Friday, December 3, 2010

லண்டன் வாழ் தமிழர்களே..பிடியுங்கள் பாராட்டை
லண்டனில் ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் இலங்கையின் எதிர்காலம் குறித்து ராஜபக்சே சிறப்புரை ஆற்ற இருந்தார்.

அதற்காக லண்டன் சென்றவரை எதிர்த்து லண்டன் விமான நிலையத்திலேயே லண்டன் வாழ் தமிழர்கள் ஆயிரக் கணக்கானோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அவர் இருந்த ஓட்டலைச் சுற்றி ஆர்ப்பாட்டக்காரர்கள்.

தவிர்த்து..ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக் கழகம் முன்னும் ஆயிரக்கணக்கானோர் குவிந்தனர்.

இந்நிலையில் பாதுகாப்பு காரணங்களைக் கருத்தில் கொண்டு..ராஜபக்சேயின் நிகழ்ச்சியை பல்கலைக் கழகம் ரத்து செய்தது.தவிர்த்து அவர் கைது செய்யப்பட வேண்டும் என இங்கிலாந்து பிரதமரிடம் அந்நாட்டு எம்.பி., க்கள் வலியுறுத்தி வந்ததும் குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் போர் நடந்த போது அந் நாட்டு ராணுவத்தினர் தமிழ் பெண்கள் மீது நடத்திய பாலியல் கொடுமையை..அதன் வீடியோ காட்சிகளை அந்நாட்டு சேனல்4 என்ற தொலைக்காட்சி ஒளிபரப்பியது.அவை முழுமையான அளவு ஒளிபரப்பமுடியா அளவு கொடூரமாய் உள்லது எனவும் சேனல் 4 தெரிவித்துள்ளது.

அந்த வீடியோவில் காணப்பட்ட பெண்கள் உடல்களில் ஒன்று விடுதலைப்புலிகளுக்காகப் பணியாற்றிய இசைப்பிரியா என்னும் பத்திரிகையாளப் பெண் என கண்டுபிடித்ததாகத் தெரிகிறது.

லண்டன் தமிழர்களே..உங்களது தாயகமான இந்தியத் தமிழர்களிடையே காணமுடியாத ஒற்றுமையை உங்களிடம் கண்டு மனம் பூரிப்படைகிறது.


எங்களை எல்லாம் வெட்கி

 தலைக்குனிய வைத்து விட்டீர்கள்.


உங்களது செயலுக்கு பிடியுங்கள் பூங்கொத்து.

நன்றி

36 comments:

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

சபாஷ் ...
பிடியுங்கள் பூங்கொத்து ...

ராஜ நடராஜன் said...

பிரிட்டனின் புலம்பெயர் தமிழர்கள் வாழ்த்துக்குரியவர்களே!

goma said...

நல்ல பகிர்வு.
லண்டன்வாழ் தமிழருக்கு வாழ்த்துக்கள்.

Mugundan | முகுந்தன் said...

உண்மையிலேயே பெருமைப்பட வேண்டிய விடயம்.
தமிழன் ஒன்றுபட்டால் அடுத்தவன் அடங்குவான் என நிரூபணம் ஆகி உள்ளது‌.

மோச‌மான‌ குளிரைக் கூட‌ பொருட்ப‌டுத்தாம‌ல் இளையோர்
செய்த‌ ஒழுங்கு ஆச்ச‌ரிய‌மாக‌ உள்ள‌து.

த‌மிழ்நாட்டு த‌மிழனான‌ நான் த‌லைகுனிகிறேன்.கொடூர காட்சியை(video) பார்த்தும் கூட இன்னும் மனசு
இரங்கவில்லை.

மன்னித்துவிடுங்கள்....எங்களை!

Bibiliobibuli said...

இது பற்றி இந்திய பத்திரிகைகள் எதுவுமே குறிப்பாக தமிழக பத்திரிகைகள் செய்திகள் வெளியிட்டனவா தெரிந்து கொள்ள ஆவல். தமிழக தமிழர்களின் மனோ நிலையை எந்த தமிழ்நாட்டு காட்சி ஊடகம் அல்லது பத்திரிகைகள் பிரதிபலிக்கவில்லையா???

ராஜபக்க்ஷேவின் வருகைக்கு எதிரான விமான நிலையைப் போராட்டம் என்பது பிரித்தானியா வாழ் "இளையோரால்" முன்னெடுக்கப்பட்டது.

இந்தப் போராட்டங்களில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை. காரணம், நாங்கள் இழந்ததும், அவமானப்பட்டதும் கொஞ்சமல்லவே. ஆனால், ஐரோப்பா வாழ் தமிழர்கள் நிச்சயாமாய் பாராட்டுக்குரியவர்களே

இது எல்லாத்தையும் விட வேடிக்கை ராஜபக்க்ஷே தனக்கு ஜனநாயகத்தை மதிக்கும் பிரித்தானியாவில் "பேச்சுரிமை" மறுக்கப்பட்டது என்று காமெடி பண்ணியது தான். அதுக்கு Times reporter கேட்ட பதில்கேள்வி இன்னும் அழகு.

Chitra said...

உங்களது செயலுக்கு பிடியுங்கள் பூங்கொத்து.


.... Salute!

T.V.ராதாகிருஷ்ணன் said...

//நண்டு @நொரண்டு -ஈரோடு said...
சபாஷ் ...
பிடியுங்கள் பூங்கொத்து ...//நன்றி நண்டு@ நொரண்டு

T.V.ராதாகிருஷ்ணன் said...

//ராஜ நடராஜன் said...
பிரிட்டனின் புலம்பெயர் தமிழர்கள் வாழ்த்துக்குரியவர்களே//

வருகைக்கு நன்றி ராஜ நடராஜன்

T.V.ராதாகிருஷ்ணன் said...

