Thursday, April 2, 2009

பா.ம.க., வின் கொள்கையை தெரிந்துக் கொள்ளுங்கள்...

ஒரு கூட்டணியில் இருந்து வெற்றி பெற்று..அதன் சுகங்களை அனுபவித்து விட்டு..அடுத்த தேர்தலில் ஆதாயம் கிடைக்கும் கட்சிக்கு மாறுவதை வழக்கமாகக் கொண்டது பா.ம.க.,

ராமதாஸால் 1980 ல் உருவாக்கப்பட்ட வன்னியர் சங்கம்...9 ஆண்டுகள் கழித்து பாட்டாளி மக்கள் கட்சி என்ற அரசியல் கட்சியாக மாறியது.1989, 1991 ஆம் ஆண்டுகளில் நடந்த மக்களவை தேர்தல்களில் முறையே 26, 31 தொகுதிகளில் தனித்து போட்டியிட்டு...ஒரு இடத்தில் கூட வெற்றி பெறாது படு தோல்வியடைந்தது.

1991ஆம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் பண்ருட்டி தொகுதியில் மட்டும் வெற்றி பெற்ற இக்கட்சி போட்டியிட்ட இடங்கள் 194.

1996ல் மக்களவைக்கும்...சட்டசபைக்கும் ஒன்றாக தேர்தல் நடந்தது.வாழப்பாடி கட்சியுடன் கூட்டணி அமைத்தார் ராமதாஸ்.பா.ம.க., சார்பில் 4 எம்.எல்.ஏ.,க்கள் மட்டுமே வெற்றி பெற்றனர். மக்களவைக்கு பூஜ்யம்.

கூட்டணியில் சேர்ந்தால்தான் ஓடும் என்பதை புரிந்த்க் கொண்ட பா.ம.க.,1998ல் மக்களைக்கு அ.தி.மு.க., பா.ஜ.க., உடன் சேர்ந்து 5 தொகுதிகளில் போட்டியிட்டு 4ல் வென்றது.முதன்முறையாக நாடாளுமன்றத்தில் நுழைந்து..அமைச்சரவையிலும் இடம் பிடித்தது.

அடுத்த ஆண்டே..தி.மு.க.,உடன் கூட்டணி வைத்து மக்களவை தேர்தலில் 8 ல் 5 ஐ வென்றது.மீண்டும் சிலருக்கு அமைச்சர் பதவி.

2001 சட்டசபை தேர்தலில் மீண்டும் அ.தி.மு.க.உடன் கூட்டணி.27 இடங்களில் போட்டி..20 இடங்களில் வெற்றி.

2004ல் மீண்டும் தி.மு.க., 6ல் போட்டி 6 லும் வெற்றி..அமைச்சர் பதவி. கூட்டணி பேரத்தில் ராஜ்யசபா இடம்...அன்புமணி அமைச்சர்.

2006ல் சட்டசபை தேர்தல்...மறந்துபோய் தி.மு.க., கூட்டணியிலேயே இருந்து விட்டது.

2009 நாடாளுமன்ற தேர்தல்..அ.தி.மு.க., கூட்டணி..வழக்கம் போல் மகனுக்கு அடுத்த ஆண்டு ராஜ்ய சபா இடம் பேரம்.

பா.ம.க., கூட்டணி விஷயத்தில் அணி தாவுவதை தனது கொள்கையாகக் கொண்டுள்ள கொள்கை மாறா கட்சி.

8 comments:

ttpian said...

தமிழன் உண்மையில் சோம்பேறி!
தூங்கும் பிறவி....
யார் வேண்டுமானாலும்,கொள்ளை அடிக்கலாம்!
திருப்பி அடிக்கமாட்டான்!
மிதித்தவன் காலை வணங்குவான்!

T.V.ராதாகிருஷ்ணன் said...

//ttpian said...
தமிழன் உண்மையில் சோம்பேறி!
தூங்கும் பிறவி....
யார் வேண்டுமானாலும்,கொள்ளை அடிக்கலாம்!
திருப்பி அடிக்கமாட்டான்!
மிதித்தவன் காலை வணங்குவான்!//

:-))))

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

உண்மை தானுங்களே!

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி ஜோதிபாரதி

அரியாங்குப்பத்தார் said...

தமிழ்நாட்டில் அரசியல் பற்றி பேசினாலே காதை பொத்திக்கொள்ளும் படித்த முட்டாள்களே அதிகம். இந்நிலையில் இணையத்தில் அரசியல் பேசும் தங்களை பாராட்டுகிறேன்.

பொதுவாக தமிழ்நாட்டில் படித்துவிட்டு (அறிவாளிகள்) அரசியல் பேசுபவர்கள் அனைவரும் பா.ம.க. தேர்தலுக்குத் தேர்தல் கூட்டணி மாறுவது பற்றியும், அது ஒரு சாதிக்கட்சி, மரம்வெடி கட்சி, என... பல அடையாளங்களோடு பேசி தங்களுடைய அரசியல் அறிவை வெளிப்படுத்துகிறார்கள்.

