Sunday, June 19, 2011

இந்த ஆண்டின் அதிசய நிகழ்ச்சி





தேவி வார இதழில் விஜி என்பவர் எழுதியிருந்த இச் செய்தி என்னைக் கவர்ந்தது.அதை உங்களுடன் பகிர்ந்துக் கொள்வதில் மகிழ்ச்சி.

இந்த ஆண்டு ஜூலை மாதம் , 823 ஆண்டுகளுக்கு ஒருமுறை நிகழும் அதிசயம் நிகழவிருக்கிறது.

ஜூலை மாதத்தில் 5 வெள்ளிக்கிழமை,5 சனிக்கிழமை,5 ஞாயிற்றுக்கிழமை வர இருக்கின்றன..இந்த அபூர்வ நிகழ்ச்சியை கணித பாஷையில் 'மனிபேக்' என்பர்.

1-1-11, 11-1-11, 1-11-11, 11-11-11 போன்ற தேதிகளையும் இந்த ஆண்டுதான் பார்க்கமுடியும்.இதில் 1-1-11ம்,11-1-11ம் ஜனவரியில் வந்துவிட்டது.மற்ற இரு தேதிகளும் நவம்பரில் வர இருக்கின்றன.

இந்த ஆண்டில் 11, 111 என்ற எண்களின் அனுபவமும் நமக்கு கிடைத்துள்ளது.

நீங்கள் பிறந்த ஆண்டின் கடைசி இரண்டு எண்களையும், தற்போதைய உங்கள் வயதையும் கூட்டினால் விடை 11, அல்லது 111 வரும்.இது அனைத்து உலக மக்களுக்கும் பொருந்தும்.அது அதிசய கணித நிகழ்ச்சியாகும்.

6 comments:

கோவி.கண்ணன் said...

//ஜூலை மாதத்தில் 5 வெள்ளிக்கிழமை,5 சனிக்கிழமை,5 ஞாயிற்றுக்கிழமை வர இருக்கின்றன..இந்த அபூர்வ நிகழ்ச்சியை கணித பாஷையில் 'மனிபேக்' என்பர்.//

இது ஒரு தவறான தகவல், 5 வெள்ளி, 5 சனி, 5 ஞாயிறு வருவது ஆண்டு தோறும் நடப்பவையே, வெள்ளிக் கிழமையில் முதல் தேதி வந்தால் இவை நிகழும், சென்ற ஆண்டில் அக்டோபர் 2010 லும் இவை நிகழ்ந்தது.
முன்பே இதே தகவலை எழுதி இருந்தீர்கள், இதை முன்பும் குறிப்பிட்டு இருந்தேன் என்றே நினைக்கிறேன்

சி.பி.செந்தில்குமார் said...

அண்ணன் கண்ணன் சொன்னது சரி தான் அண்ணே

T.V.ராதாகிருஷ்ணன் said...

கோவி..நீங்கள் சொல்வது உண்மை..31 தேதிகள் உள்ள மாதத்தின் முதல் நாள் வெள்ளிக்கிழமை வருமேயாயின் ஐந்து வெள்ளி,சனி,ஞாயிறு வரும் என்பதை நானும் அறிவேன்.
இந்த பதிவு தேவி வார இதழில் வந்த தகவலேயன்றி..நான் தரும் தகவல் அல்ல.
ஒரு வேளை ஜுலை மாதம் முதல்நாள் வெள்ளி வந்தால் என்பதை தகவல் கொடுத்தவர் எண்ணியிருப்பார் என எண்ணுகிறேன்.அதுவும் தவறான தகவலாகவே இருக்கும்.
எது எப்படியோ..இது போன்ற சர்ச்சைப் பதிவுகள் இட்டதும் நான் எதிர்ப்பார்க்கும் முதல் பின்னூட்டம் உங்களிடமிருந்தே..
வருகைக்கு நன்றி

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி சி.பி.செந்தில்குமார்

கோவி.கண்ணன் said...

//இது போன்ற சர்ச்சைப் பதிவுகள் இட்டதும் நான் எதிர்ப்பார்க்கும் முதல் பின்னூட்டம் உங்களிடமிருந்தே..
வருகைக்கு நன்றி//

தவறான தகவல்கள் உங்கள் வழியாகச் சென்றுவிடக் கூடாதே என்கிற அக்கரை தான்.
:)

goma said...

அருமையான கணிதக் கணிப்பு.