Showing posts with label அரசியல் தேர்தல் 2009. Show all posts
Showing posts with label அரசியல் தேர்தல் 2009. Show all posts

Monday, April 6, 2009

திருமா...வை ஜெயிக்க விடமாட்டோம் - ராமதாஸ்

சமீபத்தில் பத்திரிகை நிருபர்களுக்கு பேட்டி அளித்த மருத்துவர் அய்யா ராமதாஸிடம்..பா.ம.க., போட்டியிடும் தொகுதிகளில் ..அவர்களை தோற்கடிப்போம் என தி.மு.க., அமைச்சர்களும்,மாவட்ட செயலாளர்களும் சபதம் போட்டுள்ளதாகத் தெரிகிறதே..என்று கேட்கப்பட்டது.

அதற்கு அவர்..'சென்ற தேர்தலில் அவர்களுடன் கூட்டணி இருந்த போதும்..நாங்கள் வெற்றி அடையக்கூடாது..என்றுதான் வேலை செய்தார்கள்.அதையும் மீறி எங்கள் வேட்பாளர்கள் போட்டியிட்ட தொகுதிகளில் எல்லாம் வெற்றி பெற்றனர். அப்படி வெற்றி பெற்ற எங்கள் எம்.பி.,க்களை பிரதமர், சோனியா, சபாநாயகர் என அனைவருமே பாராட்டினர் 'என்றார்.

அவர் மேலும் கூறுகையில் ' சில இளைஞர்களை நான் தேர்ந்தெடுத்து..அவர்களுக்கு அரசியல் பயிற்சி அளித்து..லண்டனில் இருக்கும் 'எகனாமிக் ஸ்கூல்' மற்றும் ஹார்வர்ட் பல்கலைக் கழகத்திற்குப் பயிற்சிக்கு அனுப்பிவைத்தேன்.அவர்கள் தற்போது பயிற்சியை முடித்துவிட்டு..அடுத்த கட்டம் சென்றுள்ளார்கள்.அவர்கள்தான் 2011 சட்டமன்ற தேர்தலில் ஸ்டார் வேட்பாளர்கள்' என்றார்.

அன்புத்தம்பி..திருமாவளவனுடன்..சிதம்பரத்தில் போட்டி போலிருக்கிறதே..என்று கேட்கப்பட்டபோது...

'தம்பிக்கு..அங்கே..என்ன நெருக்கடின்னு தெரியலே..ஆனால் பா.ம.க., கூட்டணி தர்மத்தை விட்டுக் கொடுக்காது..திருமா...சிதம்பரத்தில்..போட்டியிட்டால்...நாங்கள் அவரை ஜெயிக்க விட மாட்டோம்'என்றார்.

Sunday, April 5, 2009

தயாநிதி மாறன் - மத்திய சென்னை வேட்பாளர் - சிறு குறிப்பு வரைக


நேற்று கலைஞர் தி.மு.க., வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டார்.அதன்படி ..எதிர்ப்பார்த்தபடி..தயாநிதி மாறன், இளங்கோவன்,பாலு, நெப்போலியன்,ராஜா,ரித்தீஷ், ஆகியவர்கள்..கிட்டத்தட்ட கேட்ட தொகுதியை பெற்றுள்ளனர்.தனக்கு எந்த தொகுதி வேண்டும்..என மனு கொடுக்காதவர்...அவரின் ஆதரவாளர்கள்..அவர் தரப்பில்..மனு கொடுத்ததை வைத்து மதுரை வேட்பாளர் தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கிறார்.

இந்த தேர்வுக்கு...3 நாட்கள்..540 பேரிடம்..நேர்காணல் தேவையா? நமக்கு தெரியவில்லை.

பாவம் கலைஞர்...அவரை நீண்ட நேரம்..இல்லை..இல்லை..நீண்டநாட்கள் ..அவர் உடல் நிலை சரியில்லாத நேரத்தில் மீண்டும் உட்கார வைத்து விட்டார்கள்.

சரி...தலைப்புக்கு வருவோம்...

வேட்பாளர்களின் வாழ்க்கை குறிப்பை..மாறனின் குடும்ப தினசரியில் எழுதி உள்ளார்கள்.

அதில்..தயாநிதி மாறன் பற்றி...

1966ஆம் ஆண்டு டிசம்பர் 5 ல் பிறந்தார்.லாயோலா கல்லூரியில் பி.ஏ.,(பொருளாதாரம்) படித்தார்.1994ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் திருமணம் ந்டந்தது.மனைவி பிரியா தயாநிதி மாறன்.இவர்களுக்கு ஒரு
மகள், ஒரு மகன் உள்ளனர். என்றெல்லாம்...ஒரு பெரும் தலைவருக்கான சுய சரிதம் பாடியுள்ளனர்.

மேலும்..ஒன் இந்தியா திட்டத்தை அறிமுகப்படுத்தியவர்..தகவல் தொடர்பு மற்றும் தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சராக பணியாற்றியுள்ளார்.. என்றெல்லாம் புகழ் பாடப்பட்டுள்ளது..

