அவன்
பசி அகல அன்று
அம்புலியை விண்ணிலிருந்து
அழைத்தாள் அன்னை
இன்று
காமப்பசி தீர
நிலவொன்றை
மண்ணில் சாய்த்தான்
2)கவிதை எழுத
வெள்ளைத் தாளில்
நேர்க்கோடிட்டேன்
ஆகா..அற்புதம்
கவிதை அற்புதம்
என்றிட்டான் ஒருவன்
மற்றவனோ
நேர்மையை வலியுறுத்தும்
பாங்கு அருமை என்றான்
அடுத்தவன்
வாழ்வில் நிமிர்ந்து நில்
வளமாய்ச் சொல்கிறது
என்றான்
நானோ
கவிதையின் கரு தேடி
விட்டத்தைப் பார்த்தேன்
6 comments:
நன்றாகச் சொன்னீர்கள்...........நிலவின் அவதாரம்தான் எத்தனை. இந்த நிலவில்லையென்றால் கவிதைதான் ஏது?.............அவரவர் கற்பனை ஓட்டத்திற்கேற்றவாரு கோடோ அல்லது எதுவாக இருந்தாலும் ...........கவிதை!
நல்லாருக்குங்கய்யா!....
பிரபாகர்...
மாறுபட்ட அபிப்பிராயங்கள் இருந்தாலும் இரண்டு கவிதைகளின் பார்வையும் உங்கள் பக்கத்தில அருமை !
நல்லாருக்குங்க.
வருகைக்கு நன்றி
நித்திலம்-சிப்பிக்குள் முத்து
பிரபாகர்
ஹேமா
செல்வராஜ் ஜெகதீசன்
மிக அருமையான பதிவு
http://denimmohan.blogspot.com/
Post a Comment