ஒன்று எங்கள் ஜாதியே.....ஒன்று எங்கள் நீதியே.... நம்மால் முடியாதது....யாராலும் முடியாது.. யாராலும் முடியாதது....நம்மால் முடியும்
Sunday, January 6, 2013
கலைஞரும்..ஸ்டாலினும்..
எனக்கு அடுத்தது ஸ்டாலின் தான் என் கலைஞர் கோடி காட்டிவிட்டாராம்..
இதற்கு..ஊடகங்கள், மற்ற கட்சியினர் என்ன அட்டகாசம் செய்து வருகின்றனர்.
ஸ்டாலினைத் தவிர்த்து..அடுத்து வேறு யார் உள்ளனர்.அப்படியே யாரேனும்..தென்பட்டாலும்..அவர்களுக்கும் ஸ்டாலினுக்குமான இடைவெளி எவ்வளவு.
அவசரக்கால நிலையில்..சிறை சென்றவர் ஸ்டாலின்.1967 முதல் கட்சிப் போராட்டங்களில் கலந்து கொண்டவர்.மேயராக சென்னையில் ஆற்றிய பணியை மறக்க முடியுமா?..எம்.எல்.ஏ,வாகவும், துணை முதல்வராகவும், கட்சியின் பொருளாளராகவும்...எல்லாவற்றிற்கும் மேல் கழகத்தின் கடைசித் தொண்டன்வரை இனிமையாக பேசுபவராகவும் உள்ளவர் அவர்..கலைஞரின் மகனாக அவர் பிறந்தது தப்பா..?
ஆம்..அது தப்பாய் இருந்ததால் தான் இவர் இவ்வளவு ஆண்டுகள்..அத்தலைவனின் கீழ் பணியாற்ற வேண்டியிருந்தது.
ஒரு தொண்டனுக்கு..தன் கட்சியின் தலைவன் இப்படித்தானே இருக்க வேண்டும் என எதிர்ப்பார்ப்பான்.
இதுவெல்லாம் போகட்டும்..
நீங்கள் அக்கட்சியைச் சேர்ந்தவனல்ல..
அக்கட்சி யாரைத் தேர்ந்தெடுத்தால் உங்களுக்கு என்ன?
அடுத்தவன் வீட்டிற்குள் ஏன் மூக்கை நுழைக்கிறீர்கள்?
ஸ்டாலின்..அழகிரி ..சர்ச்சைகள் எல்லாம்..அக்கட்சியின் தலைவலி..
அந்தத் தலைவலிகயைப் போக்கும் மருந்து அவர்களுக்குத் தெரியும்.
உங்கள் அரைகுறை வைத்தியம் அவர்களுக்கு வேண்டாம்.
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
உங்கள் கூற்று முற்றிலும் சரியே! சம்மந்தம் இல்லாதவர்கள் சிண்டு முடியும் வேலையை செய்வது தேவையற்றது.
அந்தத் தலைவலி நாட்டைப் பாதிக்குமோ என்றே பலரும் கருத்துரையிடுவது.
உங்கள் வீட்டில் யார் வாரிசு என்று யாரும் கவலைப் படுவதில்லை.
Post a Comment