ஒன்று எங்கள் ஜாதியே.....ஒன்று எங்கள் நீதியே.... நம்மால் முடியாதது....யாராலும் முடியாது.. யாராலும் முடியாதது....நம்மால் முடியும்
Thursday, December 20, 2012
குஜராத் தேர்தலில் மோடி படு தோல்வி...
குஜராத் மாநிலத்திற்கு நடந்த சட்டசபைத் தேர்தலில் ..முதல்வர் மோடி தலைமையில் ஆன பாஜக படு தோல்வியடைந்துள்ளது.
2007 ஆம் ஆண்டு தேர்தலில் 182 இடங்கள் கொண்ட சட்டசபைக்கான தொகுதிகளில் மோடி தலைமையிலான பாரதிய ஜனதா கட்சி 117 இடங்களைப் பெற்று வெற்றி வாகை சூடியது.எதிர்த்து போட்டியிட்ட பிரதான கட்சியான காங்கிரஸ் 59 இடங்களில் வெற்றி பெற்றது.
ஆனால் நடந்து முடிந்த சமீபத்திய தேர்தலில் பாஜக அலை வீசுவதாகக் கருத்துக் கணிப்புகள் கூறினாலும்..பாஜக படுதோல்வியடைந்துள்ளது.அக்கட்சி 115 இடங்கள் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.அதாவது கடந்த தேர்தலைவிட இரு இடங்கள் அதற்குக் குறைவாகவே கிடைத்துள்ளது. இது அம்மாநிலத்தில் பாஜகவின் வீழ்ச்சியையும்..மோடியின் தலைமையை மக்கள் புறக்கணிக்கப்பட்டதையே குறிக்கிறது.
அதே நேரத்தில் சென்ற முறை 59 தொகுதிகளில் வென்ற காங்கிரஸ் இம்முறை 61 தொகுதிகளில் வென்று அம்மாநிலத்தில் மாபெரும் வளர்ச்சி பெற்றுள்ளது.
இவ்வீழ்ச்சிக்கு தன் ஆட்சியில் நடந்த தவறுகளே காரணம் என்றும்..அதனால் 6 கோடி மக்களிடம் தான் மன்னிப்புக் கேட்பதாகவும் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
டிஸ்கி - இப்பதிவு ஒரு காங்கிரஸ்காரர் பார்வையில்..(நகைச்சுவையாக எடுத்துக்கொள்ளவும்.)
Subscribe to:
Post Comments (Atom)
7 comments:
avarin vetriya sagitthukolla mudiyamal yedho pidhatrugireergal. neengal ezhudhiyadhai paditthaal sirippu dhan varugiradhu. enna seidhalum gujrat il congress in aatchi kanavu pagal kanavu dhan. seidhigalai thiritthu kurum ungal pokkai partthale neengalum ungal congress katchiyum epparpattavargal enru therigiradhi. thannai meendum meendum aatchiyil amaravaikkum makkalai partthu avar unarchi mugudhiyil thavaru seidhu irundhal mannippu kori irukkiraar. avar vetri adaindhu irundhalum adakkamaaga irukkirar. tholvi adaindha congress matrum ungalai ponra andha katchiyin thondargalin pechu il adatthavarin vetri yai adatthavarin uyarvinai ungalaal sagikka mudiyavillai. tholviyai oppukollum andha mana pakkuvam illai. yedhedho tholvi virakkthiyil ularugireergal. ungalin thalaippe ungalin mattamaana ganadhisayangalai appattamaaga velippadutthugiradhu, makkal theerpai kevala paduttha vendam. 2014 il modi pm aaavadhu urudhi. appodhum ungalai ponravargal blog il pulambithalla dhan poginreergal. paavam. ungalaalum vera enna dhan seiyya mudiyum. illayaa?
உங்க பேர் என்ன T.V.R.K வா இல்ல M.K. வா??!!
வருகைக்கு நன்றி ஹரி...நீங்கள் இவ்வளவு வெள்ளந்தியா?
வக்ன்சப்புகழ்ச்சிப் பற்றி தெரியாதா?
வருகைக்கு நன்றி ik way
"குஜராத் தேர்தலில் மோடி படு தோல்வி..." wrong heading. Even to make fun you can't use this. 'cause, personally Modi did not loose. You should have thought about alternative heading like, "குஜராத்தில் மோடியின் செல்வாக்கு அதல பாதாளத்துக்குச் சென்றது, காங்கிரஸ் செல்வாக்கு பிரமிக்கத் தக்க வளர்ச்சி"
பதிவை ரசித்தேன்.
***ஆனால் நடந்து முடிந்த சமீபத்திய தேர்தலில் பாஜக அலை வீசுவதாகக் கருத்துக் கணிப்புகள் கூறினாலும்..பாஜக படுதோல்வியடைந்துள்ளது.அக்கட்சி 115 இடங்கள் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.அதாவது கடந்த தேர்தலைவிட இரு இடங்கள் அதற்குக் குறைவாகவே கிடைத்துள்ளது.****
என்ன சார் நீங்களும் புதுசாக் காமெண்ட் மாடெரேசன் ஆரம்பிச்சுட்டீங்க!!!
உங்க பதிவால் குஜராத்தில் எத்தனை மொத்த இடங்கள், கடந்த தேர்தலில் எத்தனை இடத்தை மோடி பிடிச்சார், இப்போ எத்தனை பிடிச்சு இருக்கார்னு தெரிந்து கொண்டேன். :)
உங்க இ-மெயில் நோட்டிஃபிகேஷன் ஏதோ வந்து கொண்டே இருக்கு! என்னனு பார்க்கிறேன்.. :)
Post a Comment