Tuesday, September 23, 2008

2011ல் யார் முதல்வர் - அதிபுத்திசாலி அண்ணாசாமியின் சந்தேகம்

அடுத்த முதல்வராக யார் வருவார் என அரசியலில் அரைவேக்காடு அண்ணாசாமிக்கு தினம் தினம் சந்தேகம் வலுக்கிறதாம்.
அவர் பட்டியல்படி கீழ்கண்டவர்கள் அப்பதவி தனக்குத்தான் என எண்ணுகிறார்களாம்.
1.கலைஞர் (ஸ்டாலின்).,அன்பழகன் 2ம் இடம் கிடைத்தால் போதுமாம்.
2.ராமதாஸ் (அன்புமணி)
3.காங்கிரஸ் அனைத்து கோஷ்டிகளும் அவரவர் தலைவரை எதிர்ப்பார்க்கின்றனர் .
(சந்துலே சிந்து பாட நினைக்கும் சிதம்பரம்)
4.விஜயகாந்த்
5.சரத்குமார்
6.திருமாவளவன்
7.கார்த்திக்(முதலில் அடுத்தவருஷம் எம்.பி. பின்2011ல் முதல்வர்)
2011க்குள் இப்பட்டியல் மேலும் நீடிக்கக்கூடுமாம்.
என்ன செய்வது என அறியாது தன் தலைவன் சொல்வதை எதிர்ப்பார்த்துக்கொண்டிருக்கும் ரஜினி ரசிகர்கள் வேறு.

18 comments:

சின்னப் பையன் said...

எங்கள் தலைவர் ஜே.கே.ரித்தீஸையும், புதுசா களத்திலே இறங்கியிருக்கிற வடிவேலையும் விட்டுட்டீங்க... ச்சீ.. நீங்க ரொம்ப மோசம்....

manikandan said...

நானு?

குடுகுடுப்பை said...

நான் பதிவு எழுதுவதன் நோக்கமே என்றாவது ஒரு நாள் அந்த நாற்காலியப் பிடிக்கத்தான் அய்யா, உங்கள் வாக்கை எனக்கே அளியுங்கள்

T.V.ராதாகிருஷ்ணன் said...

//ச்சின்னப் பையன் said...
எங்கள் தலைவர் ஜே.கே.ரித்தீஸையும், புதுசா களத்திலே இறங்கியிருக்கிற வடிவேலையும் விட்டுட்டீங்க... ச்சீ.. நீங்க ரொம்ப மோசம்....//


ஒருவர் கழகக் கண்மணி..இன்னொருவர் கண்மணி ஆகப்போகிறவர்..தேவையில்லாமல் நீங்கள் குழப்பத்தை உண்டாக்குகிறீர்கள் சத்யா...

T.V.ராதாகிருஷ்ணன் said...

//அவனும் அவளும் said...
நானு?//
:-)))))

T.V.ராதாகிருஷ்ணன் said...

//குடுகுடுப்பை said...
நான் பதிவு எழுதுவதன் நோக்கமே என்றாவது ஒரு நாள் அந்த நாற்காலியப் பிடிக்கத்தான் அய்யா, உங்கள் வாக்கை எனக்கே அளியுங்கள்//


யாருப்பா அங்கே..உடனே நம்ம குடுகுடுப்பைக்கு மதுரைக்கு ஒரு டிக்கட் ரிசர்வ் பண்ணுங்க..

வந்தியத்தேவன் said...

ஜெயலலிதாவை விட்டுவிட்டீர்கள்.

T.V.ராதாகிருஷ்ணன் said...

//வந்தியத்தேவன் said...
ஜெயலலிதாவை விட்டுவிட்டீர்கள்.//


ரத்தத்தின் ரத்தங்களுக்கு அவர் நிரந்தர முதல்வர்...அதனால் 2011ல் முதல்வர் என்றால் அடிக்க வருவார்கள்.
வருகைக்கு நன்றி

குடுகுடுப்பை said...

இனிமேலும் யாரும் இதைப்ப்ற்றி வெட்டியாக எழுத மாட்டீர்கள் என நம்புகிறேன்

T.V.ராதாகிருஷ்ணன் said...

//வருங்கால முதல்வர் said...
இனிமேலும் யாரும் இதைப்ப்ற்றி வெட்டியாக எழுத மாட்டீர்கள் என நம்புகிறேன்//

கடைசியாக உள்ளே நுழைந்திருக்கும் உங்கள் பெயர் வடிவேலுவா?

Anonymous said...

நான் யார் என வெளிக்காட்டிக்கொள்ளாத நான்தான் முதல்வர்.எப்போ வருவேன்..எப்படி வருவேன்னு சொல்லமுடியாது..ஆனால் கண்டிப்பா வருவேன்

T.V.ராதாகிருஷ்ணன் said...

:-))))))

கோவி.கண்ணன் said...

எல்லோருக்கும் ஒரு நாள் முதல்வர் ஆகத்தான் ஆசை இருக்கும், அட்லீஸ்ட் ஒரு நாள் முதல்வர் ஆகுறார்களான்னு பார்ப்போம், அதற்கு ஷங்கர் அந்த படத்தின் பகுதி 2 க்கு திரைக்கதை ஆயத்தம் செய்யவேண்டும்.

:)

T.V.ராதாகிருஷ்ணன் said...

//கோவி.கண்ணன் said...
எல்லோருக்கும் ஒரு நாள் முதல்வர் ஆகத்தான் ஆசை//

முதல்வர் பதவிக்கு ஏன் இப்படி ஒரு நிலை வந்தது கோவி

Anonymous said...

வருங்கால முதல்வரை மதுரை தான் தீர்மானிக்கும் போல இருக்கிறதே...

T.V.ராதாகிருஷ்ணன் said...

//Anonymous said...
வருங்கால முதல்வரை மதுரை தான் தீர்மானிக்கும் போல இருக்கிறதே...//

வடிவேலுவா..விஜய்காந்த்தையா,அழகிரியையா..அல்லது முருகன் இட்லி கடை திறப்பாளரையா..யாரை என்று மதுரை தீர்மானிக்கும்...பாவம் மதுரை

T.V.ராதாகிருஷ்ணன் said...

பட்டியலில் லேட்டஸ்ட் அட்டிஷன் 'குருவி'விஜய்

சாமி யார்? said...

வணக்கம் நண்பர்களே, அடுத்த மாதம் நடைபெற இருக்கும் தேர்தலில் யார் ஜெயிப்பார் என்றும் யார் அடுத்த தமிழக முதல்வர் ஆவார் என்றும் நாம் ஆவலாக இருப்போம். அப்படி உங்களுக்கு ஆர்வம் இருந்தால் இங்க http://saamiyaar.blogspot.com/2011/03/blog-post_15.html வாங்க. துல்லியமான விபரங்களுடன். படிச்சிட்டு உங்களுக்கு தெரிந்தவர்களிடமும் கூறுங்கள். நன்றி (நீங்க படிச்சதுக்கு)