Friday, March 27, 2009

ராமதாஸ் தன்மானம் இல்லாதவரா?

பா.ம.க., அ.தி.மு.க., வுடன் கூட்டணி என அறிவித்தப் பின்..கலைஞர் பத்திரிகை நிருபர்களுக்கு அளித்த பேட்டியில்..

8-7-01 அன்று அ.தி.மு.க., அணியில் இருந்த ராமதாஸ் பத்திரிகைக்கு பேட்டி அளித்தார்...அதில்...தேர்தலுக்கு முன் என் ஆதரவு வேண்டிய அம்மா..தலைமைச்செயலகத்தில்..என்னை ஒரு மணி நேரம் காக்கவைத்தபின் அழைத்தார்.முதல்வர் என்ற மமதையில் ..நாற்காலியில் அமர்ந்தபடியே..என்னை சந்தித்தார்.என் பேச்சை சுருக்கமாக முடித்துக் கொண்டு கிளம்பிவிட்டேன்.

கருணாநிதியுடன் நான் பேச நினைக்கும் போதெல்லாம்..விஷயம் கேள்விப்பட்டதும் கௌரவம் பார்க்காமல் அவரே லைனில் வந்து பேசுவார்.எனது சௌகரியத்தைக் கேட்டு நேரம் ஒதுக்குவார்.அந்த நாகரிகம் தெரியாத மனிஷியோடு இனியும் அரசியல் பண்ன எந்த தன்மான தலைவனும் முன்வரமாட்டார்.

இப்போது கலைஞர்...

நாகரிகம் தெரியாத மனிஷியுடன் அரசியல் பண்ண தன்மானம் உள்ளவன் முன்வரமாட்டான்..என்று பேட்டி கொடுத்த ராமதாஸ் இப்போது எங்கே இருக்கிறார். தன் மகனின் அமைச்சர் பதவி போய் விடக்கூடாது என்பதற்காக , காங்கிரஸோடு கூட்டணி என கடைசி வரை ஏமாற்றி வந்தது யார்?

இப்போது நாம்..

இதே ராமதாஸ் முன்னர் தி.மு.க. கூட்டணியிலிருந்து வெளியே வந்தபோது...'கலைஞரிடம் போனால் கோவணத்தைக் கூட கழட்டிக்கொண்டு விட்டு விடுவார் என்றாரே..அதைச் சொல்ல கலைஞர் ஏன் மறந்தார்?

கலைஞர் உள்பட...அரசியல்வாதிகள் கூட்டணிக்கு தகுந்தவாறு பேசக்கூடியவர்கள்தானே...

ஏமாறுபவன்...வழக்கம்போல..தமிழன்...அவ்வளவுதான்.

7 comments:

*இயற்கை ராஜி* said...

:-)

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

(:--:)=1

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி இயற்கை

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி ஜோதிபாரதி

மணிகண்டன் said...

அரசியல் ஒரு குடும்பம் மாதிரி. அப்பப்ப அடிச்சுப்போம், அப்புறம் சேர்ந்துடுவோம். குடும்ப பிரச்சனைய பத்தி நீங்க ஏன் எழுதறீங்க ? நீங்களும் கூட்டா ?

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி
மணிகண்டன்

ILA (a) இளா said...

மானம் கெட்ட பொழப்புக்கு நாம வாக்களிப்போம். அதுதான் சனநாயகம்