ஒன்று எங்கள் ஜாதியே.....ஒன்று எங்கள் நீதியே.... நம்மால் முடியாதது....யாராலும் முடியாது.. யாராலும் முடியாதது....நம்மால் முடியும்
Tuesday, January 22, 2013
வாய் விட்டு சிரிங்க...
1) அந்த டாக்டர் வியாதியை மெல்ல மெல்லத் தான் குணப்படுத்துவார்னு எப்படி சொல்ற
தூக்கம் வரலேன்னு போனேன்..முதல்ல கொட்டாவி வர மருந்து தரேன்னு கொடுத்திருக்கார்
2)தலைவர் தன் சின்ன வீட்டை ஏன் தன் வீட்டு மாடியிலேயே குடியேற்றிருக்கார்
யாரோ அவர்கிட்ட 'keep it up ' ன்னு சொன்னாங்களாம்
3)என்னோட சமூகக் கதையைப் படிச்சுட்டு மர்மக்கதைன்னு சொல்றீங்களே
திரும்பத் திரும்பப் படிச்சும் என்ன சொல்ல வர்றீங்கன்னு புரியாமல் மர்மமாய் இருக்கே
4)எங்கப்பா சபாநாயகரா இருக்கறது தப்பாப் போச்சு
ஏன்
என் கல்யாணத் தேதியை மறு தேதி குறிப்பிடாமல் ஒத்தி வச்சிட்டார்
5)நம்ம ஃப்ளாட்டும் அடுத்த ஃப்ளாட்டும் பக்கத்திலே பக்கத்திலே இருக்கறதாலே ஒரே problem
ஏன் அப்படி சொல்ற
அவங்க டிவி சேனலை மாத்தினா..நம்ம டிவிலேயும் சேனல் மாறுதே
6)டாக்டர் என் கணவருக்கு தூக்கத்தில நடக்கற வியாதி இருக்கு
அதுக்குப் போய் ஏன் இவ்வளவு கவலைப் படறீங்க
மத்தியானம் ஒரு மணிக்கு ஆஃபீஸ்ல இருந்து வீட்டுக்கு நடந்து வந்துடறார்
Subscribe to:
Post Comments (Atom)
4 comments:
சபாநாயகர் போல் நீங்களும் ஒத்தி வைக்க வேண்டாம் தொடர்ந்து எழுதுங்க
:-))))))
2ம் 4 ம் சூப்பர்...
அருமை நண்பா. புதிய JOKES. இன்னும் நிறைய எழுதுங்க.
Post a Comment