பாக்யா பத்திரிகை ஜூலை 27 ஆம் நாள் இதழில் கேள்வி பதில் பகுதியில் பாக்கிராஜின் இந்த பதில் எனக்கு பிடித்திருந்தது.அதை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
ஒரு உபயோகமான சொல்... இது கேள்வி..அதற்கான அவர் பதில்..
'விழித்திரு' ஏன் இதற்கு முக்க்யத்துவம் என்பது கீழே உள்ள விஷயத்தை படிச்சா புரியும்..
கிரேக்க நாட்டுச் சிற்பி ஒருவர், மனிதனிடம் வந்து போகும் 'சந்தர்ப்பம்' பற்றி வித்தியாசமாக படம் பிடித்துக் காட்டுகிறார். அதுதான் சந்தர்ப்பம் என்னும் சிலை.அந்த சிலைக்கு இரண்டு சிறக்கைகள் இருக்கும் முன்னந்தலையில் கூந்தலும், பின்னந்தலை வழுக்கையுமாக இருக்கும்.
'உனக்கு இறக்கை எதற்கு?'
நான் மக்களிடம் பறந்து செல்வதற்காக'
;முன்னந்தலையில் கூந்தல் எதற்கு?'
'மக்கள் என்னைப் பற்றி கெட்டியாக பிடித்துக் கொள்வதற்காக!'
'ஏன் பெருவிரலில் நிற்கிறாய்?'
"சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தாதோரிடமிருந்து கண நேரத்தில் பறந்தோடி விடுவதற்காக!'
'பின்னந்தலை ஏன் வழுக்கையாக இருக்கிறது?'
"சந்தர்ப்பத்தை தவற விட்டவர்கள் என்னை மீண்டும் பற்றிப் பிடித்துக் கொள்ளாதிருப்பதற்காக"
சிற்பியின் கற்பனை எவ்வளவு அற்புதமானது பாருங்க..இது மூலமா நல்லதோர் பாடத்தை உலகுக்கு உணர்த்துகிறார்.ஒருமுறை சந்தர்ப்பம் நழுவி விட்டால், அதே சந்தர்ப்பம் மீண்டும் வரவே செய்யாது என்பதற்கு இதைவிட வேறு என்ன உதாரணம் வேண்டும்?
2 comments:
நல்ல வாய்ப்பு ஒரு முறை தான் வரும் என்பதை நன்றாகவே சொல்லி உள்ளார்.. வாழ்த்துக்கள்... நன்றி... (த.ம. 2)
என் தளத்தில் : மனிதனின் மிகப்பெரிய எதிரி யார் ?
அருமை அருமை
(TM 3)
Post a Comment