மாணவ சமுதாயமே...உழைக்கும் இளைஞர்களே..இவர் பற்றிய விவரங்களை தெரிந்துக் கொள்ளுங்கள்..

யார் கண்டது...நாளைக்கே இவர் சம்பந்தமான கேள்விகள்...நீங்கள் எழுதப்போகும் பரிட்சைகளில் கேட்கக்கூடும்.

உதரணத்திற்கு...1966..டிசம்பர் 5 முக்கியமான தினம் ..அது என்ன ..என்று கேட்டால்...உடனே..தயாநிதி பிறந்த நாள் என்ற ஞாபகம் உங்களுக்கு வரவேண்டும்.

Thursday, April 2, 2009

பா.ம.க., வின் கொள்கையை தெரிந்துக் கொள்ளுங்கள்...

ஒரு கூட்டணியில் இருந்து வெற்றி பெற்று..அதன் சுகங்களை அனுபவித்து விட்டு..அடுத்த தேர்தலில் ஆதாயம் கிடைக்கும் கட்சிக்கு மாறுவதை வழக்கமாகக் கொண்டது பா.ம.க.,

ராமதாஸால் 1980 ல் உருவாக்கப்பட்ட வன்னியர் சங்கம்...9 ஆண்டுகள் கழித்து பாட்டாளி மக்கள் கட்சி என்ற அரசியல் கட்சியாக மாறியது.1989, 1991 ஆம் ஆண்டுகளில் நடந்த மக்களவை தேர்தல்களில் முறையே 26, 31 தொகுதிகளில் தனித்து போட்டியிட்டு...ஒரு இடத்தில் கூட வெற்றி பெறாது படு தோல்வியடைந்தது.

1991ஆம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் பண்ருட்டி தொகுதியில் மட்டும் வெற்றி பெற்ற இக்கட்சி போட்டியிட்ட இடங்கள் 194.

1996ல் மக்களவைக்கும்...சட்டசபைக்கும் ஒன்றாக தேர்தல் நடந்தது.வாழப்பாடி கட்சியுடன் கூட்டணி அமைத்தார் ராமதாஸ்.பா.ம.க., சார்பில் 4 எம்.எல்.ஏ.,க்கள் மட்டுமே வெற்றி பெற்றனர். மக்களவைக்கு பூஜ்யம்.

கூட்டணியில் சேர்ந்தால்தான் ஓடும் என்பதை புரிந்த்க் கொண்ட பா.ம.க.,1998ல் மக்களைக்கு அ.தி.மு.க., பா.ஜ.க., உடன் சேர்ந்து 5 தொகுதிகளில் போட்டியிட்டு 4ல் வென்றது.முதன்முறையாக நாடாளுமன்றத்தில் நுழைந்து..அமைச்சரவையிலும் இடம் பிடித்தது.

அடுத்த ஆண்டே..தி.மு.க.,உடன் கூட்டணி வைத்து மக்களவை தேர்தலில் 8 ல் 5 ஐ வென்றது.மீண்டும் சிலருக்கு அமைச்சர் பதவி.

2001 சட்டசபை தேர்தலில் மீண்டும் அ.தி.மு.க.உடன் கூட்டணி.27 இடங்களில் போட்டி..20 இடங்களில் வெற்றி.

2004ல் மீண்டும் தி.மு.க., 6ல் போட்டி 6 லும் வெற்றி..அமைச்சர் பதவி. கூட்டணி பேரத்தில் ராஜ்யசபா இடம்...அன்புமணி அமைச்சர்.

2006ல் சட்டசபை தேர்தல்...மறந்துபோய் தி.மு.க., கூட்டணியிலேயே இருந்து விட்டது.

2009 நாடாளுமன்ற தேர்தல்..அ.தி.மு.க., கூட்டணி..வழக்கம் போல் மகனுக்கு அடுத்த ஆண்டு ராஜ்ய சபா இடம் பேரம்.

பா.ம.க., கூட்டணி விஷயத்தில் அணி தாவுவதை தனது கொள்கையாகக் கொண்டுள்ள கொள்கை மாறா கட்சி.

Wednesday, April 1, 2009

சந்திரபாபு நாயுடுவிற்கு 17 கோடி ரூபாய் கடன்

சந்திரபாபு நாயுடு ஆந்திராவில் குப்பம் சட்டப்பேரவை தொகுதியில் 30 ஆம் தேதி மனு தாக்கல் செய்தார்.அதில் தனக்கு பலவேறு வங்கிகளில் 17 கோடிக்குமேல் கடன் இருப்பதாகவும்..தனக்கு சொந்தமாக ஒரு கார் மட்டுமே இருப்பதாகக் கூறியுள்ளார்.

அவருக்கு சொந்தமாக வீடோ..நிலமோ இல்லை.அவர் கடன் விவரம்...

