Tuesday, July 31, 2012

டாஸ்மாக் கடைகளை மூட திட்டம்?
 


தமிழ்நாட்டுக்கு அதிக வருவாயை அள்ளிக் கொடுக்கும் மதுபானக் கடைகளை அடியோடு இழுத்து மூடி முழுமையான மதுவிலக்கை அமல்படுத்த தமிழக முதல்வர் ஜெயலலிதா முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் அனைத்து தொகுதிகளையும் கைப்பற்றி மத்திய அரசை தீர்மானிக்கக் கூடிய சக்தியாக உருவாக ஒரே வழி என்ன? என்று ஜெயலலிதா தமது ஆலோசகர்களிடம் விவாதித்திருக்கிறார். அப்போதுதான் தமிழ்நாட்டில் அனைத்து டாஸ்மாக் கடைகளையும் மூடி முழுமையான மதுவிலக்கை அமல்படுத்தினால் நிச்சயம் பெண்களின் வாக்குகள் அனைத்துமே அதிமுகவுக்கு கிடைக்கும் என்றும் முன்னுதாரணம் மிக்க அரசாக தமிழக அரசு திகழும் என்றும் கூறப்பட்டிருக்கிறது.
இதனை முழு அளவில் ஜெயலலிதாவும் ஏற்றுக் கொண்டதாகக் கூறப்படுகிறது. நிச்சயமாக தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை மூடி மதுவிலக்கை அமல்படுத்துவது என்ற முடிவில் ஜெயலலிதா உறுதியாக இருந்தாலும் டாஸ்மாக் அளவுக்கு வருவாய் தரக் கூடிய வழிகள் என்ன என்பதுதான் அவர் எழுப்பிய கேள்வி. இது தொடர்பாக ஆராய்ந்து அறிக்கை தரவும் மூத்த அதிகாரிகளுக்கு ஜெயலலிதா உத்தரவிட்டிருக்கிறார் என்றும் கூறப்படுகிறது.
இந்தியாவில் குஜராத் மாநிலத்தில் முழுமையான அளவில் மதுவிலக்கு நடைமுறையில் உள்ள போதும் லாபம் ஈட்டக் கூடிய பட்ஜெட்டை வேளாண்துறை மூலம் சாதித்து வருகிறது அம்மாநில அரசு. குஜராத் அரசு எப்படியான வழிகளில் வருவாயைப் பெருக்குகிறது என்று ஆராயவும் ஜெயலலிதா உத்தரவு பிறப்பித்திருக்கிறாராம்.
அனேகமாக ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தன்றோ அல்லது அக்டோபர் 2-ந் தேதி காந்தி ஜெயந்தியன்றோ இதற்கான அதிரடி அறிவிப்பை தமிழக முதல்வர் வெளியிட வாய்ப்பிருப்பதாகக் கூறப்படுகிறது.

(தட்ஸ்தமிழ்)

9 comments:

அமுதா கிருஷ்ணா said...

சூப்பர் நியூஸ்.எங்கள் வீட்டு பக்கம் 2 கி.மீ தூரத்தில் நான்கு அட்டகாசமான கடைகள் பார் வசதியுடன்.எப்படா தொலையும் என்று என்னை போல் நிறைய பேர் காத்து இருக்கிறோம்.

திண்டுக்கல் தனபாலன் said...

நல்லது நடந்தால் சரி தான்.

நன்றி.
(த.ம.1)

அமர பாரதி said...

அம்மாவிடம் இவ்வளவு நம்பிக்கையா, வாழ்த்துக்கள்.  அரசு வருமானத்திற்கு வேண்டுமானால் அதிக வரி விதிப்பு செய்தோ அல்லது கட்டனங்களை உயர்த்தியோ சமாளித்து விடலாம்.  ஆனால் சாராயக் கம்பெனிகளிசம் இருந்து  ஆட்சியாளர்களுக்குக் கிடைக்கும் வருமானத்தையும் பார்களில் இருந்து அடிப் பொடிகளுக்குக் கிடைக்கும் வருமானத்தையும் எப்படி ஈடு கட்டுவது? அப்படியே நடந்தாலும் தேர்தல் முடிந்த உடனேயே டாஸ்மாக் இரு மடங்கு வரும்.  

Anonymous said...

தகுதிக்கு மீறிய ஆசை யாரை விட்டது! தகுதிக்கு மீறிய ஆசையால் தமிழகம் பலனடையுமா? பொறுத்திருந்து பார்ப்போம்! தகவல் பகிர்விற்கு நன்றி!

poomalai palani said...

அம்மாவின் யோசனை நன்றுதான் இருப்பினும் தற்போதுள்ள இலவசங்களில் அம்மாவுக்கு ஏன் இந்த விபரீத ஆசை முதலில் தனது கட்சியில் உள்ள தொண்டர்கள் குடிக்காமல் இருப்பார்களா? இதனால் பெண்கள் போடும் ஒட்டை விட தொண்டர்கள் மூலம் இழக்கும் ஒட்டுகள் தான் அதிகமா இருக்கும் கவனம் கொள்ளட்டும் அம்மா அவர்கள்
அன்புடன்
வை,பூமாலை
சுந்தரபாண்டியம்

poomalai palani said...

அம்மாவின் யோசனை நன்றுதான் இருப்பினும் தற்போதுள்ள இலவசங்களில் அம்மாவுக்கு ஏன் இந்த விபரீத ஆசை முதலில் தனது கட்சியில் உள்ள தொண்டர்கள் குடிக்காமல் இருப்பார்களா? இதனால் பெண்கள் போடும் ஒட்டை விட தொண்டர்கள் மூலம் இழக்கும் ஒட்டுகள் தான் அதிகமா இருக்கும் கவனம் கொள்ளட்டும் அம்மா அவர்கள்
அன்புடன்
வை,பூமாலை
சுந்தரபாண்டியம்

Jayadev Das said...

சூரியன் மேற்க்கே உதிக்கலாம், ஆனால் இது நடக்காது..............

Easy (EZ) Editorial Calendar said...

மிக நல்ல திட்டம்
அம்மா செஞ்சாலும் செஞ்சிடும்நன்றி,
http://www.ezedcal. com (வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம். பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

Avargal Unmaigal said...

கடைகளை மூடுறமாதிரி மூடி பின் மிக நல்ல வசதியான கடையாய் ஒப்ப்ன் பண்ணி அதிக விலைக்கு தன் கட்சியாளர்களிடமே விற்கும் ஐடியா கிடைத்திருக்கும் எல்லாம் உடன் பிறந்த சகோவின் ஐடியாவா இருக்கும் இது நிச்சயம் நடக்கும்