Tuesday, December 14, 2010

கலைஞரின் அடுக்கடுக்கான சாதனைகள்..

ஸ்ரீலங்காவில் இனி தேசிய கீதம் சிங்களத்தில் மட்டுமே பாடப்படும் என ராஜபக்ஷே அறிவித்திருந்தார்.இதற்கு கண்டனம் தெரிவித்து கலைஞர் ஒரு அறிக்கை வெளியிட்டார்.

இந்நிலையில்..திடீரென ராஜபக்ஷே பல்டி அடித்து..அப்படியேதும் இல்லை என அறிவித்துள்ளார்.

இது கலைஞர் விடுத்த கண்டனத்தின் பலனே என மனசாட்சி உள்ள ஒவ்வொரு தமிழனும் அறிவான்.

அடுத்ததாக தமிழகத்தில் சமீபத்தில் ஏற்பட்ட மழையின் தாக்குதலால் லட்சக்கணக்கான பயிர் நிலங்கள் பாழாகி உள்ளன.சாவு எண்ணிக்கையும் 203 ஆகியுள்ளது.இதையடுத்து மழை, வெள்ளத்தில் பாதிக்கப் பட்ட பகுதிகளில் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள 1600 கோடி நிதி வழங்கிட வேண்டும் எனக் கோரி தி.மு.க., அரசு மத்திய அரசுக்கு அறிக்கை அனுப்பியுள்ளது.இது சம்பந்தமாக கலைஞர் அளித்த அறிக்கையை டி.ஆர்.பாலு பிரதமரிடம் வழங்கினார்.

இன்னும் ஓரிரு நாளில் மத்தியக் குழு ஒன்று நிலைமையை பார்வையிட வரும் என்றும் நிவாரணம் கிடைத்துவிடும் என்றும் தெரிகிறது.

இந்த இரண்டு சாதனைகளும் ..தி.மு.க., அரசிற்கு கிடைத்த அடுத்தடுத்த சாதனைகள் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி

36 comments:

ஹேமா said...

சிவப்புச் சால்வைக்காரன் சொன்னதும் உணமை பல்டி அடிக்கிறதும் உண்மை.கருணாநிதி ஐயா !

சென்னை பித்தன் said...

சோதனை,மன்னிக்கவும்,சாதனை தொடரும்!

வானம்பாடிகள் said...

சார் இதெல்லாம் உங்களுக்கே ஓவரா தெரியல:))

தமிழ் உதயம் said...

வஞ்சப்புகழ்ச்சியா.

kumar said...

இந்த மாதிரி புகழ்ந்து எழுவதற்கு
நீர் ஏதும் கிம்பளம் வாங்கினீர்களா
என்று எனக்கு தெரியவில்லை.

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி ஹேமா

T.V.ராதாகிருஷ்ணன் said...

//சென்னை பித்தன் said...
சோதனை,மன்னிக்கவும்,சாதனை தொடரும்//


வேதனையோடு

T.V.ராதாகிருஷ்ணன் said...

//வானம்பாடிகள் said...
சார் இதெல்லாம் உங்களுக்கே ஓவரா தெரியல:))//

அடடா..இதையே ஓவர் னா..இனி இதுபோல எவ்வளவு சாதனைகள் வரப்போகிறது

T.V.ராதாகிருஷ்ணன் said...

//தமிழ் உதயம் said...
வஞ்சப்புகழ்ச்சியா.//

வஞ்சப்புகழ்ச்சியா..அப்படின்னா..:)))

T.V.ராதாகிருஷ்ணன் said...

//kumar said...
இந்த மாதிரி புகழ்ந்து எழுவதற்கு
நீர் ஏதும் கிம்பளம் வாங்கினீர்களா
என்று எனக்கு தெரியவில்லை.//

சம்பளமே கிடையாது..அப்புறம் தானே கிம்பளம்

bandhu said...

நகைச்சுவை என்ற label பார்க்கவில்லை என்றால் இது சீரியஸ் பதிவு என்று நினைத்திருப்பேன்! நல்ல நகைச்சுவை!

விக்கி உலகம் said...

என்னமோ இந்த உலகம் இன்னமா உங்கள நம்பிட்டுஇருக்கு

அது அவங்க எழுத்து அப்படி!?

T.V.ராதாகிருஷ்ணன் said...

//bandhu said...
நகைச்சுவை என்ற label பார்க்கவில்லை என்றால் இது சீரியஸ் பதிவு என்று நினைத்திருப்பேன்! நல்ல நகைச்சுவை!//

சில பின்னூட்டங்கள் சீரியஸான பதிவு என எண்ணி வந்தது போலத்தான் தெரிகிறது

T.V.ராதாகிருஷ்ணன் said...

//விக்கி உலகம் said...
என்னமோ இந்த உலகம் இன்னமா உங்கள நம்பிட்டுஇருக்கு

அது அவங்க எழுத்து அப்படி!?//

உலகம் நம்பிட்டு இருக்கு:))

மணிகண்டன் said...

//சில பின்னூட்டங்கள் சீரியஸான பதிவு என எண்ணி வந்தது போலத்தான் தெரிகிறது//

அது மாதிரி எழுதுவது தான் சூப்பர். என்ஜாய் பண்ணலாம் !

கே.ஆர்.பி.செந்தில் said...

//சார் இதெல்லாம் உங்களுக்கே ஓவரா தெரியல:))//

வழிமொழிகிறேன்..

மணி (ஆயிரத்தில் ஒருவன்) said...

திஸ் இஸ் டூ மச்....

