Thursday, December 23, 2010

தேங்காய்..மாங்காய்..பட்டாணி..சுண்டல் (24-12-10)

1)லண்டனில் உள்ள புகழ் பெற்ற madame tussauds மெழுகுச் சிலை அருங்காட்சியகத்தில் விரைவில் ரஜினியின் மெழுகுச் சிலை நிறுவ முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளவாம்.இந்தியாவிலிருந்து ஏற்கனவே அமிதாப்,ஐஸ்வர்யா ராய் ஆகியோருக்கு லண்டன் மியூசியத்தில் மெழுகுச் சிலை வைக்கப்பட்டுள்ளது.

2)சென்னை மாநகரில் மட்டும் செல்ஃபோன் பயன்படுத்துவோர் எண்ணிக்கை ஒரு கோடிக்கும் அதிகமாக உயர்ந்துள்ளதாம்.செல்ஃபோங்களில் நாங்கு லட்சம் பேர் இண்டெர்னெட் பார்க்கிறார்களாம்

3)ஊழல் குறித்த விஷயங்களை கையாளும் போது இந்திய அரசு சில தவறுகளைச் செய்திருக்கலாம்.சில குறைகளும் இருந்திருக்கலாம்.அவற்றையெல்லாம் நிவர்த்தி செய்ய அனைத்து முயற்சிகளும் எடுக்கப் படும் என்றுள்ளார் பிரதமர்.(எப்படியோ,,..வாயைத் திறந்தாரே!)

4)உலகளவில் அவுட்சோர்சிங் பணியை அளிக்கும் முன்னணியில் உள்ள முதல் 30 நாடுகளில் உள்ள ஐ.டி.,நிறுவனங்களிடம் அவுட்சோர்சிங் பணிகளை அளிப்பதில் சிறந்த நாடு எது என்பதை பத்து அம்சங்களின் அடிப்படையில் தேர்வு செய்தனர்.இதில் பெரும்பாலான நிறுவனங்கள் இந்திய ஐ.டி.,நிறுவனங்களையே அவுட்சோர்சிங் பணிக்கு தேர்ந்தெடுத்துள்ளனராம்.

5)ஜார்கண்ட் மாநிலம் ஜம்ஷெட்பூரில் டயர் வியாபாரி சத்னம் சிங் கம்பீர் என்பவர் தன் கடையில் டயர் வாங்கினால் வெங்காயம் இலவசமாகத் தருவதாக அறிவித்துள்ளாராம்.ஒரு டிரக் டயர் வாங்கினால் ஐந்து கிலோ , கார் டயர் எனில் ஒரு கிலோ வெங்காயம் இலவசமாம்.

6)நாட்டில் காய்கறிகள், பழங்கள் போன்றவற்றைப் பாதுகாக்க போதிய வசதிகள் இல்லாததால் ஆண்டுக்கு 6 கோடி டன் காய்கறிகள், பழங்கள் வீணாகின்றனவாம்.இப்படிச் சொன்னவர் மத்திய உணவு மற்றும் விவசாயத் துறை இணை அமைச்சர் கே.வி.தாமஸ்.(வீணானாலும் பரவாயில்லை..இலவசமாகக் கொடுக்க முடியாது என்ற கொள்கையைக் கொண்ட மத்திய அரசு ஆயிற்றே..என்ன செய்ய..)

7)பிரபல சமையல் கலைஞர் தாமோதரன் ..இந்த மாதம் 20 ஆம் தேதி காலை எட்டு மணிக்கு சமைக்கத் தொடங்கி, 21ஆம் தேதி காலை 8.30 வரை சமைத்துள்ளார்.இதில் 617 வகையான 180.64 கிலோ உணவை தணி நபராக செய்து கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்துள்ளாராம்.வாழ்த்துகள் தாமோதரன்.


8)மேலே உள்ள படம் என்ன வென்று தெரிகிறதா...வைகுண்ட ஏகாதசி,சிவராத்திரி ஆகிய நாட்களில் ..'பரமபதம்' விளையாடுவார்கள் முன்பெல்லாம்.கொஞ்சம் ..கொஞ்சமாக இவ் விளையாட்டுப் பழக்கம் அழிந்து வந்தாலும்..மேலை நாடுகளில் , அதையே இப்போது குழந்தைகள் விளையாட ஆரம்பித்துள்ளனராம்.அந்தப் படம் தான் இது.

17 comments:

கோவி.கண்ணன் said...

