Friday, October 1, 2010

தேங்காய்..மாங்காய்..பட்டாணி..சுண்டல் (1-10-10)

1) விழிப்பு..தூக்கம் இப்படி ஏதுமின்றி ஓய்வில்லாமல் இயங்கும் உறுப்பான இதயம் ஒரு நாள் ஒன்றிற்கு லட்சம் தடவைக்கு மேல் துடிக்கிறது



2)அமெரிக்க தொழில்துறையில் சக்தி வாய்ந்த பெண் அதிகாரிகள் பட்டியலில் தொடர்ந்து ஐந்தாவது முறையாக முதலிடத்தைப் பிடித்துள்ளார் பெப்ஸி நிறுவனத் தலைவரும் இந்தியருமான இந்திரா நூயி

3)பாம்புகள் தங்கத்தை விட விலை மதிப்பு மிக்கவையாம்.பாம்பு விஷம் மருத்துவத் துறையில் முக்கிய பங்கு வகிக்கிறது.ஒரு கிராம் நல்ல பாம்பு விஷம் 28000 ஆயிரம் ரூபாய்.கட்டுவிரியன் விஷம் 30000

கண்ணாடி விரியன் 40000.

விஷ எண்ணத்தை மனதில் வைத்துத் திரிபவர்களின் மதிப்பு..???

4)காமென்வெல்த் போட்டிக்காக ஒதுக்கீடு செய்த 70000 கொடி ரூபாயில்..பெருமளவில் ஊழல் நடந்துள்ளது என்றும்..பணிகள் செய்து முடிக்கப் படாமலேயே அதற்கான பணம் கொடுக்கப்பட்டு விட்டது என்றும்..இப்பிரச்னையில் கண்களை மூடிக்கொண்டிருக்க முடியாது என உச்ச நீதி மன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

5)60 ஆண்டுகளாக நடந்து வந்த அயோத்தி வழக்கில் மூன்று நீதிபதிகளின் தீர்ப்பு 8189 பக்கங்களாம். இருப்பதை மூவருக்கு பிரித்துக் கொடுப்பதைச் சொல்வதற்கு இவ்வளவு ஆண்டுகளும்..இவ்வளவு பக்க தீர்ப்பும் எதற்கு..என்கிறார்..வாங்கி வந்த பக்கோடா பொட்டலத்தை தன் மூன்று குழந்தைகளுக்கு பிரித்துக் கொடுத்த ஒரு அப்பா

6)சீனத் திரைப்பட விழாவில் இந்தியாவின் சார்பில் பாண்டியராஜ் இயக்கத்தில் சசிகுமார் தயாரித்த 'பசங்க' படம் திரையிடப் படுகிறது.

7)இந்தியாவின் மா பெரும் பணக்காரர் என்ற இடத்தை ரிலையன்ஸ் அதிபர் முகேஷ் அம்பானி தொடர்ந்து நான்காவது முறையாகப் பிடித்துள்ளார்.அவரது சொத்து மதிப்பு ஒரு லட்சத்து பதினெட்டாயிரத்து நானூற்றுஐம்பது கோடி.

8) இந்த வாரம் நான் படித்த இடுகைகளில் நாம் தெரிந்துக் கொள்ள வேண்டிய இடுகை பனித்துளி ஷங்கரின் http://wwwrasigancom.blogspot.com/2010/09/part-3.html இந்த தொடர் இடுகை.தமிழா தமிழாவின் மகுட இடுகை இந்த வாரம் இதற்குத்தான்.வாழ்த்துகள் ஷங்கர்.

6 comments:

vasu balaji said...

// 8189 பக்கங்களாம். இருப்பதை மூவருக்கு பிரித்துக் கொடுப்பதைச் சொல்வதற்கு இவ்வளவு ஆண்டுகளும்..இவ்வளவு பக்க தீர்ப்பும் எதற்கு..என்கிறார்..வாங்கி வந்த பக்கோடா பொட்டலத்தை தன் மூன்று குழந்தைகளுக்கு பிரித்துக் கொடுத்த ஒரு
அப்பா//

அதுக்குள்ள பகோடா கடைக்கா:))

ஹேமா said...

இதயம் தூங்கினால்தான் நாங்களும் தூங்கிவிடுவோமே.அதனால்தான் விழித்தேயிருக்கிறது இதயம் !

விஷப்பதிவும் அறிந்துகொண்டேன் !

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி Bala

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி ஹேமா

Unknown said...

மிக அருமையான பதிவு

http://denimmohan.blogspot.com/

T.V.ராதாகிருஷ்ணன் said...

//denim said...
மிக அருமையான பதிவு

http://denimmohan.blogspot.com////

நன்றி denim