Thursday, April 19, 2012

அணை உடையும் அபாயம்; 1 லட்சம் பேர் வெளியேற்றம்




அணை உடையும் அபாயம் அதிகரித்து வருவதால் அப்பகுதியிலிருந்து மேலும் ஒரு லட்சம் பேர் வேறு இடங்களுக்குச் செல்ல உத்தரவிடப்பட்டுள்ளனர்.

சீனாவில் உள்ள த்ரீ ஜார்ஜஸ் அணை உடையும் அபாயம் அதிகரித்து வருவதால் அப்பகுதியிலிருந்து மேலும் ஒரு லட்சம் பேர் வேறு இடங்களுக்குச் செல்ல உத்தரவிடப்பட்டுள்ளனர்.

உலகின் மிகப்பெரிய நீர்மின்சாரத் திட்டம் செயல்பட்டு வரும் இந்த அணையின் கரைப்பகுதிகளில் தொடர்ந்து நிலச்சரிவுகள் ஏற்பட்டு வருவதால் அந்த அணை உடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

மிகப்பெரிய இந்த ராட்சத அணையின் 5,386 இடங்கள் அபாய இடங்களாக அதாவது உடையும் பகுதிகளாக சீன அரசு அடையாளம் கண்டுள்ளது.

நிலச்சரிவை தடுக்க 355 இடங்களில் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு உள்ளனர். ஆனால் நிலைமை மோசமாகவே உள்ளது. அடிக்கடி நிலச்சரிவு ஏற்படுவதால் ஒரு வேளை அணை உடைந்து விடுமோ என்ற அச்சம் ஏற்பட்டு உள்ளது.

எனவே இந்த பகுதியில் உள்ள 1 லட்சம் மக்களை நிரந்தரமாக அந்த இடத்தை விட்டு வெளியேற்ற முடிவு செய்துள்ளனர்.

உலகிலேயே பெரிய அணையான இது யாங்சி ஆற்றில் 2006-ம் ஆண்டு கட்டப்பட்டது. இந்த அணையில் இருந்து 22 ஆயிரத்து 500 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. அணை கட்டுமான பணி 1994-ம் ஆண்டு தொடங்கி 2006-ல் முடிவடைந்தது.

இந்த அணையை கட்டி முடிக்க ரூ.2லட்சம் கோடி செலவிடப்பட்டது. அப்போது அணை பகுதியில் இருந்த 14 பெரிய நகரங்கள், 133 சிறு நகரங்கள், 1350 கிராமங்கள் காலி செய்யப்பட்டு 14 லட்சம் மக்கள் வெளியேற்றப்பட்டனர்.

இந்த அணையைக் கட்டி முடித்தவுடன் பல நூற்றாண்டுகளாக யாங்சீ நதியின் பயங்கர வெள்ளத்தினால் ஏற்படும் அபாயம் தவிர்க்கப்பட்டதாக பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது.

ஆனால் புவியியல் மற்றும் சுற்றுச்சூழல் விஞ்ஞானிகள் இவ்வளவு தண்ணீரை தேக்கிவைப்பது பெரிய நிலநடுக்கங்களுக்கு வழி வகுக்கும் என்றும் இதனால் ஆற்றுச் சூழலில் நீண்ட நாளைய சேதத்தையும் ஏற்படுத்தும் என்று எச்சரித்தனர்.

மற்றொரு சுற்றுச்சூழல் குழுவான புரோப் இன்டெர்னேஷனல், சமீபத்தில் விடுத்த எச்சரிக்கையில், யாங்சீ நதியில் கட்டப்பட்டுள்ள 20 அணைகளால் பிரச்சனை ஏற்படும் என்றும் அப்பகுதி நிலநடுக்கப்பகுதி என்பதும் உறுதியான விஷயம் என்றும் தெரிவித்திருந்தனர்.

தகவல் வெப்துனியா

ஜார்ஜஸ் அணை -செய்திகள்

2 comments:

இராஜராஜேஸ்வரி said...

புவியியல் மற்றும் சுற்றுச்சூழல் விஞ்ஞானிகள் இவ்வளவு தண்ணீரை தேக்கிவைப்பது பெரிய நிலநடுக்கங்களுக்கு வழி வகுக்கும் என்றும் இதனால் ஆற்றுச் சூழலில் நீண்ட நாளைய சேதத்தையும் ஏற்படுத்தும் என்று எச்சரித்தனர்.

நிறைய சேதங்களுக்கு அதிக கொள்ளவில் தண்ணீர் தேக்கப்படுதல் காரணமாகிறது..

everestdurai said...

தகவலுக்கு நன்றி