ஒன்று எங்கள் ஜாதியே.....ஒன்று எங்கள் நீதியே.... நம்மால் முடியாதது....யாராலும் முடியாது.. யாராலும் முடியாதது....நம்மால் முடியும்
Sunday, April 5, 2009
தயாநிதி மாறன் - மத்திய சென்னை வேட்பாளர் - சிறு குறிப்பு வரைக
நேற்று கலைஞர் தி.மு.க., வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டார்.அதன்படி ..எதிர்ப்பார்த்தபடி..தயாநிதி மாறன், இளங்கோவன்,பாலு, நெப்போலியன்,ராஜா,ரித்தீஷ், ஆகியவர்கள்..கிட்டத்தட்ட கேட்ட தொகுதியை பெற்றுள்ளனர்.தனக்கு எந்த தொகுதி வேண்டும்..என மனு கொடுக்காதவர்...அவரின் ஆதரவாளர்கள்..அவர் தரப்பில்..மனு கொடுத்ததை வைத்து மதுரை வேட்பாளர் தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கிறார்.
இந்த தேர்வுக்கு...3 நாட்கள்..540 பேரிடம்..நேர்காணல் தேவையா? நமக்கு தெரியவில்லை.
பாவம் கலைஞர்...அவரை நீண்ட நேரம்..இல்லை..இல்லை..நீண்டநாட்கள் ..அவர் உடல் நிலை சரியில்லாத நேரத்தில் மீண்டும் உட்கார வைத்து விட்டார்கள்.
சரி...தலைப்புக்கு வருவோம்...
வேட்பாளர்களின் வாழ்க்கை குறிப்பை..மாறனின் குடும்ப தினசரியில் எழுதி உள்ளார்கள்.
அதில்..தயாநிதி மாறன் பற்றி...
1966ஆம் ஆண்டு டிசம்பர் 5 ல் பிறந்தார்.லாயோலா கல்லூரியில் பி.ஏ.,(பொருளாதாரம்) படித்தார்.1994ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் திருமணம் ந்டந்தது.மனைவி பிரியா தயாநிதி மாறன்.இவர்களுக்கு ஒரு
மகள், ஒரு மகன் உள்ளனர். என்றெல்லாம்...ஒரு பெரும் தலைவருக்கான சுய சரிதம் பாடியுள்ளனர்.
மேலும்..ஒன் இந்தியா திட்டத்தை அறிமுகப்படுத்தியவர்..தகவல் தொடர்பு மற்றும் தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சராக பணியாற்றியுள்ளார்.. என்றெல்லாம் புகழ் பாடப்பட்டுள்ளது..
மாணவ சமுதாயமே...உழைக்கும் இளைஞர்களே..இவர் பற்றிய விவரங்களை தெரிந்துக் கொள்ளுங்கள்..
யார் கண்டது...நாளைக்கே இவர் சம்பந்தமான கேள்விகள்...நீங்கள் எழுதப்போகும் பரிட்சைகளில் கேட்கக்கூடும்.
உதரணத்திற்கு...1966..டிசம்பர் 5 முக்கியமான தினம் ..அது என்ன ..என்று கேட்டால்...உடனே..தயாநிதி பிறந்த நாள் என்ற ஞாபகம் உங்களுக்கு வரவேண்டும்.
Subscribe to:
Post Comments (Atom)
10 comments:
//உதரணத்திற்கு...1966..டிசம்பர் 5 முக்கியமான தினம் ..அது என்ன ..என்று கேட்டால்...உடனே..தயாநிதி பிறந்த நாள் என்ற ஞாபகம் உங்களுக்கு வரவேண்டும்.//
மறக்க முடியுமா?
பாபர் மசூதி இடித்த நாளுக்கு முதல் நாள்!
தயாநிதி மாறன் பிறந்ததற்கு அடுத்தநாள் பாபர் மசூதி இடிக்கப்பட்டது என்று தெரியவேண்டும்
//உதரணத்திற்கு...1966..டிசம்பர் 5 முக்கியமான தினம் ..அது என்ன ..என்று கேட்டால்...உடனே..தயாநிதி பிறந்த நாள் என்ற ஞாபகம் உங்களுக்கு வரவேண்டும்//
மதுரை தினகரன் அலுவலக எரிப்பில் மூவர் வெட்டிக் கொள்ளப்பட்டது வரலாற்றில் பதியப்படாதா ?
அது அழகிரி பற்றிய சரிதத்தில் வரும்
அவரை பற்றி பெரு குறிப்பே வரையலாம்.. :)))
வருகைக்கு நன்றி கார்க்கி...
குறித்த நேரத்தில் ஊர் போய் சேர்ந்தீர்களா?
பதிவை பார்த்ததும் என் கண்கள் பனித்தன இதயம் இனித்தது
வருகைக்கு நன்றி அக்னி பார்வை
கிழம் அடிக்கடி சொல்லும்...
உயிர் தமிழுக்கு உடல் மண்னுக்கு....
எனக்கு தெரிந்து மயிரைக்கூட கொடுத்து பார்த்ததில்லை
வருகைக்கு நன்றி ttpian
Post a Comment