//மேற்கொள்ளப்பட்டுள்ளவாம்.இந்தியாவிலிருந்து ஏற்கனவே அமிதாப்,ஐஸ்வர்யா ராய் ஆகியோருக்கு லண்டன் மியூசியத்தில் மெழுகுச் சிலை வைக்கப்பட்டுள்ளது.//

காந்தி, இந்திரா, ஷாருக்கான், சச்சின் டெண்டுல்கர் ஆகியோருக்கும் இருக்கு.
:)

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

ம் ...

எல் கே said...

இங்க சொன்ன கேட்க மாட்டாங்க. அங்க போய் இங்க வந்த விளையாடுவாங்க

vasu balaji said...

‘மேடம்’ டஸ்ஸாட்னு இருக்கறதாலதானே எங்க தலைவனுக்கு சிலை வைக்க மனசில்லை:))

T.V.ராதாகிருஷ்ணன் said...

//கோவி.கண்ணன் said...
//மேற்கொள்ளப்பட்டுள்ளவாம்.இந்தியாவிலிருந்து ஏற்கனவே அமிதாப்,ஐஸ்வர்யா ராய் ஆகியோருக்கு லண்டன் மியூசியத்தில் மெழுகுச் சிலை வைக்கப்பட்டுள்ளது.//

காந்தி, இந்திரா, ஷாருக்கான், சச்சின் டெண்டுல்கர் ஆகியோருக்கும் இருக்கு.
:)//


நீங்கள் சொல்லியிருக்கும் பட்டியலில் சாருக்கானை எடுத்துக் கொள்கிறேன்.ஏனெனில் நான் சொல்லியிருப்பது நடிகர்களை மட்டும்.
வருகைக்கு நன்றி

T.V.ராதாகிருஷ்ணன் said...

//கோவி.கண்ணன் said...
//மேற்கொள்ளப்பட்டுள்ளவாம்.இந்தியாவிலிருந்து ஏற்கனவே அமிதாப்,ஐஸ்வர்யா ராய் ஆகியோருக்கு லண்டன் மியூசியத்தில் மெழுகுச் சிலை வைக்கப்பட்டுள்ளது.//

காந்தி, இந்திரா, ஷாருக்கான், சச்சின் டெண்டுல்கர் ஆகியோருக்கும் இருக்கு.
:)//


நீங்கள் சொல்லியிருக்கும் பட்டியலில் சாருக்கானை எடுத்துக் கொள்கிறேன்.ஏனெனில் நான் சொல்லியிருப்பது நடிகர்களை மட்டும்.
வருகைக்கு நன்றி

T.V.ராதாகிருஷ்ணன் said...

// நண்டு @நொரண்டு -ஈரோடு said...
ம் ...//

நன்றி

T.V.ராதாகிருஷ்ணன் said...

//எல் கே said...
இங்க சொன்ன கேட்க மாட்டாங்க. அங்க போய் இங்க வந்த விளையாடுவாங்க//
வருகைக்கு நன்றி எல் கே

T.V.ராதாகிருஷ்ணன் said...

//வானம்பாடிகள் said...
‘மேடம்’ டஸ்ஸாட்னு இருக்கறதாலதானே எங்க தலைவனுக்கு சிலை வைக்க மனசில்லை:))//

:))

வருகைக்கு நன்றி bala

Philosophy Prabhakaran said...

ரஜினி சிலை நியூஸ் நமக்கெல்லாம் இனிப்பு...

Philosophy Prabhakaran said...

விட்டால் பரமபதத்தை ஒலிம்பிக்கில் சேர்த்துவிடுவார்கள் போல...

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி prabakaran

T.V.ராதாகிருஷ்ணன் said...

//philosophy prabhakaran said...
விட்டால் பரமபதத்தை ஒலிம்பிக்கில் சேர்த்துவிடுவார்கள் போல...//

:-)))

கோவி.கண்ணன் said...

//நீங்கள் சொல்லியிருக்கும் பட்டியலில் சாருக்கானை எடுத்துக் கொள்கிறேன்.ஏனெனில் நான் சொல்லியிருப்பது நடிகர்களை மட்டும்.
//

(காந்தியைத் தவிர்த்து) என்னது அரசியல்வாதிகள் நடிகர்கள் இல்லையா ?
:)

மாதேவி said...

தகவல்கள் அறிந்துகொண்டோம்.

T.V.ராதாகிருஷ்ணன் said...

// கோவி.கண்ணன் said...

காந்தியைத் தவிர்த்து) என்னது அரசியல்வாதிகள் நடிகர்கள் இல்லையா ?//

:)))

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி மாதேவி