Sunday, December 19, 2010

திரைப்பட இயக்குனர்கள் -10 -ஏ.பி.நாகராஜன்

இத்தொடர் இடுகையில் இன்று 1960 களில் தன்னிகரற்று விளங்கிய இயகுநர் ஏ.பி.நாகராஜன் பற்றி பார்ப்போம்.

1953ல் நால்வர் என்னும் படத்தின் மூலம் ஒரு நடிகராகவும்..கதைவசனகர்த்தாவாகவும் அறிமுகமானவர் ஏ.பி.நாகராஜன்.பின் அவர் நீண்டகாலம் மக்களால் நால்வர் நாகராஜன் என்றே அழைக்கப்பட்டார்.

பின்னர் அவர் நடிகர் வி.கே.ராமசாமியுடன் சேர்ந்து படத்தயாரிப்பில் ஈடுபட்டார்.லக்ஷ்மி பிக்ஷர்ஸ் என்னும் அவர்கள் நிறுவனத்திலிருந்து நாகராஜன் கதை வசனத்தில் நல்ல இடத்து சம்பந்தம்,வடிவுக்கு வளைகாப்பு ஆகிய படங்கள் வந்தன.

மக்களைப் பெற்ற மகராசி என்னும் படம் மாபெரும் வெற்றி படமாய் நாகராஜனுக்கு அமைந்தது.

பின் ஏ.பி.என்., தனியே விஜயலட்சுமி பிக்சர்ஸ் ஆரம்பித்து 1964ல் சிவாஜியின் நூறாவது படத்தை கதை,வசனம் ,இயக்குநர் பொறுப்பேற்று வெளியிட்டார்.மாபெரும் வெற்றி பெற்ற அப்படம் 'நவராத்திரி'.இதில் சிவாஜி ஒன்பது வேடங்களில் நடித்தார்.

கம்பெனி நடிகர்கள் என்று சொல்வார்கள்.அதுபோல ஏ.பி.என்., படங்களில் சில குறிப்பிட்ட நடிகர்கள் கண்டிப்பாக பங்கேற்பார்கள்.உதாரணத்திற்கு..பி.டி.சம்பந்தம்,டி.என்.சிவதாணு போன்றோர்.

அடுத்து சில ஆண்டுகள் ஏ.பி.என்., காட்டில் மழைதான்.

தொடர்ந்து வெள்ளிவிழா கண்ட திருவிளையாடல்,திருவருட்செல்வர்,திருமால் பெருமை,சரஸ்வதி சபதம்,தில்லானா மோகனாம்பாள்,கந்தன் கருணை (ஏ.எல்.எஸ் தயாரிப்பு)ராஜ ராஜ சோழன் என வெற்றி படங்கள்.அனைத்திலும் சிவாஜி பிதான பாத்திரம் ஏற்றிருப்பார்.

தவிர்த்து..மற்ற நடிகர்கள் நடித்த, வா ராஜா வா,கண்காட்சி,அகத்தியர்,திருமலை தென்குமரி, குமாஸ்தாவின் மகள், மேல் நாட்டு மருமகள் ஆகிய படங்கள் வந்தன.

கடைசியாக 1977ல் எம்.ஜி.ஆர். அவர்களை வைத்து நவரத்தினம் படத்தையெடுத்தார்.

நன்கு படங்களில் சம்பாதித்து..சம்பாதித்த பணத்தை திரையுலகிலேயே இழந்தவர் ஏ.பி.என்.,

தமிழ்திரையுலகு உள்ளவரை கண்டிப்பாக அதன் வரலாற்றில் இவருக்கென ஒரு இடம் உண்டு.

மிகவும் பிரபலமான ..இவர் இயக்கிய திரைப்படத்திலிருந்து ஒரு காட்சி

15 comments:

T.V.ராதாகிருஷ்ணன் said...

Test

vasu balaji said...

தருமியை மறக்க முடியுமா. நன்றி சார். இடுகை தலைப்பு பாருங்க சார்:)

சிநேகிதன் அக்பர் said...

பகிர்வுக்கு நன்றி

ravikumar said...

Execellent director in Tamil field

Chitra said...

தமிழ்திரையுலகு உள்ளவரை கண்டிப்பாக அதன் வரலாற்றில் இவருக்கென ஒரு இடம் உண்டு.


.....அவரை பற்றி கேள்விப்பட்டு இருக்கிறேன் - இன்று நிறைய அறிந்து கொண்டேன். பகிர்வுக்கு நன்றி.

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி சிநேகிதன் அக்பர்

T.V.ராதாகிருஷ்ணன் said...

//வானம்பாடிகள் said...
தருமியை மறக்க முடியுமா. நன்றி சார். இடுகை தலைப்பு பாருங்க சார்:)//வருகைக்கு நன்றி பாலா..
தலைப்பில் இருந்த தவறை திருத்திவிட்டேன்

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி ravikumar

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி Chitra

ஹேமா said...

எத்தனை தலைமுறை மாறினாலும் ரசிக்கும் காட்சிப்பதிவு இது !

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி ஹேமா

Unknown said...

இவர் “அருட்பெருஞ்சோதி” படத்தில் வள்ளலாராக நடித்துள்ளார்.

T.V.ராதாகிருஷ்ணன் said...

//கே.ரவிஷங்கர் said...
இவர் “அருட்பெருஞ்சோதி” படத்தில் வள்ளலாராக நடித்துள்ளார்
//

திருவிளையாடல் நக்கீரரும் அவரே..அருட்பெருஞ்சோதியும் அவரே!
வருகைக்கும், தகவலுக்கும் நன்றி ரவிஷங்கர்

Philosophy Prabhakaran said...

வானம்பாடிகள் சொன்ன வரிகளான தருமியை மறக்க முடியுமா என்பதையே பதிவின் தலைப்பாக வைத்திருக்கலாமே...

T.V.ராதாகிருஷ்ணன் said...

//philosophy prabhakaran said...
வானம்பாடிகள் சொன்ன வரிகளான தருமியை மறக்க முடியுமா என்பதையே பதிவின் தலைப்பாக வைத்திருக்கலாமே.....//

இது திரைப்பட இயக்குனர்கள் பற்றிய தொடர் என்பதால்..அந்தந்த இயக்குநர் பெயரிலேயே இடுகையின் தலைப்பு இடுகிறேன்.ஆகவே தான் இப்படி ஒரு தலைப்பை இட இயலவில்லை