வங்கி ஒன்றில் வேலை செய்த்க் கொண்டிருந்தான் அவன்.
கனவில்கூட ..தான் அரசியலில் நுழைவோம் என அவன் எதிர்ப்பார்க்கவில்லை.
அதுவும்..பொருளாதார மேதைகளே..திண்டாடும்..பணவீக்கம் அதிக மாகிக்கொண்டிருக்கும் நாட்டில்..தான் நிதி அமைச்சர் ஆவோம் என்று அவனால் எப்படி எதிப்பார்த்திருக்க முடியும்.
கட்சியின் தலைவரும்,பிரதமரும் அவனைக்கூப்பிட்டு 'வங்கியில் நீ வேலை செய்ததால்..பொருளாதாரம் பற்றி உனக்குத் தெரியும்'என்றனர்.
'வங்கியில் வேலை செய்தால்...எல்லாம் தெரிந்து விடுமா..'என மறுத்தான்.
'தமிழகத்தைப்பார்...மின்சார இலாக்காவில் வேலை செய்தவர்..ஆற்காட்டார்..என்ற காரணத்தால் தான் அவருக்கு மின்துறை அமைச்சர் பதவி தரப்பட்டது.அதை அவர் எவ்வளவு அழகாக நிர்வகித்துக் கொண்டிருக்கிறார்(???!!!)..அதுபோல நீயும் நிதித்துறையை செவ்வனே கவனித்துக் கொள்ளமுடியும்"என்றார் பிரதமர்.
பிரதமர் சொல்லில் இருந்த நியாயத்தை உணர்ந்து அவன் நிதி அமைச்சர் ஆனான்.
'ஆற்காட்டாரை பின்பற்றி நாட்டில் அனைவருக்கும் சம்பளவெட்டு செய்தால் போயிற்று' என்ற எண்ணத்தில்.
4 comments:
ஹாஹா... சூப்பர்...
நான் வேலை செய்யாமே வெட்டியா பொழுதுபோக்கிட்டிருக்கேன். அப்போ தையல்காரனாகவோ, ஆபரேஷன் செய்யும் டாக்டராகவோ எனக்கு வேலை கிடைக்குமா???
//ச்சின்னப் பையன் said...
ஹாஹா... சூப்பர்...//
நன்றி
//ச்சின்னப் பையன் said...
நான் வேலை செய்யாமே வெட்டியா பொழுதுபோக்கிட்டிருக்கேன். அப்போ தையல்காரனாகவோ, ஆபரேஷன் செய்யும் டாக்டராகவோ எனக்கு வேலை கிடைக்குமா???//
பதிவு எழுதும்போதே தெரிகிறது..வெட்டியாய் இருப்பது..அதனால் உங்களுக்கு கொடுக்க நினைக்கும் வேலையை வேறு ஒருவருக்கு கொடுக்க முடிவு செய்யப்படும் என அதிகாரப் பூர்வ தகவல் :-)))))
Post a Comment