பா.ம.க.-வை மட்டும் குறைகூறி பேசுபவர்கள் மற்ற கட்சிகளின் அரசியல் கொள்கைகளைப் பற்றியோ, கொண்ட கொள்கைகளுக்கு எதிராகவே அவர்கள் செயல்படுவது பற்றியோ, அவர்களும் தேர்தலுக்குத் தேர்தல் கூட்டணிகளை மாற்றிக்கொண்டது பற்றியோ யாரும் வாயை திறப்பதில்லை...

ஒரு குறிப்பிட்ட கட்சியில் இருந்துகொண்டு பா.ம.க-வை விமர்சிப்பவர்கள் தங்களை அடையாளப்படுத்திக்கொண்டு பிறரை விமர்சிக்க வேண்டும்.

பெரும்பாலும் பா.ம.க.-வைப் பற்றி எதிர்மறையான கருத்தைச் சொல்பவர்கள் வன்னியரல்லாத பிறசாதியினராக இருக்கிறார்கள், அல்லது தமிழரல்லாதவர்களாக இருக்கிறார்கள்.

வன்னிய சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் பா.ம.க.வை விமர்சிக்கிறார்கள் என்றால் அவர் தான் சார்ந்த கட்சித் தலைமையை குளுர்விக்கவும், அல்லது அவர்களை அண்டிப்பிடித்து பிழைப்பு நடத்துபவர்களாக இருக்கிறார்கள்...

தமிழ்நாட்டில் தேர்தல் பாதையை தேர்ந்தெடுத்து ஓட்டுப்பொறுக்க செல்பவர் யாரும் பிற கட்சியை விமர்சிக்க தகுதியில்லை...

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி அரியாங்குப்பத்தார்
பாராபட்சமில்லாமல்தான் நான் எல்லாக் கட்சிகள் பற்றியும் எழுதி வருகிறேன்..நீங்கள் எனது அரசியல் பதிவுகள் எல்லாம் படித்தவராயிருந்தால் உங்களுக்கு அது தெரிந்திருக்கும்.

ராம கிருஷ்ணன் said...

//// தமிழ்நாட்டில் அரசியல் பற்றி பேசினாலே காதை பொத்திக்கொள்ளும் படித்த முட்டாள்களே அதிகம். இந்நிலையில் இணையத்தில் அரசியல் பேசும் தங்களை பாராட்டுகிறேன்.

பொதுவாக தமிழ்நாட்டில் படித்துவிட்டு (அறிவாளிகள்) அரசியல் பேசுபவர்கள் அனைவரும் பா.ம.க. தேர்தலுக்குத் தேர்தல் கூட்டணி மாறுவது பற்றியும், அது ஒரு சாதிக்கட்சி, மரம்வெடி கட்சி, என... பல அடையாளங்களோடு பேசி தங்களுடைய அரசியல் அறிவை வெளிப்படுத்துகிறார்கள்.

பா.ம.க.-வை மட்டும் குறைகூறி பேசுபவர்கள் மற்ற கட்சிகளின் அரசியல் கொள்கைகளைப் பற்றியோ, கொண்ட கொள்கைகளுக்கு எதிராகவே அவர்கள் செயல்படுவது பற்றியோ, அவர்களும் தேர்தலுக்குத் தேர்தல் கூட்டணிகளை மாற்றிக்கொண்டது பற்றியோ யாரும் வாயை திறப்பதில்லை...

ஒரு குறிப்பிட்ட கட்சியில் இருந்துகொண்டு பா.ம.க-வை விமர்சிப்பவர்கள் தங்களை அடையாளப்படுத்திக்கொண்டு பிறரை விமர்சிக்க வேண்டும்.

பெரும்பாலும் பா.ம.க.-வைப் பற்றி எதிர்மறையான கருத்தைச் சொல்பவர்கள் வன்னியரல்லாத பிறசாதியினராக இருக்கிறார்கள், அல்லது தமிழரல்லாதவர்களாக இருக்கிறார்கள்.

வன்னிய சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் பா.ம.க.வை விமர்சிக்கிறார்கள் என்றால் அவர் தான் சார்ந்த கட்சித் தலைமையை குளுர்விக்கவும், அல்லது அவர்களை அண்டிப்பிடித்து பிழைப்பு நடத்துபவர்களாக இருக்கிறார்கள்...////


அரியாங்குப்பத்தார் அவர்களின் கருத்து நூற்றுக்கு நூறு சதம் சரியானது. அவரின் கருத்தை அப்படியே வழி மொழிகிறேன்.

மேலும் பாமகாவை எதிர்த்து பதிவிடுபவர்கள் ஒன்று திமுகாவின் அதிதீவிர சப்போர்டறாய் இருப்பார்கள் அல்லது மிக நன்றாக எழுதும் திறமை உடைய தலித் சமூகத்தினராய் இருப்பார்கள்.
ஆனால் பாமகா பின்னணி உள்ளவர்கள் இணையத்தில் எழுதும் திறமை அற்றவராக உள்ளார்கள். அல்லது
எழுதுவதற்கு சோம்பேறிதனம் உடையவர்களாக இருக்கிறார்கள்.

இதுவும் உண்மை.

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி Rama Krishnan