பேங்க் ஆஃப் பரோடா - 4,01,47,337

விஜயா பாங்க் -6,03,49,777

யுகோ வங்கி -6,42,42,710

எச்.டி.எஃப்.சி -47,47,133

தனியாரிடம் வாங்கியுள்ள கடன்-14,57,419

சொந்த வீடு நிலம் இல்லை

வங்கிகணக்கில் டிபாசிட்-11 லட்சம், கணக்கில் பணம்..23 ஆயிரம்..என்.எஸ்.சி.பாண்ட் 1000, சொந்த கார் அம்பாசிடர்..

நம் கேள்வி...சாமான்யன் வங்கியில் கடன் வாங்கச் சென்றால்...ஆயிரம் கேள்விகள்...ஆயிரம் செக்யூரிட்டிகள் கேட்கும் வங்கிகள்...எதுவும் இல்லாத இவருக்கு எப்படி கோடிகணக்கில் கடன் கொடுத்தன.மத்திய அரசின்..நிதித்துறை...இவ்விஷயத்தில்.. வங்கிகள் மீது நடவடிக்கை எடுக்குமா?

ஐயோ..பாவம்..நாயுடு..எதுவும் சம்பாதிக்க வில்லை என எண்ணும் வாக்காளனுக்கு..அவன் மனைவி பெயரில் உள்ள சொத்துக்களைப் பாருங்கள்.

ரங்காரெட்டி மாவட்டத்தில்...5 ஏக்கர் நிலம்- 9 கோடி
ஹைதராபாத் வீடு-3.3 கோடி
ஹைதராபாத் மற்றொரு வீடு- 6 கோடி
ஹைதராபாத் பஞ்சாரா பங்களா-8.9 கோடி
சென்னையில் விவசாய நிலம்-10.5 கோடி
வங்கி டிபாசிட்-11.26 லட்சம்
கம்பனி ஷேர்-15.69 கோடி
2779 (??!!) கிராம் தங்கம்-34 லட்சம்
32 கிலோ வெள்ளி நகை-5.8 லட்சம்
2 கார்-91.92 லட்சம்
ரொக்க பணம்-23,400

எத்தனை காலம்தான் ஏமாற்றுவார்..இந்த நாட்டிலே...நம்ம நாட்டிலே...

Friday, March 27, 2009

ராமதாஸ் தன்மானம் இல்லாதவரா?

பா.ம.க., அ.தி.மு.க., வுடன் கூட்டணி என அறிவித்தப் பின்..கலைஞர் பத்திரிகை நிருபர்களுக்கு அளித்த பேட்டியில்..

8-7-01 அன்று அ.தி.மு.க., அணியில் இருந்த ராமதாஸ் பத்திரிகைக்கு பேட்டி அளித்தார்...அதில்...தேர்தலுக்கு முன் என் ஆதரவு வேண்டிய அம்மா..தலைமைச்செயலகத்தில்..என்னை ஒரு மணி நேரம் காக்கவைத்தபின் அழைத்தார்.முதல்வர் என்ற மமதையில் ..நாற்காலியில் அமர்ந்தபடியே..என்னை சந்தித்தார்.என் பேச்சை சுருக்கமாக முடித்துக் கொண்டு கிளம்பிவிட்டேன்.

கருணாநிதியுடன் நான் பேச நினைக்கும் போதெல்லாம்..விஷயம் கேள்விப்பட்டதும் கௌரவம் பார்க்காமல் அவரே லைனில் வந்து பேசுவார்.எனது சௌகரியத்தைக் கேட்டு நேரம் ஒதுக்குவார்.அந்த நாகரிகம் தெரியாத மனிஷியோடு இனியும் அரசியல் பண்ன எந்த தன்மான தலைவனும் முன்வரமாட்டார்.

இப்போது கலைஞர்...

நாகரிகம் தெரியாத மனிஷியுடன் அரசியல் பண்ண தன்மானம் உள்ளவன் முன்வரமாட்டான்..என்று பேட்டி கொடுத்த ராமதாஸ் இப்போது எங்கே இருக்கிறார். தன் மகனின் அமைச்சர் பதவி போய் விடக்கூடாது என்பதற்காக , காங்கிரஸோடு கூட்டணி என கடைசி வரை ஏமாற்றி வந்தது யார்?

இப்போது நாம்..

இதே ராமதாஸ் முன்னர் தி.மு.க. கூட்டணியிலிருந்து வெளியே வந்தபோது...'கலைஞரிடம் போனால் கோவணத்தைக் கூட கழட்டிக்கொண்டு விட்டு விடுவார் என்றாரே..அதைச் சொல்ல கலைஞர் ஏன் மறந்தார்?

கலைஞர் உள்பட...அரசியல்வாதிகள் கூட்டணிக்கு தகுந்தவாறு பேசக்கூடியவர்கள்தானே...

ஏமாறுபவன்...வழக்கம்போல..தமிழன்...அவ்வளவுதான்.