Tuesday, January 1, 2013

வைகைப் புயல் வடிவேலு...




தமிழ்த் திரையுலகில் நகைச்சுவை நடிகர்களாக கொடி கட்டி பறந்தவர்கள் பலர்.

தலையானவராக கருதப்படுபவர்..கலைவாணர் அவர்கள்.

எம்.ஆர்.ராதா, பாலையா ஆகியோர் நகைச்சுவையோடு, குணசித்திர நடிப்பிலும் நம்மை கவர்ந்தவர்கள்.

பின்னர், தங்கவேலு, ஏ.கருணாநிதி, நாகேஷ்,தேங்காய் ஸ்ரீனிவாசன், சுருளிராஜன்,கவுண்ட மணி, செந்தில்,விவேக் ஆகியோர் முதன்மை காமடியனாகத் திகழ்ந்தனர்.

மேற்குறிப்பிட்ட அனைவரின் நகைச்சுவை நடிப்பை ரசிகர்கள் மிகவும் ரசித்தனர்.

ஆனால்...சிறுவர்கள்கூட..ஏன்..குழந்தைகள் கூட விரும்பும் நகைச்சுவை நடிகனாக திகழ்ந்தவர் வடிவேலு மட்டுமே..இதை..நான் உறுதியாக கூறமுடியும்.

நரசிம்ம ராவ் போன்றோரையும் சிரிக்க வைக்கும் நடிப்பு...

ஆணி புடுங்குதல்
வடை போச்சே
கைப்புள்ளே
நாய் சேகர்
என்னவச்சு காமெடி பண்ணலியே
நல்லா கிளப்பறாங்கய்யா பீதியை
அவ்வ்வ்வ்வ்வ்வ்
(இப்பதிவு எழுதும் போது உடன் ஞாபகம் வந்தவை இவை.இவர் நடித்த பாத்திரங்கள் பற்றி அவ்வப்போது பதிவிடுகிறேன்)

இப்படி அவர் நம்மிடையே..அன்றாட நடவடிக்கைகளில் அவ்வசனங்களை நம்மை பேச வைத்தார்.

ஆனால்..தனிப்பட்ட நடிகர் ஒருவரை வீழ்த்துவதாக எண்ணிக்கொண்டு..அரசியல் மேடைகளில் இவர் பேசப்போக..திரை வாய்ப்புகளை இழந்தார்.இடைக்காலத்தில் இவர் இடத்தை நிரப்ப வந்தவர்களால்..நம்மை புன்முறுவல் மட்டுமே செய்ய முடிந்த்து.

வடிவேலுவின் இடம் இன்றுவரை வெற்றிடமாகவே உள்ளது.

இந்நிலையில்..மீண்டும் 23ம் புலிகேசி இரண்டாம் பாகத்தில் நடிக்கவுள்ளார் இவர்.

விட்ட இடத்தை இந்த கலைஞன் இந்த ஆண்டாவது பிடிக்க வேண்டும்.

கலைஞனுக்கு அரசியல் தேவையா இல்லையா என்பது கேள்வியில்லை.

அரசியலையும் மிறி அவன் பொதுவானவனாகவே கருதப்பட வேண்டும்.

அவர் மறு பிரவேசத்தையும்...திறமையையும் வரவேற்க தமிழ் ரசிகர்கள் தயாராகவே உள்ளனர்.

வடிவேலு..இந்த ஆண்டு உங்கள் ஆண்டாக இருக்க வாழ்த்துகள்.


5 comments:

Massy spl France. said...

என் எண்ணமும் அதுவே. சமுதாயத்தின் நடப்புகளின் மீதுள்ள அக்கறை காரணமாக வடிவேலு வெளியிட்ட கருத்துக்களை தாங்கிக்கொள்ள தைரியமற்ற அரசியல் கயவர்களால்தான் அவர் இப்படி ஓரம் கட்டப்பட்டார். சிறந்த கலைஞர் ஒருவருக்கு இப்படி இழைக்கப்பட்ட அநீதி அனைத்து தமிழ் (திரை) உலகிற்கும் இழைத்த அநீதியாகும்.
இந்த ஆண்டு வடிவேலுக்கு நல்ல ஆண்டாக அமைய வாழ்த்துகிறேன்.

Jayadev Das said...

அரசியலால் காணமப் போனவங்க சரித்திரத்திலேயே முதல் ஆள் இவர்தான்.

shiva cool said...

மக்கள் அவரை விரும்புவதற்கு காரணம் அவருடைய சிறந்த காமெடி நடிப்புதான். மக்கள் அவரிடம் எதிர் பார்ப்பது அதைதான். தன்னை ரசிக்கிறார்கள் என்ற ஒரே காரணத்திற்காக அவர் சொன்னால் வோட்டு போடுவார்கள் என்று நினைத்து அரசியல் மேடை ஏறியது தவறு.. தனிப்பட்ட சண்டைக்காக சக நடிகரை மிக மிக கேவலமாக பேசியது நாடே அறியும்.. கடைசியில் அவருடைய அரசியல் பிரவேசமும் காமெடியாக போனதே... இனிமேலாவது மக்கள் அவரிடம் எதிர் பார்ப்பதை செய்து மீண்டும் அவர் புகழ் பெற வேண்டும்...

shiva cool said...

மக்கள் அவரை விரும்புவதற்கு காரணம் அவருடைய சிறந்த காமெடி நடிப்புதான். மக்கள் அவரிடம் எதிர் பார்ப்பது அதைதான். தன்னை ரசிக்கிறார்கள் என்ற ஒரே காரணத்திற்காக அவர் சொன்னால் வோட்டு போடுவார்கள் என்று நினைத்து அரசியல் மேடை ஏறியது தவறு.. தனிப்பட்ட சண்டைக்காக சக நடிகரை மிக மிக கேவலமாக பேசியது நாடே அறியும்.. கடைசியில் அவருடைய அரசியல் பிரவேசமும் காமெடியாக போனதே... இனிமேலாவது மக்கள் அவரிடம் எதிர் பார்ப்பதை செய்து மீண்டும் அவர் புகழ் பெற வேண்டும்...

sree said...

"தனிப்பட்ட சண்டைக்காக சக நடிகரை மிக மிக கேவலமாக பேசியது நாடே அறியும்". "தனிபட்ட சண்டை ". அதற்கு காரணம் முதல் படத்தில் இவர் எப்படி அவரால் நடத்தப்பட்டார் என்பதே. எது எப்படியோ நடிக்கவந்தால் சந்தோசமே.