// goma said...
நல்ல பகிர்வு.
லண்டன்வாழ் தமிழருக்கு வாழ்த்துக்கள்.//


நன்றி goma

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி எண்ணத்துப்பூச்சி

Anonymous said...

// கனடாவில் சன்டிவியில் இந்த செய்தி இருட்டடிப்பு செய்த்தைப் பார்த்தேன், ஆனால் வடநாட்டு Headlines Today-வில் இந்த செய்தியைப் பற்றி அடிக்கடி கூறிகொண்டது மட்டுமில்லாமல், சக பத்திரிக்கையாளர் இசைப்பிரியாவின் மரணத்தை கண்டித்துள்ளனர். //

// ராஜாபக்ஷாவுக்கு சிவப்பு கம்பள வரவேற்பை காமென்வெல்த் விளையாட்டில் தமிழர்களை இழிவுபடுத்திய காங்கிரஸ் அரசு, அவற்றை தடுத்து நிறுத்தாது வேடிக்கைப் பார்த்த திமுக, இரண்டுமே அடுத்த தேர்தலில் உண்மைத் தமிழரின் வாக்குகளை இழப்பது உறுதியாகிவிட்டது//

இந்தியன் என்பதில் இப்போது வெட்கப்படுகிறான், இன்கிலாந்து தமிழர்கள்... உண்மையில் கிரேட் தானுங்க. ராஜ்பக்ஷ் துண்டைக் காணோம் துணியைக் காணோம்னு ஓடிவிட்டார். ஹிஹி

மாயனின் தொலைந்த ப‌க்கம் said...

உங்களையெல்லாம் கட்டிப் பிடித்து ஆரத் தழுவி இந்தாங்க பூக்கொத்து லண்டன் வாழ் தமிழ் சகோதரர்களே!!!!

தமிழ்மலர் said...

உலக அரங்கில் ராசபட்சேவுக்கு கிடைத்திருக்கும் முதல் அடி இது.

லண்டன் தமிழர்களுக்கு ஓராயிரம் தலைவணக்கங்கள்.

ILA (a) இளா said...

poonkothhu enna poonthottame pidiyungal..Hats off

டுபாக்கூர் பதிவர் said...

இவர்களின் போராட்டம் இலங்கையில் அடக்குமுறையில் சிக்கியிருக்கும் தமிழர்களுக்கு எந்த வகையில் பிரயோசனமாயிருக்கும்....யோசித்துப் பாருங்கள். இனி அரச நடவடிக்கைகள் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதாகவே இருக்கும்.

இவர்கள் வாங்கிக் கொள்ளும் பூச்செண்டும், பாராட்டும் உள்ளூர் அப்பாவிகளுக்கு ஒரு மயிரையும் பிடுங்கப் போவதில்லை..ம்ம்ம்ம்

vasu balaji said...

:). பெரிய விஷயமில்லையா சார். உங்களுக்கும் பூங்கொத்து

Unknown said...

ராஜபக்சேயால் லண்டனுக்குள் நுழையவே முடியவில்லை. இந்தியா வந்தால் அவனுக்கு சகல மரியாதையும் கிடைக்கிறது. பேடிகள் நாம் ...

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி
எண்ணத்துப்பூச்சி
Rathi
chitra

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி ANKITHA VARMA

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி
மாயனின் எண்ணங்கள்
தமிழ்மலர்
ILA

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி
டுபாக்கூர் பதிவர்

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி
Bala
கே.ஆர்.பி.செந்தில்

puduvaisiva said...

நேச முள்ள லண்டன் வாழ் தமிழர்களுக்கு ஒரு ராயல் சல்லியூட்

பவள சங்கரி said...

சூப்பர் நண்பரே.........நல்ல பகிர்வு.

Unknown said...

நாம் ஒன்றுபட்டால் வெற்றி நிச்சயம் என்பதற்கு இன்னும் ஒரு எடுத்துக்காட்டு. வாழ்த்துக்களுடன்....தஞ்சாவூரான்.

Unknown said...

சொரணை உள்ள தமிழர்கள் .

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி
புதுவை சிவா♠
நித்திலம்-சிப்பிக்குள் முத்து

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி
தஞ்சாவூரான்
இசைப்பிரியன்

Unknown said...

ராட்ச்சன் ராசபக்சேவை கைது செய்யக்கோரி தூதரகத்திற்கு மனு கொடுக்க சென்ற நாம் தமிழர் இயக்கத்தினரை சென்னையில் தமிழக அரசு கைது செய்துள்ளது.

எதிர்ப்பை தெரிவிக்கச் சென்ற இனமானமுள்ள தமிழர்களை, சோனியாவிற்கு சொம்பு தூக்கும் விதமாக தமிழீன அரசு இவ்வாறு செய்துள்ளது.
இவர்களுக்கு பிரிட்டிஷ்காரர்கள் பரவாயில்லை, அவர்களாவது எதிர்ப்பை தெரிவிக்க அனுமதித்துள்ளனர்.

அம்பிகா said...

நல்ல பகிர்வு.
லண்டன்வாழ் தமிழருக்கு வாழ்த்துக்கள்

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி பரிதி நிலவன்

T.V.ராதாகிருஷ்ணன் said...

நன்றி அம்பிகா

சிவராம்குமார் said...

ஒரு பெரிய வணக்கம்!

T.V.ராதாகிருஷ்ணன் said...

நன்றி சிவா என்கிற சிவராம்குமார்

வசூல்ராஜாmbbs said...

லண்டன்வாழ் தமிழருக்கு வாழ்த்துக்கள்

T.V.ராதாகிருஷ்ணன் said...

நன்றி வசூல்ராஜாmbbs