ஒன்று எங்கள் ஜாதியே.....ஒன்று எங்கள் நீதியே.... நம்மால் முடியாதது....யாராலும் முடியாது.. யாராலும் முடியாதது....நம்மால் முடியும்
Sunday, January 6, 2013
2012ல் நான் பார்த்த சிறந்த மலையாளப் படங்கள்...
1) உஸ்தாத் ஹோட்டல் - அன்வர் ரஷீத் இயக்கத்தில் மம்முட்டியின் மகன் சல்மான் கதாநாயகனாக நடித்த படம்.புதிய கதைக்களம்.
திலகனின் அருமையான நடிப்பு.
2)ஆகாசத்திண்டே நிறம்- டாக்டர் பிஜு இயக்கத்தில் நெடுமுடி வேணு,இந்திரஜித்,அமலா பால் நடித்திருந்தனர்.அந்தமானில் முழுதும் படமாக்கப்பட்டது.ராதாகிருஷ்ணனில் ஒளிப்பதிவில் குளுமையான இயற்கைக் காட்சிகள்..மனதைக் கொள்ளைக் கொண்டன.
3)ஸ்பிரிட் - மோகன் லால், திலகன் நடித்தது.குடியின் கேட்டை சொன்ன படம்.பாக்ஸ் ஆஃபீஸ் ஹிட்
4)தட்டாதின் மரயாது - இளம் ரசிகர்களுக்கான ரொமாண்டிக் படம்.வினீத் ஸ்ரீனிவாசன் எழுதி, இயக்கியுள்ளார்.ஈஷா தல்வார் கொள்ளை அழகு.இப்படமும் ஹிட்
5)தப்பனா- மம்மூட்டி நடித்த மசாலா படம்.பாக்ஸ் ஆஃபீஸ் ஹிட்
6)ரன் பேபி ரன்- இப்படம் பார்க்கும் போது ஜீவா நடித்த கோ ஞாபகம் வருகிறது.காமிரா மேனாக மோஹன்லால், அறிவிப்பாளராக அமலா பால்.வழக்கமான அரசியல்வாதி, சேனல் ரேட்டிங்க்..என்ற கதை.நல்ல வசூல் படங்களில் இதுவும் ஒன்று.
7)டயமண்ட் நெக்லேஸ் -லால் ஜோஸ் இயக்கம்.ஃபாஹத் ஃபாஸில் (ஃபாசில் மகன்). நல்ல கதயம்சம்.பார்க்க வேண்டிய படம்.துபாயிலேயே எடுக்கப்பட்ட படம்.
8)ஃப்ரைடே- நெடுமுடி வேணு, ஃபாஹத் ஃபாசில் நடிப்பு.பல வித்தியாசமான பாத்திரங்கள்.கடைசியில் படகு மழையில் மாட்டிக்கொண்டு..பயணம் செய்வோர் தப்பிக்கும் காட்சியை அருமையாக எடுத்துள்ளார்கள்.கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம்.
9)22 ஃபீமேல் கோட்டேயம் - ஆஷிக் அபு இயக்கம். ஃபாஹத் ஃபாஸீல்,ரீமாகல்லிங்கல், பிரதாப் போத்தன் நடிப்பு.கதை, இயக்கம், நடிப்பு,ஒளிப்பதிவு என அனைத்துமே கலக்கல்.ஒவ்வொன்றும் ஒரு ரகம்.
மொத்தத்தில் மேற்சொன்னவை 2012ல் வந்த என்னைக் கவர்ந்தவை.
சந்தர்ப்பம் கிடைத்தால் இப் படங்களைப் பாருங்கள்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment