம்மா

T.V.ராதாகிருஷ்ணன் said...

//dr suneel krishnan said...
என்னால் இவர் எழுதியதை ஜீரணிக்கவே முடியவில்லை .இது அவரின் தனி பட்ட கருத்து , இதில் மனோதத்துவ அடிப்படை பெரியதாக எதுவும் இருப்பதாக தெரியவில்லை , ஆங்காங்கே சில விஷயங்கள் உண்மை என்றாலும் இதை முழுமயாக ஏற்றுக்கொள்ள முடியவில்லை .அம்மாவை நேசிப்பதை ஏதோ பெரிய கொலை குற்றம் போல் சித்தரிக்கிறார்//

வருகைக்கும்..கருத்திற்கும் நன்றி suneel

Unknown said...

இனி வரும் காலங்களில் ஆண், பெண் என்கிற பேதம் ஒழிந்தே போகும் ...

Thenammai Lakshmanan said...

இப்படி ஒரு கட்டுரையை எழுதியது யார்.. டி வி ஆர்..?

எல் கே said...

நானும் படித்தேன் .. இன்றைக்கு பெரும்பாலான குடும்பங்களில், திருமணத்திற்குப் பின் தனிக்குடித்தனம் இருப்போர் எண்ணிக்கை அதிகம் ஆகி விட்டது. போலி பெண்ணியம் பேசுகின்றாரோ ???

Anonymous said...

அவர் எழுதிய கட்டுரை இருக்கட்டும். உங்கள் தலைப்பே சர்ச்சைக்குரியதே.

தாயோ, தந்தையோ - தன்னலமில்லாப் பாசமில்லை.

எங்கோ ஓரிருவர் இருக்கலாம்.

வாழ்க்கையை கூர்ந்து கவனிக்கும்போது இது தெளிவாகும்.

குழந்தைக்கு டிர்ஸ் போடுவதே ஒரு தன்னலம்தான். அங்கிருந்தே ஆரம்பித்து விடுகிறது.

பேபிக்கு தான் என்ன கலரில் சொக்காய் போடுகிறோம் என்று தெரியுமா?

T.V.ராதாகிருஷ்ணன் said...

// கே.ஆர்.பி.செந்தில் said...
இனி வரும் காலங்களில் ஆண், பெண் என்கிற பேதம் ஒழிந்தே போகும் ...//

உண்மை செந்தில்

T.V.ராதாகிருஷ்ணன் said...

//தேனம்மை லெக்ஷ்மணன் said...
இப்படி ஒரு கட்டுரையை எழுதியது யார்.. டி வி ஆர்..?//

தாயின் குட் டச்..தெரியாதவர்

T.V.ராதாகிருஷ்ணன் said...

//LK said...
நானும் படித்தேன் .. இன்றைக்கு பெரும்பாலான குடும்பங்களில், திருமணத்திற்குப் பின் தனிக்குடித்தனம் இருப்போர் எண்ணிக்கை அதிகம் ஆகி விட்டது. போலி பெண்ணியம் பேசுகின்றாரோ ???//

வருகைக்கு நன்றி LK

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கும்..கருத்திற்கும் நன்றி
Jo Amalan Rayen Fernando

Anonymous said...

இந்த மனநல மருத்துவர்கள் எல்லாம் கொஞ்ச நாள் ஆச்சுன்னா மனநோய் பிடித்தவர்கள் ஆகிடுவாங்க போல.

இவர் எழுதிய இந்த கட்டுரையைப் படித்தவுடன் அப்படித்தான் தோன்றியது.

ஹேமா said...

மூன்று நாட்கள் வீட்டில் இல்லாததால் இப்போதான் கவனிக்கிறேன் இப்பதிவை.சிலரது வாழ்க்கைச் சூழ்நிலை எதுமாதிரியோ அதுமாதிரியே மனநிலையும் எழுத்தும் இருக்கும்.

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி பரிதி நிலவன்

T.V.ராதாகிருஷ்ணன் said...

// ஹேமா said...
மூன்று நாட்கள் வீட்டில் இல்லாததால் இப்போதான் கவனிக்கிறேன் இப்பதிவை.சிலரது வாழ்க்கைச் சூழ்நிலை எதுமாதிரியோ அதுமாதிரியே மனநிலையும் எழுத்தும் இருக்கும்//

நன்றி ஹேமா