T.V.ராதாகிருஷ்ணன் said...

//மணிகண்டன் said...
//சில பின்னூட்டங்கள் சீரியஸான பதிவு என எண்ணி வந்தது போலத்தான் தெரிகிறது//

அது மாதிரி எழுதுவது தான் சூப்பர். என்ஜாய் பண்ணலாம் !//

:)))

T.V.ராதாகிருஷ்ணன் said...

///கே.ஆர்.பி.செந்தில் said...
//சார் இதெல்லாம் உங்களுக்கே ஓவரா தெரியல:))//

வழிமொழிகிறேன்.///.

வழிமொழிகிறேன்

T.V.ராதாகிருஷ்ணன் said...

// மணி (ஆயிரத்தில் ஒருவன்) said...
திஸ் இஸ் டூ மச்....//

நகைச்சுவையாய் எடுத்துக்கொள்ளுங்கள்..டூ மச் சாய் தெரியாது

Karthick Chidambaram said...

//இது கலைஞர் விடுத்த கண்டனத்தின் பலனே என மனசாட்சி உள்ள ஒவ்வொரு தமிழனும் அறிவான்.// :)))

ramalingam said...

அப்ப பாராட்டு விழா உண்டா?

துமிழ் said...

1600 கோடி நிதி வழங்கிட வேண்டும் எனக் கோரி தி.மு.க., அரசு மத்திய அரசுக்கு அறிக்கை அனுப்பியுள்ளது//

அதற்காக ஏன் காத்திருக்க வேண்டும்? ராசாட்ட கேட்டா சன்மானமா தந்திட்டுப் போறார் .இதெல்லாம் அவருக்குப் பெரிய காசா?

Anonymous said...

இந்த இரண்டு சாதனைகளும் ..தி.மு.க., அரசிற்கு கிடைத்த அடுத்தடுத்த சாதனைகள்!!

Elagiriyil Kalaignar (KAAKKAAI)utkaara panampazham vizhunthathu!-Pazhamozhi.

மீண்டும் திமுக ஆட்சி!- புதிய தகவல்கள்- கணிப்புகள்! மக்களின் மனநிலை!
Pl visit..,

http://saigokulakrishna.blogspot.com/2010/12.html

நசரேயன் said...

//T.V.ராதாகிருஷ்ணன் said...
///கே.ஆர்.பி.செந்தில் said...
//சார் இதெல்லாம் உங்களுக்கே ஓவரா தெரியல:))//

வழிமொழிகிறேன்.///.

வழிமொழிகிறேன்
//

வழிமொழிகிறேன்

தாராபுரத்தான் said...

வருடக் கடைசியில் இந்த வருட காமெடி பரிசு வாங்கிடுவிங்க..

T.V.ராதாகிருஷ்ணன் said...

//Karthick Chidambaram said...
//இது கலைஞர் விடுத்த கண்டனத்தின் பலனே என மனசாட்சி உள்ள ஒவ்வொரு தமிழனும் அறிவான்.// :)))//

வருகைக்கு நன்றி Karthick Chidambaram

T.V.ராதாகிருஷ்ணன் said...

//ramalingam said...
அப்ப பாராட்டு விழா உண்டா?//

கண்டிப்பாக..ஜெகத்ரட்சகன் ஏற்பாடு செய்வார்

T.V.ராதாகிருஷ்ணன் said...

//துமிழ் said...
1600 கோடி நிதி வழங்கிட வேண்டும் எனக் கோரி தி.மு.க., அரசு மத்திய அரசுக்கு அறிக்கை அனுப்பியுள்ளது//

அதற்காக ஏன் காத்திருக்க வேண்டும்? ராசாட்ட கேட்டா சன்மானமா தந்திட்டுப் போறார் .இதெல்லாம் அவருக்குப் பெரிய காசா?

//


:)))

T.V.ராதாகிருஷ்ணன் said...

// Sai Gokula Krishna said...
இந்த இரண்டு சாதனைகளும் ..தி.மு.க., அரசிற்கு கிடைத்த அடுத்தடுத்த சாதனைகள்!!

Elagiriyil Kalaignar (KAAKKAAI)utkaara panampazham vizhunthathu!-//Pazhamozhi.

மீண்டும் திமுக ஆட்சி!- புதிய தகவல்கள்- கணிப்புகள்! மக்களின் மனநிலை!
Pl visit..,

http://saigokulakrishna.blogspot.com/2010/12.html//

படித்தேன்..அருமையான அலசல்..
வருகைக்கு நன்றி

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி நசரேயன்

T.V.ராதாகிருஷ்ணன் said...

//தாராபுரத்தான் said...
வருடக் கடைசியில் இந்த வருட காமெடி பரிசு வாங்கிடுவிங்க//

:)))

வேல்பாண்டி said...

உங்கை பதிவு இலைக்காரனை ஞாபக படுத்தியது.

நாஞ்சில் பிரதாப்™ said...

சார் உங்களுக்கு இந்தமாதிரி நகைச்சுவை பதிவுலல்லாம் கூட எழுதவருமா... சொல்லவே இல்ல....:)))

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி வேல்பாண்டி

T.V.ராதாகிருஷ்ணன் said...

//நாஞ்சில் பிரதாப்™ said...
சார் உங்களுக்கு இந்தமாதிரி நகைச்சுவை பதிவுலல்லாம் கூட எழுதவருமா... சொல்லவே இல்ல....:)))//
என்ன..இப்படி சொல்லிட்டீங்க..நான் எவ்வளவு சிரிப்பா சிரிச்சிருக்கிறேன்