Saturday, September 22, 2012

மரத்தில் காய்க்கிறதா பணம்...




பிரதமர் யாருக்குமே தெரியாத ஒரு உண்மையை மக்களுக்கு சொல்லியுள்ளார்..

'பணம் மரத்திலா காய்க்கிறது" என்று..

சாமான்யனுக்குத் தெரியும்..காலையில் எழுந்து அவசர அவசரமாக கிடைத்ததை அள்ளிப் போட்டுக் கொண்டு..பேருந்தைப் பிடித்து...ஓடி..ஓடி..வேலைக்குப் போய் நாள் முழுதும் பணியாற்றிவிட்டு இல்லம் திரும்பி..அடுத்த நாள் திரும்ப இதையே பின்பற்றி..இப்படி 30 நாட்கள் உழைத்தால்..அந்த மாத சம்பளம் வரும்..பணம் உழைப்பில் காய்க்கிறது என அவனுக்குத் தெரியும்.

தினசரி ஊழியர்கள் கல்லையும், மண்ணையும், சரக்கு மூட்டைகளையும் தூக்கி வேர்த்து பெருக்கெடுக்க நாள் முழுதும் உழைத்தால் தான் அன்றைய கூலி கிடைக்கும்...அவன் சிந்தும் வேர்வையில்தான் பணம் காய்க்கிறது என அவனுக்குத் தெரியும்.

பணம் மரத்தில்தான் ஒரு விதத்தில் காய்க்கிறது..

மரத்திலிருந்து தயாரிக்கப்படும் காகிதம்தான் பணமாகவும் உருவாகிறது..

பணம் மரத்தில் காய்ப்பதில்லை என அவர் யாருக்குச் சொன்னார்...ஒரு வேளை..

..நிலக்கரி, ஸ்பெக்ட்ரம், காமன்வெல்த் கேம் போன்றவை மட்டுமல்ல..அரசியல்வாதிகளே மரத்திலும் ஊழல் செய்து பணம் சம்பாதிக்கலாம்..கோடிக்கணக்கில்..தேக்கு, செம்மரம் என கண்முன் கொட்டிக் கிடக்கிறது..அதைப்பாருங்கள்..என தன் அமைச்சர்களுக்கு மறைமுகமாக சொல்கிறாரோ என்னவோ பிரதமர்.

4 comments:

Kumar said...

//தேக்கு, செம்மரம் என கண்முன் கொட்டிக் கிடக்கிறது..அதைப்பாருங்கள்..என தன் அமைச்சர்களுக்கு மறைமுகமாக சொல்கிறாரோ என்னவோ பிரதமர்//

சூப்பர்... இது எப்படி ஏல முறையா அல்லது முதலில் வருபவருகே முன் உரிமையா ?
:-)

Rathnavel Natarajan said...

நிலக்கரி, ஸ்பெக்ட்ரம், காமன்வெல்த் கேம் போன்றவை மட்டுமல்ல..அரசியல்வாதிகளே மரத்திலும் ஊழல் செய்து பணம் சம்பாதிக்கலாம்..கோடிக்கணக்கில்..தேக்கு, செம்மரம் என கண்முன் கொட்டிக் கிடக்கிறது..அதைப்பாருங்கள்..என தன் அமைச்சர்களுக்கு மறைமுகமாக சொல்கிறாரோ என்னவோ பிரதமர்.
அருமை.

விஜய் said...

பெரிய செல்வந்தர்கள் தான் கார்களில் டீசல் உபயோகப்படுத்துகிறார்களாம். அதனால் டீசல் விலை உயர்வால் ஏழைகள் பாதிக்கப்பட மாட்டார்கள் என்று அந்த ஆள் டிவியில் சொல்லும்போது எனக்கு வந்த ஆத்திரத்துக்கு அளவே இல்லை.

திண்டுக்கல் தனபாலன் said...

முடிவில் சொன்னீர்களே... உண்மையாக இருக்கலாம்...